வாழ்க தமிழ்!

Thursday, July 30, 2015

கம்பர் உணர்த்தும் வானியல்

பாமரன்  /  at  6:15 AM  /  கருத்துரை இடுக

சூரியனைச் சுற்றி இயங்குவன கோள்கள். அதனால், சூரியன் "கோளரசு' எனப் பெயர் பெற்றது. கோள்களின் இயக்கக் காலமும் இயல்பும் மாறுபடுகின்றன. கோள்களில் சில சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும் காலங்களில் இயற்கை மாற்றங்களும் நிகழ்வதுண்டு.
கி.பி.140-ஆம் ஆண்டில் கிரேக்கத்தைச் சார்ந்த வானியலறிஞர் கிளாடியிஸ் டால்மி (Gladius Dtolmy) என்பவர் "பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம்; சூரியன் மற்றுமுள்ள கோள்கள் புவியைச் சுற்றியே இயங்குகின்றன' என்னும் கருத்தை வெளியிட்டார்.
கி.பி.1543-ஆம் ஆண்டு போலந்து நாட்டைச் சார்ந்த வானியலார் கோபர்நிகஸ், சூரியனை பிரபஞ்சத்தின் மையம் என்றும், பூமி முதல் மற்ற அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றியே இயங்குவதாக எடுத்துரைத்தார். இவ்விருவரும் நமது சூரியக் குடும்பம் மட்டுமே பிரபஞ்சம் என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர். கி.பி.1805-இல் இங்கிலாந்தைச் சார்ந்த வானியலார் வில்லியம் ஹெரிஷல் (William Hereshal)  என்பவர்தான் தொலைநோக்கி மூலம் மேற்கொண்ட ஆய்வால் பிரபஞ்சம் என்பது நமது சூரியக் குடும்பம் மட்டுமல்ல அது மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் (Calaxy)  பல லட்சக்கணக்கான நட்சத்திரக் கூட்டத்தைக் கொண்டே பால்வெளிவீதி Milky way)  என்னும் பிரபஞ்சம் உண்டானது என்றார். கி.பி.1925-இல் ஹப்பிள் (Habble) என்ற அமெரிக்க வானியலார் "பிரபஞ்சம் என்பது நமது நட்சத்திரத்தைப் போன்று பல கோடி பால்வெளி வீதிகளை உள்ளடக்கியது' என்றார்.
கோள்களின் இயக்கம் பற்றி (Rotatory (or) Circular motion) கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தில் (ஆரண்ய காண்டம் } 959) கீழ்க்காணுமாறு கூறியுள்ளார்.
சீதையைக் காணாத இராமனின் மனம் சுழன்ற நிலையை விளக்க வந்த கம்பர்,
""மண் சுழன்றது; மால்வரை சுழன்றது; மதியொடு
எண் சுழன்றது; சுழன்றது அவ்வெறி கடலேழும்
விண் சுழன்றது; வேதம் சுழன்றது; விரிஞ்சன்
கண் சுழன்றது; சுழன்றது கதிரொடு மதியும்''
என்கிறார். பூமியும் மலைகளும் சுழன்றன. சான்றோரின் எண்ணங்களும் சுழன்றன. அலைவீசும் கடல்கள், ஆகாயம், வேதம், சிவனின் நெற்றிக்கண், சூரியன், சந்திரன் யாவும் சுழல்வதாகக் குறிப்பிடுகிறார்.
கோள்கள் யாவும் சூரியனை மையமாக வைத்துத் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதாக வானியல் அறிஞர்கள் கூறிவருகின்றனர். ஆயினும், இஃது தவறான கூற்றாகும். கோள்கள் யாவும் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. எவ்வாறெனில், ஒவ்வொரு கோளுக்கும் நிறையும்(mass),
மைய விசையும் (Centre gravity), விலக்கு விசையும்  (maganatical Force)உண்டு. சமமான அளவினையுடையது வட்டம். ஒழுங்கற்ற அளவினையுடையது நீள்வட்டம். அவ்வாறாயின் நீள்வட்டப் பாதையில் இயங்க இயலாது. சமமான அளவுள்ள வட்டப்பாதையில் இயங்குகின்றன. சில கோள்களின் சிறு சிறு பாகங்கள் பழுதாகி உடைந்து பால்வீதியில் வரும்பொழுதுதான் இயற்கை மாற்றங்கள் நிகழ்கின்றன.
கோள்கள் யாவும் கோள வடிவமானவை. ஒன்றுக்கொன்று அதன் நிறையிலும் திசைவேகத்திலும் தனித்தனியாக இயங்குவன. இதனையே புறப்பாடலிலும்,

""செஞ் ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
விறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தார் போல'' (புறம்.30)

என்ற வரிகளால் அறிய முடிகிறது. வானியலார் புவியின் இயக்கம் பற்றியும் அதன் புள்ளிவிவரம் பற்றியும் சில அளவுகளைக் குறிப்பிடுகின்றனர்.
பூமியின் நிறை 5,97,40,00,00,00,00,00,00,00,000 மெட்ரிக் டன்களாகும். மொத்தப் பரப்பு 51,00,66,000 சதுர கி.மீ. (29.1%) நிலம். மொத்த நீர்ப்பரப்பளவு 36,16,37,000 சதுர கி.மீ (70.9%) ஆகும். புவியின் மொத்த நிறை(MASS)யில்தான் மாற்றமில்லாமல் இருந்தால், புவி அதன் இயல்பான திசைவேகத்தில் இயல்பான பாதையில் இயங்க முடியும்.
மனிதன், மலைகளையும் காடுகளையும் விலங்குகளையும் பிற இயற்கை வாழிடங்களையும் அழிக்கிறபோது, புவி தனது மொத்த நிறையிலிருந்து மாறுபடுகிறது. அவ்வாறு மாறுபட்டால் புவி தனது இயக்கத்தில், திசை வேகத்தில், பாதையில் மாறுபட்டு வெவ்வேறு கோள்களுடன் சென்று மோதிக்கொள்ளும் அபாயமும் உண்டு. எனவே, மனிதகுளம் வாழவும் புவி அதன் கட்டுப்பாட்டில் இயங்கவும் இயற்கையைப் பாதுகாப்பதே நலம் பயக்கும் என்பதே கம்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்!

-முனைவர் கா. காளிதாஸ்

பகிர்

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.