அசோக வனத்தில் சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்டேன் சீதையை என்று ராமருக்கு பதிலளித்தார். சீதை உயிரோடும் கற்போடும் இருப்பதை ராமருக்கு தாமதம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும் என்பதே அனுமனின் நோக்கம். எனவே கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால் என்ற வார்த்தையை முதலில் சொல்லி விட்டு, பிறகு கற்புடன் இருப்பதையும், யார் சொன்னதையோ கேட்காமல், தன் கண்களால் பார்த்ததையும் உறுதிப்படுத்தினார். இதனால், அனுமனுக்கு சொல்லின் செல்வர் என்ற சிறப்பு பெயர் உண்டானது.
பார்த்தது சீதை தான் என்று அனுமனுக்கும் சந்தேகம் வரக் கூடாது, அனுமன் சீதையை தான் பார்த்தான் என்று இராமனும் நம்ப வேண்டும்.
தெளிவு படுத்தவது கம்பன். . .
சொல்லில் விளையாடுகிறான்.
‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்;
கண்டனென் = நான் கண்டேன்
கற்பினுக்கு அணியை = கற்புக்கு அணிகலமாய் திகழும் சீதையை
கண்களால் = கண்களால். அது என்ன கண்களால் ? எல்லாரும்
கண்களால் தான் பார்ப்பார்கள். அது தான் முதல் வார்த்தையிலேயே சொல்லியாச்சே "கண்டெனன்" அப்படின்னு.
சொல்லுவது கம்பன்.
பயனிலாத சொல்லை சொல்லுவானா ?
அவள் கற்பின் அணி என்பதை அவளுடைய கண்களை கொண்டு நான் கண்டு கொண்டேன் என்று அர்த்தம்.
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
கண்டெனன் கற்பினுக்கு அணியினை (அவளின்) கண்களால் என்று பொருள் கொள்ள வேண்டும்.
தெண் = தெளிந்த
திரை அலைகடல் = சுருள் சுருளாக அலைகளை கொண்ட கடல்
இலங்கைத் தென் நகர் = இலங்கை என்ற தெற்கில் உள்ள நகரில்
அண்டர் நாயக = தேவர்களின் நாயகனே
இனி, துறத்தி = இனி துறந்துவிடு
ஐயமும் = சந்தேகத்தையும்
பண்டு உள துயரும் = பழைய துயரையும்
என்று, அனுமன் பன்னுவான்; = என்று அனுமன் சொல்லுவான்

கம்பனை தான் இதற்கு புகழவேண்டும்...
ReplyDelete