வாழ்க தமிழ்!

Thursday, July 30, 2015

கழுகு மலை - குடவரை கோயில். . .

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசல முர்த்தி குடவரை கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். 15 அடி உயரத்தில் முன் மண்டபம்,  அர்த்தமண்டபம், கருவறை ஆகியவைகளை குடைந்து எடுக்கப்பட்ட குடவரைகோயிலில் ஒரு முகமும் ஆறுகைகளும் கொண்டு மயில் மீது அமர்ந்து மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் குமரன் இருக்கிறார். செவ்வாய் தோஷம் நீக்கும் பெருமானாக விளங்குகிறார். இதற்கு தென்மேற்கில் ஜம்புலிங்கேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதிகளோடு சிவன் ஆலயம் உள்ளது. கி.பி12ம் தூற்றாண்டில் சோழர், பாண்டியர் காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டது. 

இக்கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. மேலவாயிலின் நுழைவில் வடக்கு பக்கத்தில் வசந்த மண்டபமும் அதனருகில் குமார தெப்பமும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர தேரோட்டம், வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். தைப்பூசத்தில் சிறிய தேரும், பங்குனி உத்திரத்தில் பெரிய தேரும் வலம் வரும். கந்தசஷ்டி திருவிழா முடிந்ததும் தெய்வானை திருக்கல்யாணமும், பங்குனி உத்திர திருவிழா நிறைவில் வள்ளி பிராட்டியின் திருக்கல்யாணமும் நடைபெறும். 

வெட்டுவான் கோயில்

கழுகுமலை சுற்றுலா மலை மீது உள்ள வெட்டுவான் கோயில் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்றது. மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. பெரியமலைப்பாறையில் ஏறக்குறைய 7.50மீட்டர் ஆழத்திற்கு சமமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக் கற்கோயிலாகும். இதில் கருவறையும், அர்த்தமண்டபமும் உள்ளன. இதன் காலம் கி.பி 8-ம் தூற்றாண்டாகும். கோபுரம், விமானத்தில் நடன மங்கையர்கள் பலவித இசைக்கருவிகளை இசைக்கும் இசை வாணர்கள் ஆகியோரின் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. தென்புறம் அமர்ந்த நிலையில் மிருதங்கம் வாசிப்பது போன்று தட்சிணாமூர்த்தி உருவம் அமைக்கப்பட்டுள்ளது. 

விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு பக்கங்களிலும் நந்தி சிலைகள் உள்ளன. கோயில் பணி முற்றுப் பெறவில்லை. இக்கலை சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவையாகும். இவற்றைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கலைச்சிற்பங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிற்பிகளான தந்தை, மகன் இருவரும் சிற்பங்களை செதுக்கியதாகவும், தந்தை வெட்டுவான் கோயிலின் தென்புறமுள்ள சமணர் சிற்பங்களை செதுக்கியதாகவும், மகன் வெட்டுவான் கோயிலை செதுக்கியதாகவும், தந்தையை விட மகன் அழகாக சிற்பங்களை செதுக்கியதால் பொறாமை கொண்ட தந்தை மகனை உளியால் தாக்கி கொன்றதாகவும் செவிவழி செய்தியாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

சமணர் சிற்பங்கள்

மலையின் நடுப்பகுதியில் வடக்கு நோக்கி விசுவநாதர் குடவரையும், குகைப்பள்ளி குடவரையும் அமைந்துள்ளது. குகைப்பள்ளியில் சமண முனிவர்கள் வாழ்விடமாக அமைத்து, அதிலே கல்லால் செதுக்கப்பட்டபடுக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சமண துறவிகளின் குடைப்பு சிற்பங்கள் ஐந்து தொகுதிகளாக செதுக்கப்பட்டுள்ளது. ஆதிநாதர், நேமிநாதர், மகாவீரர் போன்ற சமண முனிவர்களுடைய சிற்பங்களும், அம்பிகாவதி, பத்மாவதி போன்ற பெண் உருவசிலைகளும் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. இதில் 103 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சர்வகலா சாலை இங்கு நிறுவி குழுவானை நல்லூர் சாலை என பெயரிட்டு குணசாகரர் என்ற சமண முனிவர் தோற்றுவித்த கல்விச்சாலை இங்கு உறைவிடப்பள்ளியாக நடைபெற்றுள்ளது. கி.பி866 முதல் 911 வரை பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் காலத்தில் இக்கல்வெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் கழுகுமலை நெற்ச்சுரநாடு, அரைமலை, கஜமலை போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. 
பாமரன்  /  at  4:56 PM  /  கருத்துரை இடுக

0 கருத்து(கள்):

ஐயப்பனின் அவதார பிறப்பு

சிவபெருமானை எண்ணி கடும் தவம் புரிந்தான் பத்மாசுரன் என்ற கொடிய அரக்கன். அவன் தவத்தை மெச்சி அவன்முன் தோன்றினார் சிவபெருமான்.  பத்மாசுரனிடம் உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் ‘எவர் தலை மீது நான் கையை வைக்கின்றேனோ அவர் அக்கணமே எரிந்து  சாம்பலாக வேண்டும். அந்த வரத்தை எனக்கு தந்தருள வேண்டும் என்று கேட்டான். சிவபெருமானும் அரக்கன் கேட்ட வரத்தை தந்தருளினார். இந்த நிலையில்  அரக்கன் பத்மாசுரன் மனதில் ஒரு நினைப்பு தோன்றியது. வரம் தந்த சிவனிடம் வரத்தின் மகிமையை சோதித்து பார்க்க எண்ணினான். இதையடுத்து பத்மாசுரன் சிவபெருமான் தலை மீது கை வைக்க முயன்றான்.  சிவபெருமான் அவனுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார். இதை அறிந்த திருமால் மோகினி வடிவில் அவ்வரக்கனை மயக்கி, அவனை தன் தலைமீதே தன்  கையை வைக்கும்படி செய்து பத்மாசுரனை எரித்து சாம்பலாக்கினார். இதையடுத்து சிவபெருமான் மோகினி உருவில் இருந்த திருமாலின் அழகில் மயங்கினார். இதன்மூலம் இருபெரும் சக்திகள் இணைய ஒரு பெரும் சக்தி வடிவமாக குழந்தை ஒன்று தோன்றியது. அக்குழந்தைக்கு பிரம்மன் ‘தர்மசாஸ்தா’ என்று பெயர்  சூட்டினார். சிவபெருமான் அக்குழந்தைக்கு தன் கழுத்தில் இருந்த மணிமாலையை அணிவித்து, அக்குழந்தை பிறந்ததற்கான காரணத்தை எடுத்து கூறி பம்பை  நதிக்கரையில் விட்டு மறைந்தார். அக்குழந்தைதான் சபரிமலை வாசனாகிய ஐயப்பன் எனும் மணிகண்டன். ஐயப்பன் பிறந்ததின் முக்கிய நோக்கம் பிரம்மனிடம்  வரம்பெற்ற மகிஷியை அழிப்பது ஒன்றேயாகும்.

மணிகண்டனை கண்டெடுத்த பந்தள மன்னன்

பந்தள நாட்டை நீதி நெறியுடன் ஆண்டு வந்தார் மன்னன் ராஜசேகரன். சிறந்த சிவபக்தர். தனக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்கும்படி சிவபெருமானை  தொடர்ந்து தியானித்து வந்தார். அவர் ஒருநாள் வேட்டையாட காட்டிற்கு சென்றார். அச்சமயம் பம்பை நதிக்கரைக்கு அருகே ஒரு குழந்தை அழும் சத்தம்  கேட்டது. அக்குழந்தையை மன்னர் ராஜசேகரன் காணும்படி செய்தார் சிவபெருமான். தெய்வீக அம்சமும், அழகும் நிறைந்த அக்குழந்தை தமக்கு கிடைத்ததை  எண்ணி மன்னன் அகம் மகிழ்ந்தான். அப்போது இறைவன் அடியார் உருவில் அங்கு வந்தார். குழந்தையை நீ மணியுடன் கண்டெடுத்ததால் அக்குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனார். மணிகண்டன்  பந்தள நாட்டிற்கு வந்ததின் காரணமாக ராணி கருவுற்று ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். இருகுழந்தைகளையும் ராணி கண்ணும் கருத்துமாக, கண்ணின்  மணிகளாக போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தார். தனது இரு பிள்ளைகளையும் தக்க பருவத்தில் குருகுலத்தில் சேர்த்து கல்வி பயில செய்தார்.  ஐயப்பனை  வணங்கிய குரு தன்னிடம் மாணவனாக வந்துள்ள ஐயப்பன் தெய்வ அவதாரம் என்பதை அறிந்து கொண்டார் குருநாதர். ஐயப்பனுக்கு மானசீகமாக தொண்டு புரியலானார். ஒரு சமயத்தில் குரு தனது மகனின் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார். இதனை கண்ட ஐயப்பன் மனம்  உருகினார். குருவின்  மகன் வாய்பேச முடியாதை அறிந்து, தனது தாய், தந்தையான சிவபெருமான் - திருமாலை வேண்டி குரு மகனின் ஊனத்தை  குணப்படுத்தினார். இதனை கண்ட குரு, ஐயப்பா ஐயப்பா என் கண்கண்ட தெய்வமே என்று கைகூப்பி வணங்கினார். 

மகிஷிக்கு வரமளித்த பிரம்மதேவர்

ஐயப்பனின் அவதார மகிமை மிகவும் விசேஷமானது. மகிஷாசுரன் என்ற கொடும் அரக்கன் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள்  நாள்தோறும் துன்பத்தை அனுபவித்து தாங்க முடியாத துயரத்தில் தவித்தனர். இதையடுத்து துர்க்காதேவி மகிஷாசுரனை வதைத்து சம்ஹாரம் செய்தார்.  இதனால் கோபம் கொண்ட அவனது தங்கை மகிஷி கடும் தவம் புரியலானாள். அவள் செய்த தவத்தின் பயனாய் பிரம்மதேவர் அவள் கண்முன் தோன்றினார்.  அவளிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மகிஷி, பன்னிரெண்டு ஆண்டுகள் பிரம்மச்சரியம் இருந்து மனிதர்களுக்கு சேவை புரிய  கூடியவனாகவும், அரிக்கும், சிவனுக்கும் பிறக்கும் மகனாகவும் இருக்கும் ஒருவனிடமின்றி வேறு யாராலும், தன் அழிவு இருக்க கூடாது என்று வரத்தை  பெற்றாள். வரம்பெற்ற மகிஷி அந்த மமதையால் தேவர்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினாள். அவள் தரும் தொல்லை தாங்காத தேவர்கள் திருமாலிடம்தஞ்சமடைந்தனர். அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்தார் திருமால்.

மந்திரியின் சூழ்ச்சியில் சிக்கிய ஐயப்பன் 

மணிகண்டன் குருகுலத்தில் கல்வி பயின்று சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார். பின்னர் அரண்மனைக்கு திரும்பினார்.  தந்தையான பந்தளமகாராஜாவின் பிரிய மகனாக வளர்ந்து வந்தார். நாட்டு மக்களுக்கு சகல நலன்களும் கிடைக்க அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு தனது  புத்திமதிகளை வழங்கினார். இது பந்தள மகாராஜா ராஜசேகரனின் மனதை குளிர்வித்தது. தனது மணிகண்டன் சிறந்த மன்னனாக விளங்குவான் என்று அகம்  மகிழ்ந்தார். இதையடுத்து மன்னர் ராஜசேகரன் மணிகண்டனுக்கு மகிடம் சூட்ட தன் மனைவியிடம் ஆலோசனை நடத்தினார்.இதை அறிந்த துர்மந்திரி ஒருவர் சதி செயலில் இறங்கினார். மகாராணியின் மனதை கெடுத்து மணிகண்டனை அழித்துவிட திட்டமிட்டார். ஒரு கட்டத்தில் தன்  சூழ்ச்சியால் மணிகண்டனுக்கு பாலில் கடும் விஷம் கலந்து குடிக்க செய்தார். விஷம் அருந்தியதால் உடல் நலிந்த மணிகண்டனை குணப்படுத்த எந்த  மருந்தாலும் முடியாது போனது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான் துறவி உருவில் அரண்மனைக்கு வந்து திருநீறு அணிவித்து மணிகண்டனை  குணப்படுத்தினார். பின்னர் தனது விஸ்வரூப தரிசனத்தை மணிகண்டனிடம் காண்பித்து அவதார நோக்கம் குறித்து விளக்கிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.அதன்பின் மந்திரத்தாலும், தந்திரத்தாலும் மணிகண்டனை சதிகாரர்கள் கொல்ல முயன்றனர். அவர்கள் முயற்சியாவும் பயனற்று போயின. இதனால் அவர்கள்  முழுவதுமாக சோர்வுற்றனர். பின்னர் முடிவாக ஒரு சதிசெயலில் இறங்கினர்.அரசியாருக்கு தலைவழி என்றும், புலிப்பால் கொண்டு வந்தால்தான் அரசியாரின்  தலைவழியை போக்க முடியும் என்றும் கூறி மருத்துவர் ஒருவரை சொல்ல வைத்தனர். இதன்மூலம் மணிகண்டனை கானகத்துக்கு அனுப்ப திட்டமிட்டனர்.

மகிஷியை வதம் செய்த ஐயப்பன்

தாயின் வேண்டுகோளை நிராகரிக்க விரும்பாத ஐயப்பன், தந்தையின் அனுமதி பெற்று புலிப்பால் கொண்டு வர இருமுடி தலையில் தாங்கி கானகத்துக்கு தனியே  புறப்பட்டார். பெரும் கொள்ளைக்காரனாகிய வாவரை கானகத்தில் கண்டார். அவனை நல்லவனாக திருத்தி அவரை தன் நண்பனாக்கி கொண்டார். இந்த காட்டில்  தேவர்களுக்கு தீராத தொல்லை கொடுக்கும் எருமை உருக்கொண்ட மகிஷியை மணிகண்டன் சந்தித்தார். அவரை கண்டதும் மகிஷி ஆவேசமடைந்து கொலை  புரியும் நோக்கில் போர் புரிந்தாள். முடிவில் மகிஷியை மணிகண்டன் வதம் செய்தார். அதனால் சாபவிமோசனம் அடைந்த மகிஷி, அழகிய மங்கையாக  உருமாறினார். தன்னை மணந்து கொள்ளும்படி மணிகண்டனை வேண்டினாள். அவளிடம் தான் கொண்டுள்ள பிரம்மச்சரிய விரதத்தையும், தன் அவதார நோக்கத்தையும் மணிகண்டன் எடுத்து கூறினார். எப்போது என்னுடைய சபரிமலை  சன்னதிக்கு ஒரு கன்னிசாமி கூட வராமல் இருக்கின்றனரோ அப்போது உன்னை நான் மணந்து கொள்கிறேன் என்று கூறினார். தன் சகோதரியாக பாவித்து  அவளுக்கு தன் வலப்பக்கத்தில் மஞ்சமாதா என்ற பெயரில் வீற்றிருக்கும் இடத்தை அருளுவதாக வாக்கு அளித்தார்.

ஐயப்பனின் புலியாக மாறிய தேவர்கள்

மகிஷியை அழித்த மணிகண்டனை தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். பின்னர் தேவர்கள் யாவரும் புலிகளின் வடிவமாக மாறி மணிகண்டனுடன் பந்தள நாடு  சென்றனர். ஐயப்பன் பெரும் புலிக்கூட்டத்துடன் வருவதை கண்ட நாட்டு மக்கள் பயந்து நடுநடுங்கி மன்னரிடம் சென்று முறையிட்டனர். பந்தள மன்னன்  மணிகண்டனின் மகிமையை அறிந்து அவரை வரவேற்று மார்புற கட்டி தழுவி கொண்டார். இந்த நிலையில் சூழ்ச்சி வெளிப்பட்டதால் மந்திரி உட்பட சதிச்செயல்  புரிந்தவர்கள் மணிகண்டனின் காலில் விழுந்து வணங்கினர். மணிகண்டனும் அவர்களை மன்னித்தார். புலிக்கூட்டமாக உருவாறி வந்த தேவர்களை திரும்ப வழி  அனுப்பி வைத்தார் மணிகண்டன்.

காந்தமலையில் ஜோதி ரூபமாக காட்சி 

பந்தளமன்னன் ராஜசேகரன் ஐயப்பனுக்கு நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டினார். ஐயப்பன் மன்னனிடம் தன் அவதாரம் நோக்கம் முடிவுற்றதை எடுத்து  கூறினார். மகனை பிரிய மனமில்லாத பந்தளமன்னன் தன் ராஜ்ய எல்லைக்குள் இருந்து என்றும் காட்சி கொடுக்க வேண்டும் என்று ஐயப்பனிடம் வேண்டினார்.  அதற்கு ஐயப்பன் தான் எய்தும் அம்பு விழும் இடத்தில் பதினெட்டு படிகள் அமைத்து கோயில் அமைக்க வேண்டும் என்றார். மேலும் தன்னை காணவரும்  பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி தாங்கிதான் கோயிலுக்கு வர வேண்டும் என்று கூறி மறைந்தார். பந்தளமன்னர் ஐயப்பனின் கட்டளைப்படி  அவ்விடத்திலே கோயில் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.கும்பாபிஷேக தினத்தன்று ஜோதி ரூபமாக மணிகண்டன், சாஸ்தாவின் விக்ரகத்தினுள் ஐக்கியமானார். அப்போது ஐயப்பனின் அசரீரியாக, பந்தள மன்னன்  மற்றும் மக்களின் வேண்டுதலின் பேரில் நான் வருடம் ஒருமுறை மகர சங்கராந்தி தினத்தன்று சூரியன் மறையும் நேரத்தில் காந்தமலை மீது ஜோதி ரூபமாக  காட்சி கொடுத்து அருள் புரிவேன் என்று கூறியதாக ஐயப்பன் வரலாற்றில் கூறப்படுகிறது. அதேபோன்று அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் மகா  சங்கராந்தியன்று காந்தமலையில் ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார் ஐயப்பன்.

- மணிகண்டன் (SRC: Dinakaran )
பாமரன்  /  at  4:49 PM  /  கருத்துரை இடுக

ஆசாரக்கோவையில் அறிவியல்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. பெருவாயின் முள்ளியாரால் இயற்றப்பட்டது. மனிதன் வாழ்வில் பின்பற்றவேண்டிய பல்வகை ஆசாரங்களை (ஒழுக்கங்களை) பற்றிக் கூறுகிறது. இவ்வொழுக்கங்களைப் பற்றிக் கூறும்போது, அவற்றின் பின்னணியாக அறிவியலைத் துணைகொள்ளும் பெருவாயின் முள்ளியாரின் திறன் சிந்தனைக்குரியது.
ஆசாரக்கோவை, சிறப்பான எட்டு ஒழுக்கங்களைக் குறிப்பிடுகிறது. அவை: நன்றி மறவாமை, பொறுமை, இனிய சொல், எந்த உயிர்க்கும் துன்பம் செய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்ல இனத்தோடு நட்பு கொள்ளுதல். இவற்றோடு ஆசாரக்கோவை குறிப்பிடும் ஒழுக்கங்களைப் புற ஒழுக்கம், அகவொழுக்கம் என்று நாம் வகைசெய்து கொள்வது நலம் பயக்கும்.
புற ஒழுக்கம் உடல் சார்ந்தும், அகவொழுக்கம் மனம், நடத்தை, செயல் சார்ந்தும் அமைகிறது. இவற்றின் பின்னணியில் அறிவியலை இணைத்து ஆசாரக்கோவை வலியுறுத்துவதில் சிலவற்றைக் காண்போம்.
நீராடுதலின் முறை, ஆடையுடுத்தும் முறை, உணவு உண்ணும்முறை இவற்றைக் குறிப்பிடும்போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எனும் பகுப்பில் எடுத்துரைக்கிறது. எப்போது நீராட வேண்டும் என்பது பின்வரும் பாடலில் விளக்கப்படுகிறது.

தேவர் வழிபாடு, தீக்கனா, வாலாமை;
உண்டது கான்றல், மயிர்களைதல், ஊண்பொழுது;
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ்மக்கள்;
மெய்யுறல், ஏனை மயலுறல், ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர். (பா.10)

இதில் குறிப்பிடும் சில இக்காலத்திற்குப் பொருந்தாதவை. அதைவிடுத்து மற்றவற்றைக் காணலாம். இவற்றின்போது "துளிகூட ஐயம் இல்லாமல் நீராடுக' எனக் குறிப்பிடுவது உடல் நலம் குறித்ததாகும். இல்லையெனில் அது நோய் உண்டாக்கும் என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார்.
"தூய்மை இல்லாத காலத்து, உண்ட உணவை வாந்தியெடுத்தபோது, மயிர் களைந்த போது, நெடுநேரம் தூங்கியபோது, புணர்ந்த போதும், மலம், சிறுநீர் கழித்தபோதும்' - இச்சமயங்களில் அவசியம் நீராட வேண்டும். இல்லையெனில் நோய் ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடும். பல்வகை தொற்றுக் கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மேற்குறிப்பிட்ட செயல்களுக்குப் பிறகு நீராட வேண்டும் என்கிறார் ஆசாரக்கோவை ஆசிரியர்.
அதேபோன்று ஆடையை உடுத்தித்தான் நீராட வேண்டுமாம். அதுவும் ஓர் ஆடையல்ல; ஈராடை அணிந்துதான் நீராட வேண்டுமாம். நீராடும் நீரில் வாய் எச்சிலை உமிழக்கூடாது. அவ்வாறு உமிழ்வது கெடுதலாகும் என்கிறார்.
உணவு உண்ணும் முறையைக் குறிப்பிடும்போது, உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத முறை குறிப்பிடப்படுகிறது. நீரில் குளித்து, காலைக் கழுவி, வாயைத் துடைத்து உண்ண வேண்டும் என்கிறார். உண்ணும்போது தூங்காமலும், அசையாமலும், நன்கு அமர்ந்து, வேறொன்றையும் பார்க்காமலும், சொல்லாமலும் உணவைக் கையால் எடுத்து (ஸ்பூன் அல்ல) நன்கு உண்க எனும்போது உடம்பும் மனமும் ஒத்திருக்கும் நிலையில் நன்கு மென்று தின்னும் உணவே சிறந்தது - செரிமானத்துக்குரியது என்று அறிவியலும் ஆன்மிகமும் குறிப்பிடுவதைத்தான் ஆசாரக்கோவை ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளார்.
உண்ணக்கூடாத முறைகள் பற்றிக் குறிப்பிடும்போது படுத்தபடி, நின்ற வண்ணம், வெட்டவெளியில் இருந்து உண்ணக்கூடாது; கட்டிலின் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது. உணவு உண்ணும்போது ஒருநிலையில் அமர்வது உடல் உறுப்புகளின் நிலைப்பாட்டைச் சுட்டுவதாகும். எல்லாமும் ஒருமித்த நிலையில் இருக்க உண்பது உடலுக்கு நலம் பயப்பதாகும். சாப்பிடும் உணவில் இனிப்பான உணவை முதலிலும், கசப்பான உணவை இறுதியிலும், மற்ற சுவையுள்ள உணவுகளை இடையிடையேயும் உண்ணல் வேண்டும் என்கிறார்.
இனிப்பிலுள்ள சர்க்கரைத் தன்மை கசப்பிலுள்ள கசப்புத்தன்மை மற்ற சுவைகள் இவை மேற்குறிப்பிட்டவாறு உண்ணும்போது அதனதன் அளவில் செரிமானம் ஆகும். உடலுக்குக் கேடு விளைவிக்காது. எனவேதான் இனிப்புத் தோலைக் கொண்டுள்ள பழங்களின் விதைகள் அவ்வினிப்புக்கு மாற்றாக துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளன என்பது அறிவியல் தரும் தகவலாகும். சான்றாக ஒரு நாவல் பழத்தைச் சாப்பிடும்போது அதன் விதையையும் சேர்த்து சாப்பிட்டால் அப்பழத்தின் இனிப்பு, பாதிப்பு ஏற்படுத்துவதற்குப் பதிலாக உடலுக்கு நல்ல பலனை அளிக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

கைப்பன எல்லாங் கடை, தலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண். (பா.25)

உண்டபின்பு வாயில் நீர் குடித்து, அது உள்ளே போகாவண்ணம் நன்கு கொப்பளித்து எச்சில் நீங்க வாயைத் துடைக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வது வாயில் உணவுத்துகள்கள் தங்கி நோயை உண்டாக்காமல் இருக்க வழிவகுக்கும். இவைதவிர நீரைக் குடிக்கும் முறை, படுக்கும்முறை, காலையில் செய்ய வேண்டியவை, மாலையில் செய்ய வேண்டியவை எனப் பலவற்றையும் வகைப்படுத்திக் கூறியுள்ளார்.
சங்க காலத்தில் இயற்றப்பட்ட அனைத்து இலக்கியங்களும் அறிவியல் செய்திகளை உள்ளடக்கியே படைக்கப்பட்டுள்ளன என்பதற்கு மேலும் ஒரு சான்றாக ஆசாரக்கோவை திகழ்கிறது.
-முனைவர் க. அன்பழகன்
பாமரன்  /  at  6:22 AM  /  கருத்துரை இடுக

கம்பர் உணர்த்தும் வானியல்

சூரியனைச் சுற்றி இயங்குவன கோள்கள். அதனால், சூரியன் "கோளரசு' எனப் பெயர் பெற்றது. கோள்களின் இயக்கக் காலமும் இயல்பும் மாறுபடுகின்றன. கோள்களில் சில சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும் காலங்களில் இயற்கை மாற்றங்களும் நிகழ்வதுண்டு.
கி.பி.140-ஆம் ஆண்டில் கிரேக்கத்தைச் சார்ந்த வானியலறிஞர் கிளாடியிஸ் டால்மி (Gladius Dtolmy) என்பவர் "பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம்; சூரியன் மற்றுமுள்ள கோள்கள் புவியைச் சுற்றியே இயங்குகின்றன' என்னும் கருத்தை வெளியிட்டார்.
கி.பி.1543-ஆம் ஆண்டு போலந்து நாட்டைச் சார்ந்த வானியலார் கோபர்நிகஸ், சூரியனை பிரபஞ்சத்தின் மையம் என்றும், பூமி முதல் மற்ற அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றியே இயங்குவதாக எடுத்துரைத்தார். இவ்விருவரும் நமது சூரியக் குடும்பம் மட்டுமே பிரபஞ்சம் என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர். கி.பி.1805-இல் இங்கிலாந்தைச் சார்ந்த வானியலார் வில்லியம் ஹெரிஷல் (William Hereshal)  என்பவர்தான் தொலைநோக்கி மூலம் மேற்கொண்ட ஆய்வால் பிரபஞ்சம் என்பது நமது சூரியக் குடும்பம் மட்டுமல்ல அது மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் (Calaxy)  பல லட்சக்கணக்கான நட்சத்திரக் கூட்டத்தைக் கொண்டே பால்வெளிவீதி Milky way)  என்னும் பிரபஞ்சம் உண்டானது என்றார். கி.பி.1925-இல் ஹப்பிள் (Habble) என்ற அமெரிக்க வானியலார் "பிரபஞ்சம் என்பது நமது நட்சத்திரத்தைப் போன்று பல கோடி பால்வெளி வீதிகளை உள்ளடக்கியது' என்றார்.
கோள்களின் இயக்கம் பற்றி (Rotatory (or) Circular motion) கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தில் (ஆரண்ய காண்டம் } 959) கீழ்க்காணுமாறு கூறியுள்ளார்.
சீதையைக் காணாத இராமனின் மனம் சுழன்ற நிலையை விளக்க வந்த கம்பர்,
""மண் சுழன்றது; மால்வரை சுழன்றது; மதியொடு
எண் சுழன்றது; சுழன்றது அவ்வெறி கடலேழும்
விண் சுழன்றது; வேதம் சுழன்றது; விரிஞ்சன்
கண் சுழன்றது; சுழன்றது கதிரொடு மதியும்''
என்கிறார். பூமியும் மலைகளும் சுழன்றன. சான்றோரின் எண்ணங்களும் சுழன்றன. அலைவீசும் கடல்கள், ஆகாயம், வேதம், சிவனின் நெற்றிக்கண், சூரியன், சந்திரன் யாவும் சுழல்வதாகக் குறிப்பிடுகிறார்.
கோள்கள் யாவும் சூரியனை மையமாக வைத்துத் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதாக வானியல் அறிஞர்கள் கூறிவருகின்றனர். ஆயினும், இஃது தவறான கூற்றாகும். கோள்கள் யாவும் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. எவ்வாறெனில், ஒவ்வொரு கோளுக்கும் நிறையும்(mass),
மைய விசையும் (Centre gravity), விலக்கு விசையும்  (maganatical Force)உண்டு. சமமான அளவினையுடையது வட்டம். ஒழுங்கற்ற அளவினையுடையது நீள்வட்டம். அவ்வாறாயின் நீள்வட்டப் பாதையில் இயங்க இயலாது. சமமான அளவுள்ள வட்டப்பாதையில் இயங்குகின்றன. சில கோள்களின் சிறு சிறு பாகங்கள் பழுதாகி உடைந்து பால்வீதியில் வரும்பொழுதுதான் இயற்கை மாற்றங்கள் நிகழ்கின்றன.
கோள்கள் யாவும் கோள வடிவமானவை. ஒன்றுக்கொன்று அதன் நிறையிலும் திசைவேகத்திலும் தனித்தனியாக இயங்குவன. இதனையே புறப்பாடலிலும்,

""செஞ் ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
விறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தார் போல'' (புறம்.30)

என்ற வரிகளால் அறிய முடிகிறது. வானியலார் புவியின் இயக்கம் பற்றியும் அதன் புள்ளிவிவரம் பற்றியும் சில அளவுகளைக் குறிப்பிடுகின்றனர்.
பூமியின் நிறை 5,97,40,00,00,00,00,00,00,00,000 மெட்ரிக் டன்களாகும். மொத்தப் பரப்பு 51,00,66,000 சதுர கி.மீ. (29.1%) நிலம். மொத்த நீர்ப்பரப்பளவு 36,16,37,000 சதுர கி.மீ (70.9%) ஆகும். புவியின் மொத்த நிறை(MASS)யில்தான் மாற்றமில்லாமல் இருந்தால், புவி அதன் இயல்பான திசைவேகத்தில் இயல்பான பாதையில் இயங்க முடியும்.
மனிதன், மலைகளையும் காடுகளையும் விலங்குகளையும் பிற இயற்கை வாழிடங்களையும் அழிக்கிறபோது, புவி தனது மொத்த நிறையிலிருந்து மாறுபடுகிறது. அவ்வாறு மாறுபட்டால் புவி தனது இயக்கத்தில், திசை வேகத்தில், பாதையில் மாறுபட்டு வெவ்வேறு கோள்களுடன் சென்று மோதிக்கொள்ளும் அபாயமும் உண்டு. எனவே, மனிதகுளம் வாழவும் புவி அதன் கட்டுப்பாட்டில் இயங்கவும் இயற்கையைப் பாதுகாப்பதே நலம் பயக்கும் என்பதே கம்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்!

-முனைவர் கா. காளிதாஸ்
பாமரன்  /  at  6:15 AM  /  கருத்துரை இடுக

பொய்யாமொழிப் புலவர் - கம்பர்

இன்றைக்கு நமக்குக் கிட்டியுள்ள சங்கப் பாடல்களில் தனியொருவராக அதிகமாகப் பாடல்களைப் பாடியருப்பவர் கபிலர் பெருமான் ஒருவர்தான்.
டாக்டர் உ.வே.சா., கபிலர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள "திருவாதவூர்' என்று குறிப்பிட்டு, அவர் அந்தணர் வகுப்பைச் சார்ந்தவர் என்கிறார். பல அறிஞர்களும் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கு அகச் சான்றாக விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகிய இரு மன்னர்களிடத்து கபிலர் தம்மை அறிமுகம் செய்து கொள்ளும்போது, கபிலர் தாம் அந்தணர் என்பதை ""யானே, பரிசிலன் மன்னும் அந்தணன்'', ""அந்தணன் புலவன் கொண்டு வந்தனென்'' என்று கூறியதை எடுத்துக் கொள்ளலாம்.
அந்நாளில் ஆரிய அரசன் ஒருவன் (பாண்டிய) மன்னனால் போரில் சிறை பிடிக்கப்பட்டு மதுரைக்குக் கொண்டு வரப்பட்டு மதுரையிலேயே இருந்து வந்தான். அவன் தனது தாய் மொழியான "ஆரியத்திற்கு தமிழ் நிகராகுமா?' என்று எண்ணி பலரிடமும் விவாதித்து வந்தான். இதனைக் கேள்வியுற்ற கபிலர் அவன்பால் சென்று தமிழின் இனிமையை, தொன்மையை, இலக்கணச் சிறப்பை தான் இயற்றிய குறிஞ்சிப் பாடலால் நிறைவாக விளக்கினார். அது கேட்டு அவ்வரசன் மனம் திருந்தி தமிழின் மேன்மையை மேலும் அறிய விரும்பினார். அதனால், கபிலர் அவருக்கு தமிழ்மொழியைத் தக்கவாறு கற்பித்தார். பகை அரசனுக்கு தமிழ் கற்பித்த கபிலரின் புகழ் எங்கும் பரவியது. கற்றவர்கள் மட்டுமன்றி பிற மன்னர்களும் அவரைப் பெரிதும் மதிக்கத் தலைப்பட்டனர்.
மதுரையை அடுத்த பறம்பு மலை சிற்றரசன் வேள்பாரி, கபிலரை தனது அரசவைக்கு அழைத்தார்; கபிலரும் சென்றார். காலப் போக்கில் கபிலரும் பாரியும் உற்ற நண்பர்கள்
ஆனார்கள்.
மூவேந்தர்கள் பாரியின் வள்ளல் தன்மையால் அவனுக்கு ஏற்பட்ட புகழ், அவனது மகளிரை மணக்க விரும்பிய வேட்கை இவற்றால் பொறாமை உணர்ச்சி வயப்பட்டு, பாரியின் பறம்பு மலையை முற்றுகையிடவும் முற்பட்டனர். காலம் கடந்தாலும் முற்றுகை நீடித்தாலும் வேள் பாரி பகையரசர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் கபிலர், பகையரசர்களிடம் சென்று போரைத் தவிர்க்குமாறு அன்போடு கூறினார். மேலும், பறம்பு மலை எத்தகைய வலிமை உடையது என்பதையும் அதனின், வளத்தையும் தன் பாடலால் (புறம்-109) வெளிப்படுத்தி, அதை அறிவுரையாக நவின்றார்.
போரில் நேர் நின்று பாரியை வெல்ல முடியாது என்று உணர்ந்த அப்பகையரசர்கள் சூழ்ச்சி செய்து வஞ்சகமாகப் பாரியைக் கொன்றனர். கபிலர் இக்கொடுஞ் செயலைக் கண்டு பதறினார்; கண்ணீர் மல்கினார்; தனது உயிரையும் மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். ஆனால், பாரியின் இரு மகளிர்களின் (அங்கவை, சங்கவை) நிலையை எண்ணி தனது முடிவினை மாற்றிக் கொண்டார்.
தந்தையை இழந்த அப்பெண்டிர் இருவரையும் அழைத்துக்கொண்டு விச்சி நாட்டிற்குச் சென்று, அந்நாட்டு மன்னன் விச்சிக்கோவிடத்து பாரியின் மகளிரை மணம் கொள்ள வேண்டினார். விச்சிக்கோ, பாரியினுடைய பகை அரசர்களின் பகை தமக்கும் வந்து விடுமோ என்று பயந்து மறுத்தான். வருத்தமுற்ற கபிலர், வேளிர் நாட்டு மன்னன் இருங்கோவேளிடம் சென்று பாரி மகளிரை மணம் புரிந்துகொள்ள வேண்டினார். அவனும் மறுக்கவே, பின்னர் நடுநாடு வந்தார். அந்நாட்டை ஆண்டுவந்த மலையமான் வழியினர் அஞ்சாத நெஞ்சமும் போர்க் குணமும் பெற்றவர்கள் என்பதை அறிவார் கபிலர். அவர்களிடம் பாரி மகளிரின் மணத்திட்டத்தை முன் வைத்ததும், அவர்கள் அன்புடன் இசைந்தனர்.
பிறகு திருக்கோவலூரில் உள்ள நல்ல குணம் மிக்க பார்ப்பார் குடியிற் பிறந்தோர் சிலரிடம், பாரி மகளிரை சிறிது காலம் அடைக்கலமாகப் பாதுகாக்க வேண்டினார். பின்னர் சேர நாட்டு மன்னர் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற வள்ளல்தன்மை மிக்க மன்னனிடம் சென்று பொருள் கேட்டார்.
அம்மன்னனும் இவரது புகழ், ஆற்றல் அறிந்து இவருக்கு "நன்றா' என்னும் குன்றின் மீது ஏறி கண்ணுக்கு எட்டிய தூரம் உள்ள பரப்பினையும், ஏனயை பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான். பின்னர் கபிலர் திருக்கோவலூர் வந்து பாரியின் அன்பு மகளிரை திரும்பப் பெற்று திருமுடிக்காரி மன்னனின் மைந்தர் இருவர்க்கும் மணம் முடித்து வைத்துவிட்டு, தன் கடமை நிறைவேறிய பின், தன் ஆருயிர் நண்பன் பாரியை எண்ணித் துன்பமுற்றார்.
பாரியின் பிரிவு அவரை இவ்வுலகில் மேலும் வாழ இடம் தரவில்லை. எனவே, தென் பெண்ணை ஆற்றின் நடுவே வடக்கிருந்து அமர்ந்து உயிர் துறந்தார். இவரது நினவைப் போற்றி திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் "புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்' நினைவாக ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கபிலர் விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு சூலைத் திங்கள் 17 முதல் 20 வரை இவ்விழா நடைபெறுகிறது. தன் சமகாலத்தில் வாழ்ந்த புலவர்களின் நன்மதிப்பைப் பெற்ற "பொய்யா நாவிற் கபிலன்' நினைவை நாமும் போற்றி மகிழ்வோம்.
-டி.எஸ். தியாகராசன்
பாமரன்  /  at  6:10 AM  /  கருத்துரை இடுக

Tuesday, July 28, 2015

கவைமக

தமிழர் தொன்று தொட்டே அறிவியல் புலமையுடன் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பல்வேறு ஆதாரங்களைத் தந்துகொண்டிருக்கிறது. சங்கத் தமிழர் மருத்துவத் துறையிலும் தன்னிகரில்லாப் புலமையுடன் இருந்திருக்கின்றனர். இரட்டைக் குழந்தை சில நேரங்களில் ஒட்டிப் பிறப்பதுண்டு. அப்படிப் பிறக்கும் குழந்தைகளை இன்று நவீன அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கின்றனர். ஆனால், ஆதி காலத்தில் அந்த வசதி இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அப்படியேதான் வாழவேண்டும்.
சங்க இலக்கியத்தில் கவ்வை, கவை என்கிற இரண்டு சொற்களும் இடம்பெற்றுள்ளன. கவ்வை என்பது அலர், ஆரவாரம், துன்பம் என்கிற பொருளிலும், கவை என்பது பிளவு, இரட்டை, கிளை என்கிற பொருளில் ஆளப்பட்டிருக்கின்றன. நாட்டார் வழக்காற்றில் கவ்வாகோல் என்கிற ஒன்றுண்டு. பறவைகளை அடிக்க வேடர்கள் பயன்படுத்தும் உண்டிக்கோல் என்பது இக்கவ்வாக்கோலில்தான் செய்யப்படும். ஒரு கிளை இரண்டாகப் பிரிந்து வளர்வது என்பது இதன் அடிப்படை. பிறப்பின் வினோதங்களில் ஒட்டிப்பிறத்தல் என்கிற ஒன்று உண்டு. அப்படிப் பிறந்தவர்களைக் குறிக்கவே "கவைமக' எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். குறுந்தொகையில் உள்ள கீழ்க்காணும் பாடலைப் பாடிய புலவரின் பெயர் கவை மகனார் என்பது. அக்கவை மகனாரின் பாடல் வருமாறு:

""கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இளமீ னிருங்கழி நீந்தி நீரின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையி னுயங்கும் யானது
"கவைமக' நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்ஞத் தானே''
(குறுந்.324)

தலைவன் இரவுக் குறியில் தலைவியைச் சந்திக்க வருகிறான். அவன் வருகின்ற வழியில் உள்ள நீர்நிலைகளைக் கடக்க வேண்டும். அந் நீர்நிலையில் கொடிய முதலைகள் இருக்கின்றன. அதையெல்லாம் நினைத்துத் தலைவி வருந்துகிறாள். அக்கொடிய வழியில் நீ வரவில்லையென்றாலும் வருந்துவாள். அதாவது நீ வரும் வழியை நினைத்து அத்தகைய கொடிய வழியில் வரவேண்டாம் என்றும் அஞ்சுகிறாள். அவன் தன்னைக் காண வரவில்லையென்றால் தனக்கு உண்டாகும் துன்பம் குறித்தும் ஏங்குகிறாள். இரண்டிற்கும் வருந்தும் தலைவியின் நிலை ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தையில் ஒன்று நஞ்சுண்டால், அக்குழந்தையைப் பெற்றவள் நஞ்சுண்ட குழந்தைக்கு மட்டும் தனியாக அழமுடியாது என்பதுபோல தலைவி வருந்துகிறாள் என்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி. இதனையே சற்று மாற்றி "இருதலைப் புள்ளின் ஓருயிர் அம்மே' (அகநா.12) என்பார் புலவர் கபிலர்.
ஒட்டிப்பிறந்த குழந்தையில் ஒன்று நஞ்சுண்டாலும் அது இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அக்குழந்தையின் பெற்றோர் அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நஞ்சு அருந்திய ஒரு குழந்தைக்கு மட்டும் தாய் தனியே அழ முடியாது. அத்தைகய நிலையில் தலைவி இருப்பதாகக் கூறப்படுகிறது. சூழலுக்குத்தக அறிவியல் சிந்தனையைப் புலவர் எதார்த்த உவமையாகக் கையாண்டுள்ள தன்மை போற்றத்தக்கது.
இரட்டைக் குழந்தை பிறந்தால் சில நேரங்களில் அதில் ஒன்று ஆணாகவோ ஒன்று பெண்ணாகவோ இருக்கும். ஆனால், ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் ஏதேனும் ஒரு தன்மையைச் சார்ந்ததாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதனைக் குறிக்கவும் கவைமக எனும் சொல்லைச் சங்கத் தமிழர் பயன்படுத்தி இருக்கலாம். மருத்துவ அகராதியில் "ஒட்டிப்பிறந்த குழந்தையைக் கவைமக என்ற சொல்லால் அழைக்க வேண்டும்' என்பதை இனியேனும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

- முனைவர் சோ.ராஜலட்சுமி
பாமரன்  /  at  6:53 AM  /  2 கருத்துரைகள்

2 கருத்து(கள்):

நதிமூலம்

நதிமூலம்

உலகில் தொண்ணூறு சதவிகித ஆறுகள் மலையில்தான் தோன்றுகின்றன என்பதைத் தமிழ் இலக்கியங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன. ""வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி'' (பட்டினப்பாலை-5,6), ""மலைத்தலையத் தொடுத்த மல்லல் பேரியாற்று'' (பெருங்கதை -3:24), ""கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்'' (கம்பர்-ஆற்றுபடலம்-19) என்னும் சான்றுகளில் இருந்து அறிய முடிகிறது.
பூமியின் அடிப்பகுதியில் நீர் நிறைந்துள்ளது என்பதும், அதனைக் கிணறுகள் வெட்டுவதன் மூலம் வெளிக்கொணர முடியும் என்பதும் யாவரும் அறிந்த உண்மை. ஆனால், உயரமான மலைகளின் உச்சியில் நீர் ஒழுக்குத் தோன்றி, அது பெருகி ஆறாக மாறிக் கரைபுரண்டு ஓடுவது நமக்கு வியப்பைத் தரும் செய்தி.
மழைக் காலங்களில் மலைச் சாரல்களில் பொழியும் நீர் பெருகி ஆறாக வருகிறது என்பது உண்மையாக இருப்பினும், மழையே இல்லாத கோடைக் காலத்தில் மட்டும் மலை அருவிகளில் நீர் பெருகி ஓடுவதைக் காண்கிறோம். இது எவ்வாறு இயலும்? கோடைக் காலத்தில் வரும் நீர் எங்கிருந்து வருகிறது? அந்த நதிமூலம் என்ன என்பதை ஆராய்வோம்.
19, 20-ஆம் நூற்றாண்டுகளில் பூமிஇயல் விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து ஒரு முடிவைக் கண்டுபிடித்துள்ளனர். இமயமலை போன்றவற்றில் வேண்டுமாயின் பனிக்கட்டிகள் உருகி ஆறாக வரலாம். ஆனால், உயரம் குறைந்த மற்ற மலைகளில் இருந்து நீர் எவ்வாறு வருகிறது?
"மழைக்காலத்தில் மழை நீர் பாறைகளில் உள்ள சந்துகளின் வழியாக உள்ளே சென்று தங்குகிறது. கோடைக்காலத்தில் பாறைகள் விரிவடைவதால் சந்துகளில் தேங்கியுள்ள நீர் வெளியேறி நீரோடையாகி பல நீரோடைகள் இணைந்து ஓர் அருவியாகி பின் ஆறாக உருவெடுக்கிறது' கோடைக் காலத்தில் மலையில் இருந்து நீர் பெருகுவதற்கு விஞ்ஞானிகள் கண்டு பிடித்த காரணம் இதுதான்.
இது சென்ற இரண்டு நூற்றாண்டுகட்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஆனால், இந்த உண்மை தமிழர்களால் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே அறியப்பட்டிருந்தது என்பதைப் பின்வரும் சான்றுகளால் மெய்ப்பிக்கலாம்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர்,

""இருபுனலும் வாய்ந்த மலையும் உருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'' (737)

எனும் குறளுக்கு எழுதிய விளக்கத்தில் ""இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளந்தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமை பற்றி "வாய்ந்த மலை' என்றார்'' என்று கூறியுள்ளது வியக்கத்தக்கது.
பத்துப்பாட்டினுள் ஒன்றாகிய முல்லைப் பாட்டு எனும் நூலில் அருவியைப் பற்றிக் குறிப்பிடும்போது புலவர் நப்பூதனார், ""முடங்குஇறை சொரிதரும் மாதிரள் அருவி'' (87) என்று கூறியுள்ளார். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ""மூட்டு வாய்களினின்றும் சொரிதலைச் செய்யும் பெருமையை உடைய திரண்ட அருவி'' என்று விளக்கம் அளித்துள்ளார். மூட்டுவாய் என்பது புவியியல் அறிஞர்கள் கூறிய Lip of hard rock  என்று கொள்வது பொருத்தமாக இருக்கும்.
இவற்றின் மூலம் நம் முன்னோர்கள் ஒரு பொருளைக் கூர்ந்து நோக்குவதிலும் அதன் உண்மைத் தன்மையை ஆய்ந்து அறிந்து எடுத்துரைப்பதிலும் உலக மக்கள் எவருக்கும் பின்தங்கியவர்கள் அல்லர் என்பது தெளிவாகிறது.
-கா.மு.சிதம்பரம்

பாமரன்  /  at  6:44 AM  /  கருத்துரை இடுக

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.