இந்தப்பழமொழியை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அதாவது நமக்கு நெருக்கமில்லாதவர்கள் யாராவது திடீரென்று நெருங்கி வந்து உதவி செய்தால் அவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அர்த்தம், இந்த பொருளை உணர்த்துவதாகச் சொல்லப்பட்ட பழமொழி இது. ஆனால் இதன் உண்மையான பொருள், சோழியன் என்பது அந்த காலத்தில் சொல்லப்பட்ட பிராமணர் பிரிவுகளில் ஒரு வகை அவர்கள் நீண்ட குடுமி வைத்திருப்பார்கள், அப்படி நீண்ட தலைமுடியை வைத்திருந்தாலும் தலைச்சுமை தூக்கும்போது சும்மாடு வைத்துதான் ஆக வேண்டும். நீண்ட குடுமியாக (தலைமுடி) இருந்தாலும் அதை தலைச்சுமைக்கு சும்மாடாகப் பயன்படுத்த முடியாது என்பதை உணர்த்தவே இந்த சொல் வழக்கு உருவாகியிருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் சொற்கள் மருவி இந்த காலத்திற்கு ஏற்றவாறு பொருளும் மாறிவிட்டன.
0 கருத்து(கள்):