பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு கடற்கரை நகரத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய மாளிகை. அதன் சொந்தக்காரனான மீனவக் கிழவன் தன் முன்னால் பணக்குவியலுடன் அமர்ந்திருந்தான்.
அர்ஜுனன் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
“கிருஷ்ணா! இதென்ன நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்களைக் கொல்லும் இந்த மீனவனுக்கு இத்தனை வசதியான வாழ்வா?” என்று அர்ஜுனன் கிருஷ்ணரைக் கேட்டான்.
கிருஷ்ணர் பதில் கூறவில்லை. மாதங்கள் பல சென்றன. இருவரும் ஒரு காட்டு வழியே நடந்தபோது யானை ஒன்று மரண வேதனையில் இருந்தது. படுத்துக் கிடந்த யானையை பல்லாயிரம் எறும்புகள் கடித்துக் கொண்டிருந்தன.
“முன்பொரு முறை மீனவக் கிழவனைப் பார்த்தபோது கேட்டாயல்லவா? இதோ இந்த யானைதான் மீனவக் கிழவன். இறந்து, யானையாகப் பிறந்தான். அவன் கொன்ற மீன்கள் எறும்புகளாயின. அவைதாம் அவனைக் கடிக்கின்றன.”
“கடவுளின் சந்நிதியில் சற்று தாமதமானாலும் செய்த தவறுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.”
“நல்லது செய்தால் பரிசும் கிடைக்கும்” என்றார் கிருஷ்ணர் புன்னகை புரிந்தவாறே.
0 கருத்து(கள்):