வாழ்க தமிழ்!

Saturday, August 1, 2015

அடுக்குத்தொடர் - தமிழிலக்கணம் அறிவோம்

பாமரன்  /  at  12:01 PM  /  2 கருத்துரைகள்

விளக்கம்:01

ஒரு வாக்கியத்தில் வந்த சொல்லே மீண்டும் வருவது, அடுக்குத் தொடர் ஆகும்.

விளக்கம்:02

செய்யுளிலும் வழக்கிலும் அசைநிலைக்கும், விரைவு வெகுளி (ஆத்திரம்) உவகை அச்சம் அவலம் ஆகிய பொருள் நிலைகளை உணர்த்தும் வண்ணமும், யாப்பிலக்கணத்தின்படி அல்லது பொதுவாக இசையை நிறைவு செய்யும் பொருட்டும் ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்

விளக்கம்: 03

பேசுவோனுக்குத் திடீர் என்று ஓர் உணர்ச்சி ஏற்பட, வாக்கியத்தில் முன்னும் பின்னும் வெவ்வேறு சொற்களை அமைக்காமல், ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப இருமுறை, மும்முறை கூறுதல் உண்டு. இதுவே அடுக்குத் தொடர் எனப்படும். விரைவு துணிவு போன்ற பொருள் காரணமாக அடுக்குத் தொடர் அமையும் என்கிறார் தொல்காப்பியர் (தொல். சொல். 421, 424).

எடுத்துக்காட்டு :

 1. புலி, புலி என்று ஒருவன் கத்தினான்.

இதில் புலி புலி என்பது அடுக்குத் தொடர் ஆகும்.
புலி என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் ஒரு பொருளை மட்டும் தரும்.

     2.அழ. வள்ளியப்பா பாடல்

கூட்டம் கூட்டமாகவே குருவி பறந்து சென்றிடும்
குவியல் குவியலாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும்
குலை குலையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும்
மந்தை மந்தையாகவே மாடு கூடி மேய்ந்திடும்
சாரை சாரையாகவே தரையில் எறும்பு ஊர்ஊர்ந்திடும்

கரணியம்எடுத்துக்காட்டுகள்
அசைநிலைஅன்றே அன்றே
விரைவுப்பொருள்போ போ போ
வெகுளிவிடு விடு விடு
உவகைவாருங்கள் வாருங்கள்
அச்சம்தீத்தீத்தீ
அவலம்வீழ்ந்தேன் வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
இசைநிறை                     வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!                                                   

திரையிசைப் பாடல்களில் அடுக்குத்தொடர்:பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Saturday, August 1, 2015

2 comments:

 1. ஐயா வணக்கம்.

  உழைப்புடன் கூடிய தொகுப்பு.

  எல்லா நிலையில் இருப்பவருக்கும் அறிதற்கேற்றவகையில் தமிழி இலக்கணங்கள் இதுபோலக் கற்பிக்கப் பட வேண்டும்.

  தொடர்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்... நன்றி அய்யா.

   Delete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.