வாழ்க தமிழ்!

Friday, March 14, 2014

உண்மையில் இதுதான் வாழ்க்கை..!

பாமரன்  /  at  7:49 PM  /  1 கருத்துரை                   தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. "ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.
அப்பா இருக்கும் தைரியத்தில்.. "எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!" என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது.
பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். "என்னைக் கவனி..!"
என்றார் அப்பா. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்.. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார்.
"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Friday, March 14, 2014

1 comment:

  1. ISO வகுப்புகளில் இதை சொல்வதுண்டு வேறு விதமாக...

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.