வாழ்க தமிழ்!

Monday, August 3, 2015

ஓஷோ சொன்ன கதை: திருடன் அடைந்த புத்தநிலை

பவுத்த ஞானி நாகார்ஜூனர் பரிநிர்வாணமாக, ஒரேயொரு மரப்பிச்சைப் பாத்திரத்துடன் வாழ்ந்தவர். அவரை பேரரசர்களும் அரசிகளும் போற்றினர்.

அவர் ஒருமுறை தலைநகரத்துக்குச் சென்றபோது, நாட்டின் அரசி, அவரது கால்களைப் பணிந்து, நீங்கள் வைத்திருக்கும் மரப்பிச்சைப்பாத்திரத்தைப் பார்த்து எனக்கு மிகுந்த சங்கடமாக இருக்கிறது. நீங்கள் ஞானிகளுக்கெல்லாம் ஞானி. உங்களுக்குப் பரிசளிப்பதற்காகவே நான் தங்கத்தில் செய்த திருவோட்டைப் பரிசளிக்கிறேன். வைரங்களும் வைடூரியங்களும் பதிக்கப்பட்ட பாத்திரம் அது. தயவுசெய்து எனது பரிசை மறுதலிக்காதீர் என்றார்.

நாகார்ஜூனர் அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டார். ராணிக்கோ அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நாகார்ஜூனர், தனது மரப்பிச்சைப்பாத்திரத்தை அரசிக்குக் கொடுத்து இதை வைத்துக்கொள் என்று ஆணையிட்டார்.

நாகார்ஜூனா அந்தப் பொன்னாலான திருவோட்டை வாங்கி வைத்துக்கொண்டார். அதன் மகத்துவத்தைக் கூர்ந்து கூடப் பார்க்கவில்லை. அரண்மனையை விட்டு வெளியே வந்த நாகார்ஜூனரின் தங்கப் பாத்திரத்தை ஒரு திருடன் பார்த்தான். அவன் தந்திரமும் புத்திசாலித்தனமும் வாய்ந்த தேசமே வியக்கும் திருடன்.

தூக்கி எறியப்பட்ட பொன் திருவோடு

அந்தத் திருடன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

“ எத்தனை அரிதான பரிசு இது. வைரம், வைடூரியம் எல்லாம் பதித்த பிச்சைப்பாத்திரம் . எனது வாழ்க்கையில் எத்தனையோ அழகிய பொருட்களைப் பார்த்துள்ளேன். ஆனால் இதுபோன்ற அபூர்வத்தைப் பார்த்ததேயில்லை. இந்த நிர்வாணத் துறவியால் இதை எப்படிப் பாதுக்காக்க முடியும். யாரோ ஒருவருக்குப் போகப்போவதை நானே திருடினால் என்ன?” என்று நினைத்தான்.

நாகார்ஜூனரை அந்தத் திருடன் பின்தொடர்ந்தான். நாகார்ஜூனருக்குத் தன்னைத் தொடரும் திருடனின் காலடிச் சத்தம் கேட்டது. நாகார்ஜூனர் ஒரு பாழடைந்த கோயிலை அடைந்தார். அதற்கு சரியான கூரையும் இல்லை. கதவுகளும் இல்லை. பல சுவர்கள் குட்டிச்சுவர்களாக இருந்தன.

திருடன் கோயிலுக்கு வெளியே காத்திருந்தான். சில மணி நேரங்களிலேயே பொன்னாலான பாத்திரம் தன் கைவசப்பட்டு விடும் என்று நினைத்தான். திருடன் ஆசைப்பட்ட பொன்னாலான பாத்திரம் கோயிலுக்கு வெளியே தொப்பென்று வந்து விழுந்தது. திருடனுக்கோ அதிர்ச்சி.

நாகார்ஜூனர்தான் அந்த திருவோட்டை எறிந்திருந்தார். திருடனால் நம்பவே முடியவில்லை. இந்தத் துறவிக்குப் புத்தி பேதலித்துவிட்டதா என்று திருடன் நினைத்தான். அவன் திருடர்களிலேயே பலே திருடன். கவுரவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினான். நாகார்ஜூனரிடம் சென்று, “ ஐயா, உங்களிடம் எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இவ்வளவு அரிதான, விலைமதிப்பற்ற ஒரு பொருளைத் தூக்கி எறிந்துவிட்டீர்களே. உங்களது கால்களை நான் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன்” என்றான்.

நாகார்ஜூனர் சொன்னார். “உள்ளே வா. நான் அந்த பிச்சைப் பாத்திரத்தை வெளியே தூக்கிப்போட்டதனால்தான் நீ உள்ளே வர முடிந்தது.” என்றார்.

திருடன் விதித்த நிபந்தனை

அந்தத் திருடனுக்கு அவர் சொன்னது புரியவில்லை. அவன் நாகார்ஜூனரை உற்றுப் பார்த்தான். அவரது அமைதியை, அவரது ஆனந்த மனோநிலையைப் பார்த்து அவனுக்கு விந்தையாக இருந்தது. “ஐயா, உங்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. உங்களைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததேயில்லை. எவ்வளவு நிம்மதியுடன் இருக்கிறீர்கள். உங்களது மன ஒருமையை அடைவதற்கு எனக்கு சாத்தியம் உண்டா. உங்களது தனித்துவத்தையும், கருணையையும், விடுபட்ட நிலையையும் அடைவது எப்படி?” என்று கேட்டான். அத்துடன் ஒரு நிபந்தனையையும் திருடன் விதித்தான்.

“இதுவரை பார்த்த துறவிகள் அத்தனை பேரும் என்னுடைய திருட்டுத் தொழிலை நிறுத்தச் சொல்லியுள்ளனர். ஆன்மிக ரீதியாக என்னால் வளர்ச்சியடைய முடியாததற்குக் காரணம் என்னுடைய திருட்டுத் தொழிலே என்றும் சொல்லியுள்ளனர். அதை மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள். என்னால் அதை நிறுத்தவே முடியாது. அதுதான் என்னுடைய இயற்கை என்று கருதுகிறேன்.” என்றான்.

நாகார்ஜூனர் அந்தத் திருடனுக்குப் பதிலளித்தார். “இதுவரை நீ உண்மையான ஒரு துறவியைக் கூடப் பார்க்கவில்லையென்றே நான் சொல்வேன். அவர்கள் அனைவரும் முன்னாள் திருடர்களாக இருந்திருக்க வேண்டும். அப்படியில்லையெனில் அவர்கள் ஏன் உன்னுடைய தொழில் பற்றி கவலைப்பட வேண்டும்? நீ திருட்டை விடவேண்டாம். உன்னால் முடிந்ததை எவ்வளவு திறனுடன் செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய். ஒரு தொழிலில் நிபுணத்துவம் அடைவது நல்லதும்கூட” என்றார்.

நன்றாகத் திருடு

திருடனுக்கு மகத்தான அதிர்ச்சி. “என்ன மனிதர் நீங்கள். நல்லது எது? தீமை எது என்று நீங்கள் சொல்ல வேண்டாமா?” என்று கேட்டான்.

“இது சரி, இது தவறு என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ திருட விரும்பினால் திருடு. ஆனால் அதைச் செய்யும்போது விழிப்புடன் கவனி. நள்ளிரவில் திருடச் செல்லும்போது மிகுந்த விழிப்புணர்வுடன் கதவுகளையும், பூட்டுகளையும் திற. அப்படியும் உன்னால் திருட முடிந்தால் அதே விழிப்புணர்வுடன் இரு. ஏழு நாட்களுக்குப் பிறகு வா.” என்றார்.

ஏழு நாட்களுக்குப் பிறகு அந்தத் திருடன் வந்தான். நாகார்ஜூனரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். சன்னியாச தீட்சை அளிக்க வேண்டும் என்று நாகார்ஜூனரிடம் கோரினான்.

“திருட்டுத் தொழில் என்ன ஆனது?” என்று கேட்டார் நாகார்ஜூனர்.

“ நீங்கள் தந்திரமான ஆள். என்னால் முடிந்தவரை இருந்துபார்த்தேன். நான் விழிப்புடன் இருக்கும்போது என்னால் திருடவே முடியவில்லை. விழிப்புடன் இருக்கும்போது நான் திருடும் செயல் மொத்தமும் முட்டாள்தனமாகவும் அர்த்தமற்றதாகவும் உள்ளது. நான் என்ன செய்கிறேன், எதற்காக செய்கிறேன், நாளை நான் இறந்துபோய்விட்டால் இந்தச் சொத்தையெல்லாம் இப்படிச் சேர்த்து என்ன பயன்? என் தேவைக்கு மேலே நான் சம்பாதித்துவிட்டேன் என்று தோன்றியது.

கடந்த ஏழு நாட்களும் திருடச் சென்ற வீடுகளிலிருந்து வெறும் கையோடு திரும்பினேன். விழிப்புடன் இருப்பதை மிகவும் அழகாக உணர்கிறேன். அதை முதல்முறையாக ருசிக்கிறேன். அது மிகவும் சின்ன ருசிதான். அப்போதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய சுவையை அறிந்தவர் என்று உணர்ந்தேன். நீங்கள் நிர்வாணமாக இருந்தாலும் இந்த உலகின் அரசன் நீங்கள்தான் என்று உணர்ந்தேன். நீங்கள்தான் உண்மையான தங்கம். நாங்கள் இதுவரை பொய்யான தங்கத்துடன் விளையாடிக் கொண்டிருந்தோம் என்பதை உணர்ந்தேன்” என்றான்.

அந்தத் திருடன் நாகார்ஜூனரின் சீடனானான். புத்த நிலையை அடைந்தான்.

நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ் (http://tamil.thehindu.com)
பாமரன்  /  at  8:31 AM  /  1 கருத்துரை

1 கருத்து(கள்):

தொகைச் சொல் - விரித்தெழுதுதல் - தமிழிலக்கணம் அறிவோம்

பல கூறுகள் உள் அடங்கிய ஒரு சொல் தொகைச்சொல். ஒரு சொல்லின் கீழ் அடங்கும், வரையறுக்கப் பட்ட சில சொற்கள், தொகைச் சொற்கள் எனப்படும்.
தொகைச்சொல் என்றவுடன் வேற்றுமைத் தொகை ,வினைத்தொகை ,உவமைத்தொகை  என்று எண்ணிவிட வேண்டாம். தொகை என்னும் சொல்லுக்கு தொகுத்தல் என்று பொருள். தொகுத்து எழுதப்படும் சொல் தொகைச் சொல் எனப்படுகிறது.

உதாரணமாக முத்தமிழ் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதனை பிரித்து எழுது என்று மாணவர்களுக்கு உரைக்கும் பொழுது மூன்று+தமிழ் என்று எழுதுவர். ஆனால் ( அதனுள் உள்ள பொருளை ) விரித்தெழுது என்று கூறும்போது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று எழுதுவர்...
இவ்வாறான தொகைச் சொற்கள் தமிழில் பல உண்டு. தமிழிலக்கியங்களில் மட்டுமன்றி தமிழ் திரையிசைப்பாடல்களிலும், பேச்சு வழக்கிலும் இத்தொகைச் சொற்கள் காணப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு கொள்ள இதோ சில எடுத்துகாட்டுகள்...

இருவினை  -  நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை
இருதிணை   - உயர்திணை, அஃறிணை; அகத்திணை, புறத்திணை.
முத்தமிழ்  - இயல், இசை, நாடகம்.
முப்பால் – அறம்,பொருள், இன்பம்.
மூவிடம்  -  தன்மை, முன்னிலை, படர்க்கை.
மூவேந்தர்    - சேரர், சோழர், பாண்டியர்.
முக்கனி      -     மா, பலா, வாழை.
நாற்றிசை  - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
நானிலம்  -  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
ஐந்திணை  - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
ஐம்பால்  - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
ஐம்புலன்   - தொடு உணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்.
ஐம்பொறி- மெய், வாய், மூக்கு, கண், செவி.
ஐம்பூதம்  - நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு.
அறுசுவை-  இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உப்பு,, காரம்.

உங்களுக்கு தெரிந்தவற்றையும் உரைக்கலாம் கருத்துரைப் பெட்டியில்....

பாமரன்  /  at  7:26 AM  /  கருத்துரை இடுக

இயல்(கள்): , , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

Sunday, August 2, 2015

ஆடிப்பெருக்கும் பன்னிரு தமிழ் மாதங்களும்!

காவிரி நதி பாயும் மாவட்டங்களில் காலங்காலமாக "ஆடிப்பெருக்கு' விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கும் புதுப்புனல் கண்டு எங்கும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் கலந்து கொள்வார்கள்; புனித நீராடி மகிழ்வார்கள்.

ஒரு சமயம் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் ஆரூர் மன்னன் கந்தவேள், தன் பரிவாரங்கள் புடைசூழ காவிரியில் புனித நீராடினான். அறிஞர்களும் புலவர்களும் அவனுடன் சேர்ந்து நீராடினர்.

நீராடி முடித்ததும், ஆடி மாதத்தின் சிறப்பைப் பற்றி அறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது மன்னன் கந்தவேளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. உடனே, அங்கிருந்த புலவர்களை நோக்கி, ""அறிஞர் பெருமக்களே! உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன். தமிழ் மாதங்கள் பன்னிரண்டையும் (சித்திரை முதல் பங்குனி வரை) வரிசைப்படுத்தி, இலக்கண - இலக்கியச் சுவையுடன் ஒரு பாடலை இயற்ற வேண்டும். பாடலுக்குரிய பொருளையும் விளக்கமாகக் கூற வேண்டும். அப்பாடல் எல்லோர்க்கும் ஏற்படையதாகவும் இருக்க வேண்டும்''

என்றான்.

புலவர்கள் அக்கணமே பாடல் இயற்ற முனைந்தார்கள். அப்புலவர் கூட்டத்தினருள் "திருவாரூர் சொக்கலிங்கக் கவிராயர்' என்ற புலவர் இருந்தார். அவர், ""மன்னா! தாங்கள் கூறியபடியே நான் ஒரு பாடலை இயற்றியுள்ளேன்'' என்றார்.

மன்னன் உடனே, ""வேறு யாரேனும் பாடல் எழுதியுள்ளீர்களா?''

எனக் கேட்க, யாரும் வாயைத் திறக்கவில்லை. உடனே மன்னன் சொக்கலிங்கக் கவிராயரைத் தன் அருகே அழைத்து, அப்பாடலைச் பாடச்சொன்னார். புலவரும் பன்னிரு மாதங்கள் அமையப்பெற்ற அப்பாடலைப் பாடினார்.""மாதஞ்சித் திரைகடலைவை தனள்; நீ அன்பு

வை, கா, சி னம் சிறியாளை யானி பெருக்கும்

போது அம்பன் போராடினானையா வணியாய்ப்

புரட்டாதி ன்கலம் வெறுத்தாள்; ஐப்பசிஇல் என்றே

சாதனை செய் தேசினந்தாள்; கார்த்திகைக்கும் கொடைவேந்

தா, சகிமார் கழியார்; கோதையும் மாசிலாமல்

காதலுடன் சேர்வள் நல்லதிட்டம் உன் பங்கு னிப்பார்

கந்தன் எனும் கலியாண சுந்தரமா முகிலே!'' (தனிப்பாடல்)என்று பாடியவர், பதம் பிரித்தும் பாடிக்காட்டினார். இப்பாடலின் பொருள்: ""அழகிய தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் எனக் கூறத்தகுந்த மேகம் போன்று வாரி வழங்கும் கந்தவேள் என்ற கல்யாண சுந்தரம் என்ற கொடையாளியே! அழகு மிகுந்த உன் தலைவியானவள் உன் மீது கொண்ட அளவற்ற காதலாலே அச்சம் கொண்டு, மன்மதனின் முரசாகிய கடலை இகழ்ந்துரைத்தாள். நீ அவள் மீது அன்பு வைத்துக் காத்தருள்வாயாக. அவள் மிகவும் இளமையுடையவள். பிரிவுத் துன்பத்தை மிகுதிப்படுத்துபவனாகிய மலர் அம்புகளையுடைய மன்மதனோடு அவள் போராடுகிறாள். அதனால் ஐயனே, அவள் விரகதாபம் கொண்டு பாம்பு போல உருண்டு, புரண்டு கிடக்கிறாள். பசியில்லை என்று காரணம் கூறி உண்ண மறுத்து, பிடிவாதத்துடன் கோபம் கொண்டு உண்ணும் கலத்தையும் வெறுத்து ஒதுக்குகிறாள்.

மேகமும் வியக்கும் கொடைத்தன்மையை உடைய மன்னவனே, நின்னைப் பெறலாமோ என்ற ஐயத்துடன் மனம் தடுமாறி, அவள் உன் மீது மையல் கொண்டுள்ளாள். ஆதலால், அவள் மீது அன்பு வைத்துக் காப்பாயாக! தோழிகள் உன்னை ஒதுக்கிவிடமாட்டார்கள். அவளும் மாசில்லாத காதலுடன் உன்னைச் சேருவாள். உன் பங்குக்கு நல்ல இன்பமே உனக்குக் கிட்டும். இதை எண்ணிப் பார்ப்பாயாக'' என்றார் புலவர்.

பாட்டுடைத் தலைவனாகத் தன்னை வைத்து, தான் குறிப்பிட்டபடி பாடலைப் பாடிய அப்புலவருக்கு முத்துமாலையைப் பரிசளித்து மகிழ்ந்தான் மன்னன். மற்றையோரும் கைதட்டி ஆரவாரம் செய்து புலவரைப் பாராட்டினர்.

-டி.எம். இரத்தினவேல்

(நாளை (3.8.2015) ஆடிப்பெருக்கு)

http://www.dinamani.com/

பாமரன்  /  at  1:49 PM  /  2 கருத்துரைகள்

2 கருத்து(கள்):

தமிழிலக்கியத்தில் அறிவியல் கோட்பாடுகள் - ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

Add caption
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், "இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்கிறார்கள். எந்த ஓர் இலக்கியமும் தான் தோன்றிய அச்சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞான பூர்வமாக மிளிர்கின்றன.

20-ஆம் நூற்றாண்டை, "அறிவியல் யுகம்' என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துக்களை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்பகாலக் கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம்.

இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்ககாலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவியல் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கின்றன. இன்றைய நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கிப் பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு, அறிவியல் பார்வை இலக்கியத்தில் பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.

திருவள்ளுவர்,எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்.355)எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்.423)என்ற குறளிலும் தெளிவுபடுத்தியுள்ளார். விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார்.

இயற்பியலில் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் "அணுவைப் பிளக்க இயலாது' என்ற கொள்கை தோன்றியது. பின்னர், ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமையை இலக்கியத்தில் நாம் காணலாம்.அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்.என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் ஒப்புநோக்குக் கொள்கை உடையவராய், தமிழர்களும் இச்சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்குத் தொல்காப்பியரைச் சான்றாகக் காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள் என்பதனை,""முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

இயல்பென மொழி இயல்புணர்ந் தோரே''என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார். நீர்ப் பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப் பொருளின் இச்சுருங்கா இயல்பை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் பாஸ்கல் என்னும் அறிஞர். இப் பாஸ்கல் விதிக்குச் சான்றாக,ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது.என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தைப் பொருத்து அழுத்தம் மிகுகின்றது என்ற மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார். உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியியலின் நிகழ்வுகள் உண்டாகின்றன. இவ்விளைவுகளை நம்மால் உணர முடிகிறது. ஆனால், ஏன் என்ற வினாவிற்குக் கற்றவர்கள் தவிர; கல்லாதவர்கள் விடை அளிக்க இயலாது. தமிழ்ச் சான்றோர் பல்துறை அறிவுடையவராய் விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித் தம் பாடல்களில் தம் முத்திரைகளைப் பதித்துள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கனவைத் தம் பாடலின் மூலம் கூறுகிறார்.வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்...என்று பாடியுள்ளமை உணரலாம். இன்று சந்திர மண்டலத்தினையும் தாண்டி மற்ற கோள்களையும் மனிதன் ஆய்வு மேற்கொண்டுள்ளான்.

தமிழ் இலக்கியத்தில் பயணத்தை விரைவாக்கிய விமானம் பற்றிய சிந்தைகளையும் காணமுடிகிறது. புறநானூறு ஓட்டுநர் இல்லாத வானவூர்தியைப் (புறம்-27) பற்றிய செய்தியினைத் தருகின்றது. அவ்வடிகள்:

வலவன் ஏவா வான வூர்தி

எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக்!சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர் இளங்கோ அடிகள். ஆதலின்,ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலந்திரி தலான்...என்று ஞாயிற்றைப் போற்றினார்.

தாவரங்கள், ஆற்றல், அறிவியல் மற்றும் அதைப் பற்றிய இலக்கியத்தைப் பற்றி உங்களிடம் விவாதிக்கும்போது என் வீட்டில் அமைந்துள்ள 100 ஆண்டு கண்ட மரத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

அந்த மரம் சொல்கிறது. ""எனது வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்று கேட்ட என் அன்பு கலாமே, எனது நூறு வருட வாழ்க்கையின் இலட்சியம் இதுதான். என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என் மகிழ்ச்சி. பூக்களைக் கொடுத்தேன், தெளி தேனைக் கொடுத்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்தேன். கொடுத்தேன்; கொடுத்தேன்; கொடுத்துக்கொண்டேயிருப்பேன். அதனால் நான் என்றும் எப்பொழுதும் இளைமையாயிருக்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறேன்.''

மரம் எப்படிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறதோ, அப்படித்தான் மொழியும். தாய்மொழி ஒவ்வொருவருக்கும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது. அந்த நம்பிக்கைதான், நம் தலைவிதியை நிர்ணயிக்கிறது.

எனவே, நண்பர்களே! நமது தாய்மொழி தமிழ் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமானால், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி ஆராய்ச்சித்துறை சார்ந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். அந்த நம்பிக்கை பொதுமக்களுக்கும் வர வேண்டும்; கல்வியாளர்களுக்கும் வரவேண்டும்; மருத்துவர்களுக்கும் வர வேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் வர வேண்டும்.

-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

http://www.dinamani.com/
பாமரன்  /  at  7:08 AM  /  1 கருத்துரை

Saturday, August 1, 2015

அடுக்குத்தொடர் - தமிழிலக்கணம் அறிவோம்

விளக்கம்:01

ஒரு வாக்கியத்தில் வந்த சொல்லே மீண்டும் வருவது, அடுக்குத் தொடர் ஆகும்.

விளக்கம்:02

செய்யுளிலும் வழக்கிலும் அசைநிலைக்கும், விரைவு வெகுளி (ஆத்திரம்) உவகை அச்சம் அவலம் ஆகிய பொருள் நிலைகளை உணர்த்தும் வண்ணமும், யாப்பிலக்கணத்தின்படி அல்லது பொதுவாக இசையை நிறைவு செய்யும் பொருட்டும் ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்

விளக்கம்: 03

பேசுவோனுக்குத் திடீர் என்று ஓர் உணர்ச்சி ஏற்பட, வாக்கியத்தில் முன்னும் பின்னும் வெவ்வேறு சொற்களை அமைக்காமல், ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப இருமுறை, மும்முறை கூறுதல் உண்டு. இதுவே அடுக்குத் தொடர் எனப்படும். விரைவு துணிவு போன்ற பொருள் காரணமாக அடுக்குத் தொடர் அமையும் என்கிறார் தொல்காப்பியர் (தொல். சொல். 421, 424).

எடுத்துக்காட்டு :

 1. புலி, புலி என்று ஒருவன் கத்தினான்.

இதில் புலி புலி என்பது அடுக்குத் தொடர் ஆகும்.
புலி என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் ஒரு பொருளை மட்டும் தரும்.

     2.அழ. வள்ளியப்பா பாடல்

கூட்டம் கூட்டமாகவே குருவி பறந்து சென்றிடும்
குவியல் குவியலாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும்
குலை குலையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும்
மந்தை மந்தையாகவே மாடு கூடி மேய்ந்திடும்
சாரை சாரையாகவே தரையில் எறும்பு ஊர்ஊர்ந்திடும்

கரணியம்எடுத்துக்காட்டுகள்
அசைநிலைஅன்றே அன்றே
விரைவுப்பொருள்போ போ போ
வெகுளிவிடு விடு விடு
உவகைவாருங்கள் வாருங்கள்
அச்சம்தீத்தீத்தீ
அவலம்வீழ்ந்தேன் வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
இசைநிறை                     வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!                                                   

திரையிசைப் பாடல்களில் அடுக்குத்தொடர்:பாமரன்  /  at  12:01 PM  /  2 கருத்துரைகள்

திரையிசைப் பாடல்களில் அடுக்குத்தொடர்:இயல்(கள்): , , முழுமையாக வாசிக்க தொடரவும்»

2 கருத்து(கள்):

இரட்டைக்கிளவி - தமிழிலக்கணம் அறிவோம்

விளக்கம் 01:
இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப் பட்டு நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.
விளக்கம் 02:
இரட்டையாகநின்றே பொருளுணர்த்துஞ் சொல்(தொல். சொல். 48.)
விளக்கம் 03:
ஒலிக் குறிப்பில் வரும் இரட்டைமொழி; இரட்டையாக நின்றே பொருள் உணர்த்துஞ் சொல், விறுவிறுப்பு என்றாற் போல் வருவது
விளக்கம் 04:

எ.கா:

 1. நீர் சலசல என ஓடிற்று.
 2. மரம் மடமட என முறிந்தது.
 3. கசகச என வேர்வை, கசகச என மக்கள் பேசிக்கொண்டு
 4. கலகலப்பான பேச்சு
 5. கடகட என சிரித்தான்
 6. கமகம என மணந்தது முல்லை
 7. கரகரத்த குரலில் பேசினான்
 8. கிச்சுகிச்சு மூட்டினாள் பேத்தி
 9. கிசுகிசு ஒன்றை கேட்டேன்
 10. கிடுகிடு பள்ளம் பார்த்தேன்
 11. கிளுகிளு படம் பார்த்தாராம்
 12. கிறுகிறு என்று தலை சுற்றியது
 13. கீசுகீசு என குருவிகள் கத்தின
 14. குசுகுசு என்று அதை சொன்னார்
 15. குடுகுடு கிழவர் வந்தார்
 16. குபுகுபு என குருதி கொட்டியது
 17. கும்கும் என்றும் குத்தினார்
 18. குளுகுளு உதகை சென்றேன்
 19. குறுகுறுத்தது குற்ற நெஞ்சம்
 20. கொழகொழ என்று ஆனது சோறு
 21. கொழுகொழு என்று குட்டி
 22. சதசத என்ற சேற்றில் விழுந்தேன்
 23. சரசர என்று மான்கள் ஓடின
 24. சவசவ என்று முகம் சிவந்தது
 25. சாரைசாரையாக மக்கள் வந்தனர்
 26. சிலுசிலு என் காற்று வீசியது
 27. சுடசுட தோசைக் கொடுத்தாள்
 28. சொரசொரப்பான தாடி
 29. தகதக மின்னும் மேனி
 30. தடதட என் கதவைத் தட்டினான்
 31. தரதர என்று இழுத்து சென்றான்
 32. தளதள என்று ததும்பும் பருவம்
 33. திக்குதிக்கு என் நெஞ்சம் துடிக்கும்
 34. திடுதிடு என நுழைந்தான் (திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு” - திருப்புகழ் )
 35. திபுதிபு என மக்கள் புகுந்தனர்
 36. திருதிரு என விழித்தான்
 37. துறுதுறு என்ற விழிகள்
 38. தைதை என்று ஆடினாள்
 39. தொள தொள என சட்டை அணிந்தார்
 40. நங்குநங்கு எனக் குத்தினான்
 41. நணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்)
 42. நறநற என பல்லைக் கடித்தான்
 43. நைநை என்று அழுதாள்
 44. நொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள்
 45. பக்பக் என்று நெஞ்சு அடிக்கும்
 46. படபட என இமைகள் கொட்டும்
 47. பரபரப்பு அடைந்தது ஊர்
 48. பளபள என்று பாறை மின்னியது
 49. பிசுபிசுத்தது போராட்டம்
 50. பேந்தப்பேந்த விழித்தான்
 51. பொதபொத பன்றியின் வயிறு
 52. பொலபொல என வடித்தாள் கண்ணீர்
 53. மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா?
 54. மசமச என்று நிற்கவில்லை
 55. மடக் மடக் எனவும் குடித்தார்
 56. மடமட என நீரைக் குடித்தார்
 57. மலங்க மலங்க விழித்தான்
 58. மள மள என எல்லாம் நிகழ்ந்தது
 59. மாங்குமாங்கு என்று உழைப்பார்
 60. மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
 61. முணுமுணுத்து அவர் வாய்
 62. மொச்சுமொச்சு என்று தின்றார் பாட்டன்
 63. மொசுமொசு என மயிர்
 64. மொலு மொலென்று அரிக்கிறது சிரங்கு
 65. மொழுமொழு என்று தலை வழுக்கை.
 66. மொறு மொறு என்று சுட்டாள் முறுக்கு
 67. லபக் லபகென்று முழுங்கினார்
 68. லபலப என்று அடித்துக் கொண்டாள்
 69. லபோலபோ என அடித்துக் கொண்டாள்
 70. லொடலொட என்றும் பேசுவாள்
 71. வடவட என வேர்த்தன கைகள்
 72. வதவத என ஈன்றன் குட்டிகள்
 73. வழவழ என்று பேசினாள் கிழவி (“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” - திருப்புகழ்)
 74. விக்கி விக்கி அழுதது குழந்தை
 75. விசுவிசு என்று குளிர் அடித்தது
 76. விறுவிறுப்பான கதையாம்
 77. வெடவெட என நடுங்கியது உடல்
 78. வெடுவெடு என நடுங்கினாள்
 79. வெதுவெதுப்பான நீரில் குளித்தாள்
 80. வெலவெல என்று நடுங்கினேன்.
 81. ஜிகிஜிகு ராணி ஜில்ராணி
 82. டப்டப் எனத் துப்பாக்கி வெடித்தது
 83. பட்பட் என அறை விட்டான்
 84. டபடப என்ற ஒலியுடன் மோட்டார் சைக்கிள் சென்றது
 85. படபட என அவன் பேசினான்
 86. டம்டம் என முரசு ஒலித்தது
 87. டமடம என முரசு ஒலித்தது
 88. மடமட என மரம்முறிந்தது  
 89. மடமட என ஒப்புவித்தான்
 90. கடகட எனச் சிரித்தான்
 91. சடசட எனக் கட்டிடம் சரிந்தது
 92. தடதட என ஓடி வந்தான்  
மேலும் அறிய செம்மொழித்தமிழ் பக்கத்திற்கு செல்லவும்
பாமரன்  /  at  11:40 AM  /  கருத்துரை இடுக

காக்கா புடி... என்ன அர்த்தம்?

காக்கா புடி... என்ன அர்த்தம்?ஒரு மாமரத்தின் அடியில் ஒரு பழம் கிடந்தது. அதைச் சுவைத்துப் பார்த்த ஒரு நரி, ஆஹா! மாம்பழம் இவ்வளவு தித்திப்பாக இருக்கிறதே! என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் பழுத்துத் தொங்கின. நரிக்கு மேலும் சில மாம்பழங்களைச் சுவைத்துப் பார்க்க ஆசை எழுந்தது. மரத்தில் ஒரு காகம் அமர்ந்துஇருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தை  புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது. காகத்தை பார்த்து, பொன்னிற காகமே! நல்ல மயிலின் அழகும், குயிலின் குரலும் கொண்டு விளங்குகிறாயே! என்று புகழ்ந்து தள்ளியது.  இதைக்கேட்ட காகம், உத்தமமான குலத்தில் பிறந்ததால் உனக்கு என் அருமை தெரிந்திருக்கிறது. பாவம்! நடந்து வந்த களைப்பும், அயர்வும் உன் முகத்தில் தெரிகிறது. வயிறு நிறைய மாம்பழங்களைச் சாப்பிடு, என்று கூறி மாம்பழங்களை நரிக்கு கிடைக்கும்படி கொத்திக் கீழே போட்டது. உடனே நரி, என்ன நாம் சொல்லிவிட்டோம். மயில், குயில் என்று புகழ்ந்து பேசினோம். அவ்வளவுதானே! அதற்கு நம்மை உத்தம குலம் என புகழ்ந்ததுடன், பசிக்கு மாம்பழமும் தந்து காகம் அமர்க்களப்படுத்தி விட்டதே! என்று எண்ணியவாறே மாம்பழங்களைச் சுவைத்து மகிழ்ந்தது. இதைத் தான் காக்கா புடிப்பது என சொல்கிறார்கள்.
பாமரன்  /  at  10:30 AM  /  கருத்துரை இடுக

அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் பாராசூட்டின் பயன்பாடு!

அந்தக் காலத்தில் அவரோஹிணி என்ற குடை இருந்தது. இந்தக் குடை எதற்குப் பயன்பட்டது தெரியுமா! இப்போதைய ஆகாய விமானத்துக்கு அடிப்படை, அந்தக்காலத்தில் நம் மண்ணில் இருந்த புஷ்பக விமானம். குபேரனிடம் இருந்த இந்த விமானத்தை ராவணன் பறித்துக் கொண்டதாகவும், சீதையை அதில் கடத்திச் சென்றதாகவும் ராமாயணம் கூறுகிறது. இன்றைய நிஜம் தான், நாளைய வரலாறு என்பது முக்காலமும் உண்மை. இன்று சுனாமி என்ற பெயரில் வருவது அக்காலத்தில் பிரளயம் எனப்பட்டது. இதை எப்படி நம்புகிறோமோ, அதே போல புஷ்பக விமானத்தையும் நம்பி தான் ஆக வேண்டும். ஏன்! நாத்திகர்கள் கூட சுவாரஸ்யமாகப் படிக்கும் சிலப்பதிகாரத்தின் முடிவில், கண்ணகியை வானவர்கள் புஷ்பக விமானத்தில் ஏற்றிச் சென்றதாக கதை முடிகிறது.

விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ, போருக்குச் செல்லும் போதோ, சாகசங்கள் செய்யவோ மேலிருந்து கீழே குதிக்க இப்போது பாராசூட் பயன்படுத்துகிறார்கள். இந்த பாராசூட்டின் அன்றையப் பெயர் தான் அவரோஹிணி. அகஸ்திய சம்ஹிதை என்ற நூலில், இந்தக் குடையின் பயன் பற்றியும், அன்று அது எவ்வாறு பயன் படுத்தப்பட்டது பற்றியும் தகவல் சொல்லியுள்ளார்கள். ப்ருஹத் சம்ஹிதை என்ற நூல் இருக்கிறது. இதில் ஒரு ஆச்சரியமான தகவல் என்ன தெரியுமா! இந்தக்காலத்தில் பெரிசுகள் எல்லாம் தங்கள் நரையை மறைக்க கருப்பு மை (டை) பூசிக் கொள்கிறார்களே! அதை தயாரிக்கும் முறை பற்றி சொல்லியுள்ளார்கள். அது மட்டுமல்ல! பொடுகை போக்கும் சீயக்காய் பற்றியும் இதில் தகவல் உண்டு. இப்போது அது தான் ஷாம்பு என்ற பெயரில் அவதாரம் எடுத்திருக்கிறது. எல்லாமே நம்மிடம் அன்று இருந்தது கலப்படமே இல்லாமல்! இன்று நம் அறிவு முதிர்ச்சியின் பயனாய் என்ன நடக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள்.
பாமரன்  /  at  10:23 AM  /  கருத்துரை இடுக

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.