வாழ்க தமிழ்!

Monday, March 17, 2014

பறவைக்குப் பயந்து விதைக்காமலிருக்காதே!

பாமரன்  /  at  6:57 AM  /  2 கருத்துரைகள்


 1.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும். - தமிழ்நாடு
 2.  பறவைக்குப் பயந்து விதைக்காமலிருக்காதே! - ஜப்பான்
 3.  எல்லாப் புண்களுக்கும் காலம்தான் நல்ல களிம்பு. - வேல்ஸ்
 4.  வெறும் காகிதமானாலும் இரண்டு பேர் பிடித்தால் இன்னும் இலகுவாகத் தூக்கலாம்.   -  கொரியா
 5.  வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவனிடம் உனது வெற்றியைப் பற்றிப் பேசுவது,    அவனது பகைமையைச் சம்பாதிப்பதாகும்.  - சீனா
 6.  திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் - மன்னிக்கப்படாத பாவங்கள். -  செக்கோஸ்லோவேகியா
 7.  இதயம் மட்டும் உறுதியாக இருந்தால் சுண்டெலியால்கூட யானையைத் தூக்க முடியும்.    - திபெத்
 8.  கருமியிடம் யாசித்தல், கடலில் அகழி வெட்டுவது போன்றது. - துருக்கி
 9.  நீ நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய்; நாளையே இறந்து விடுபவனைப் போல சிந்தனை செய். - பல்கேரியா
 10.  தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால், ஓராயிரம் முத்துக்கள்கூட மதிப்புள்ளது ஆகாது. - பாரசீகம்தொகுப்பு: முத்து ஆனந்த், வேலூர்.

பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Monday, March 17, 2014

2 comments:

 1. பல்கேரியா - சிறப்பு...

  நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வணக்கம் நண்பர்களே
  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.