வாழ்க தமிழ்!

Thursday, March 13, 2014

காலைக் கல் - மாலைப் புல்

பாமரன்  /  at  6:42 PM  /  2 கருத்துரைகள்


110203d6syy772b5b79v6u


இந்த கிராமத்துப் பழமொழியை அதிகம் அறிந்திருக்க மாட்டோம். அறிந்த சிலரோ இதன் பொருளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறும் தனக்கு தோன்றியவாறும் மாற்றிக்கூறுகின்றனர்.  ‘காலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும் என்பதால் புல் தரையின்மேல் உட்காரலாம், மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்’ என்று சிலர் பொருள் கூறுவர்.  காலையில் கல்’ என்றால் காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும்.  ‘மாலைப் புல்’ என்பது மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் (புல்லுதல் – இன்பம் அனுபவித்தல்). அதாவது விளையாட்டு, பொழுதுபோக்கு  என்று மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் ஆகும்.


பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Thursday, March 13, 2014

2 comments:

 1. அறியாத பழமொழி, அறியத் தந்தமைக்கு நன்றி !
  இதைத்தான் பாரதி,
  காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
  மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்தி கொள்ளு பாப்பா
  என்று பாடி இருக்கிறார் போலும்.
  அப்புறம் ஒரு விஷயம், இந்த காலத்து பசங்க
  'காலையில் கள், மாலையில் ஃபுல்' அப்படீன்னு அர்த்த படுத்திக்க வில்லையேன்னு சந்தோஷப் படுங்க :-)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் திருவாளர் கரிகாலன் அவர்களே! தங்கள் வருகைக்கு நன்றி!

   Delete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.