வாழ்க தமிழ்!

Monday, March 17, 2014

பறவைக்குப் பயந்து விதைக்காமலிருக்காதே!

 1.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும். - தமிழ்நாடு
 2.  பறவைக்குப் பயந்து விதைக்காமலிருக்காதே! - ஜப்பான்
 3.  எல்லாப் புண்களுக்கும் காலம்தான் நல்ல களிம்பு. - வேல்ஸ்
 4.  வெறும் காகிதமானாலும் இரண்டு பேர் பிடித்தால் இன்னும் இலகுவாகத் தூக்கலாம்.   -  கொரியா
 5.  வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவனிடம் உனது வெற்றியைப் பற்றிப் பேசுவது,    அவனது பகைமையைச் சம்பாதிப்பதாகும்.  - சீனா
 6.  திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் - மன்னிக்கப்படாத பாவங்கள். -  செக்கோஸ்லோவேகியா
 7.  இதயம் மட்டும் உறுதியாக இருந்தால் சுண்டெலியால்கூட யானையைத் தூக்க முடியும்.    - திபெத்
 8.  கருமியிடம் யாசித்தல், கடலில் அகழி வெட்டுவது போன்றது. - துருக்கி
 9.  நீ நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய்; நாளையே இறந்து விடுபவனைப் போல சிந்தனை செய். - பல்கேரியா
 10.  தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால், ஓராயிரம் முத்துக்கள்கூட மதிப்புள்ளது ஆகாது. - பாரசீகம்தொகுப்பு: முத்து ஆனந்த், வேலூர்.
பாமரன்  /  at  6:57 AM  /  2 கருத்துரைகள்

இயல்(கள்): முழுமையாக வாசிக்க தொடரவும்»

2 கருத்து(கள்):

Sunday, March 16, 2014

எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது! - யார் அறிவாளி?

ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.
புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன்.
அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். "நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்" என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான்.
அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின.
மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன.
பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான்.
கிழப்பேய் ஒன்று, "ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்" என்று கெஞ்சியது.
இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.
பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், "நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்" என்று கதை அளந்தான் அவன்.
"ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன.
"கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்" என்றான் அவன்.
கிழப்பேய் அவனைப் பார்த்து, "ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?" என்று கேட்டது.
"ஐம்பது மூட்டை எள்?" என்றான் அவன்.
"ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்" என்று கெஞ்சியது அது.
உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்" என்றான் அவன்.
"எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்" என்றது அந்தப் பேய்.
மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான்.
அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன.
பேய்களைப் பார்த்து அவன், "சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்" என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான்.
நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.
சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது.
"சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்" என்று கேட்டது அது.
நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய்.
"நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது" என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின.
புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?" என்று கேட்டது.
"அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்" என்றது ஒரு பேய்.
"போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்" என்று புறப்பட்டது புதுப்பேய்.
"வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்" என்று எச்சரித்தன மற்ற பேய்கள்.
உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.
வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது.
புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன்.
தன் வேலைக்காரனைப் பார்த்து, "டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்" என்று உரத்த குரலில் கத்தினான் அவன்.
பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. "ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?" என்று குழம்பியது அது.
மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான்.
அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்" என்று கெஞ்சியது.
தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், "என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபத்துடுன் கத்தினான்.
இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, "எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன" என்று பொய் சொன்னது.
"எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று இடிக்குரலில் முழங்கினான் அவன்.
"பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?" எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.
உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்" என்று நடுங்கியபடியே கேட்டது அது.
"இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு." என்று விரட்டினான் அவன்.
எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது.
அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது.
"என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?" என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய்.
"உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது" என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய்.
"அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?" என்று கேட்டது ஒரு கிழப் பேய்.
"நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்" என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய்.
"என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது" என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.
எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன.
"தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது" என்று மகிழ்ந்தான் அவன்.
- கூடல் தளத்தில் படித்த கதை இது.
பாமரன்  /  at  8:23 AM  /  1 கருத்துரை

1 கருத்து(கள்):

Saturday, March 15, 2014

இராவணன் - அறிந்ததும் அறியாததும்

085
பாமரன்  /  at  5:42 PM  /  கருத்துரை இடுக

085

இயல்(கள்): , , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

நல்ல நட்பு - கண்ணன் - குசேலன் - தீநட்பு - துருபதன் - துரோணர்

032
033
034
பாமரன்  /  at  5:36 PM  /  கருத்துரை இடுக

032
033
034

0 கருத்து(கள்):

இமயமலையின் அரசன் இமவான் - படித்ததில் பிடித்தது

085
பாமரன்  /  at  3:00 PM  /  1 கருத்துரை

085

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

1 கருத்து(கள்):

தர்மத்தை நிர்ணயிப்பது மறையே!

016
பாமரன்  /  at  8:00 AM  /  கருத்துரை இடுக

016

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

நல்லது செய்தால் பரிசும் கிடைக்கும்

பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு கடற்கரை நகரத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய மாளிகை. அதன் சொந்தக்காரனான மீனவக் கிழவன் தன் முன்னால் பணக்குவியலுடன் அமர்ந்திருந்தான்.

அர்ஜுனன் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
“கிருஷ்ணா! இதென்ன நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்களைக் கொல்லும் இந்த மீனவனுக்கு இத்தனை வசதியான வாழ்வா?” என்று அர்ஜுனன் கிருஷ்ணரைக் கேட்டான்.
கிருஷ்ணர் பதில் கூறவில்லை. மாதங்கள் பல சென்றன. இருவரும் ஒரு காட்டு வழியே நடந்தபோது யானை ஒன்று மரண வேதனையில் இருந்தது. படுத்துக் கிடந்த யானையை பல்லாயிரம் எறும்புகள் கடித்துக் கொண்டிருந்தன.

முன்பொரு முறை மீனவக் கிழவனைப் பார்த்தபோது கேட்டாயல்லவா? இதோ இந்த யானைதான் மீனவக் கிழவன். இறந்து, யானையாகப் பிறந்தான். அவன் கொன்ற மீன்கள் எறும்புகளாயின. அவைதாம் அவனைக் கடிக்கின்றன.”

கடவுளின் சந்நிதியில் சற்று தாமதமானாலும் செய்த தவறுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.”

நல்லது செய்தால் பரிசும் கிடைக்கும்” என்றார் கிருஷ்ணர் புன்னகை புரிந்தவாறே.பாமரன்  /  at  3:00 AM  /  கருத்துரை இடுக

பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு கடற்கரை நகரத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய மாளிகை. அதன் சொந்தக்காரனான மீனவக் கிழவன் தன் முன்னால் பணக்குவியலுடன் அமர்ந்திருந்தான்.

அர்ஜுனன் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
“கிருஷ்ணா! இதென்ன நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்களைக் கொல்லும் இந்த மீனவனுக்கு இத்தனை வசதியான வாழ்வா?” என்று அர்ஜுனன் கிருஷ்ணரைக் கேட்டான்.
கிருஷ்ணர் பதில் கூறவில்லை. மாதங்கள் பல சென்றன. இருவரும் ஒரு காட்டு வழியே நடந்தபோது யானை ஒன்று மரண வேதனையில் இருந்தது. படுத்துக் கிடந்த யானையை பல்லாயிரம் எறும்புகள் கடித்துக் கொண்டிருந்தன.

முன்பொரு முறை மீனவக் கிழவனைப் பார்த்தபோது கேட்டாயல்லவா? இதோ இந்த யானைதான் மீனவக் கிழவன். இறந்து, யானையாகப் பிறந்தான். அவன் கொன்ற மீன்கள் எறும்புகளாயின. அவைதாம் அவனைக் கடிக்கின்றன.”

கடவுளின் சந்நிதியில் சற்று தாமதமானாலும் செய்த தவறுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.”

நல்லது செய்தால் பரிசும் கிடைக்கும்” என்றார் கிருஷ்ணர் புன்னகை புரிந்தவாறே.0 கருத்து(கள்):

Friday, March 14, 2014

சோழியன் குடுமி சும்மாஆடாது

  kudumi                
                      இந்தப்பழமொழியை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அதாவது நமக்கு நெருக்கமில்லாதவர்கள் யாராவது திடீரென்று நெருங்கி வந்து உதவி செய்தால் அவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அர்த்தம், இந்த பொருளை உணர்த்துவதாகச் சொல்லப்பட்ட பழமொழி இது. ஆனால் இதன் உண்மையான பொருள், சோழியன் என்பது அந்த காலத்தில் சொல்லப்பட்ட பிராமணர் பிரிவுகளில் ஒரு வகை அவர்கள் நீண்ட குடுமி வைத்திருப்பார்கள், அப்படி நீண்ட தலைமுடியை வைத்திருந்தாலும் தலைச்சுமை தூக்கும்போது சும்மாடு வைத்துதான் ஆக வேண்டும். நீண்ட குடுமியாக (தலைமுடி) இருந்தாலும் அதை தலைச்சுமைக்கு சும்மாடாகப் பயன்படுத்த முடியாது என்பதை உணர்த்தவே இந்த சொல் வழக்கு உருவாகியிருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் சொற்கள் மருவி இந்த காலத்திற்கு ஏற்றவாறு பொருளும் மாறிவிட்டன.
பாமரன்  /  at  8:02 PM  /  கருத்துரை இடுக

உண்மையில் இதுதான் வாழ்க்கை..!                   தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. "ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.
அப்பா இருக்கும் தைரியத்தில்.. "எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!" என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது.
பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். "என்னைக் கவனி..!"
என்றார் அப்பா. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்.. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார்.
"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.பாமரன்  /  at  7:49 PM  /  1 கருத்துரை                   தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. "ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.
அப்பா இருக்கும் தைரியத்தில்.. "எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!" என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது.
பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். "என்னைக் கவனி..!"
என்றார் அப்பா. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்.. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார்.
"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

1 கருத்து(கள்):

Thursday, March 13, 2014

நந்தவனத்தில் ஓர் ஆண்டி...

பாடல்

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு
"-
 கடுவெளிச் சித்தர்

விளக்கம்

மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கைப் பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவெளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய்(பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.
தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்)
மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.

தத்துவம்

சீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை நகைச்சுவைப் பாடலைப் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்...
பாமரன்  /  at  9:58 PM  /  கருத்துரை இடுக

காலைக் கல் - மாலைப் புல்

110203d6syy772b5b79v6u

இந்த கிராமத்துப் பழமொழியை அதிகம் அறிந்திருக்க மாட்டோம். அறிந்த சிலரோ இதன் பொருளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறும் தனக்கு தோன்றியவாறும் மாற்றிக்கூறுகின்றனர்.  ‘காலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும் என்பதால் புல் தரையின்மேல் உட்காரலாம், மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்’ என்று சிலர் பொருள் கூறுவர்.  காலையில் கல்’ என்றால் காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும்.  ‘மாலைப் புல்’ என்பது மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் (புல்லுதல் – இன்பம் அனுபவித்தல்). அதாவது விளையாட்டு, பொழுதுபோக்கு  என்று மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் ஆகும்.

பாமரன்  /  at  6:42 PM  /  2 கருத்துரைகள்

ஒளவையின் பாடலில் திருக்குறள் விளக்கம்

First Published : 09 March 2014 01:30 AM IST             திருக்குறள் தமிழர் பண்பாட்டின் பிழிவாகும். குறள் மேன்மேலும் பொருள் சிறக்குமாறு, "தேடல்' உத்திக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பலர், ஒரு குறளுக்கு வெவ்வேறு பொருள் காண முயல்கின்றனர். குறளுக்குப் பொருள் தேடும்பொழுது, அது தோன்றிய சமுதாய நிலையும், சங்க இலக்கியப் பின்புலமும் தெரிந்திருத்தல் தெளிவு தரும்.

""தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று'' (236)

இதற்கு, "பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; புகழ் இலாதார் பிறத்தலைவிடப் பிறவாமையே நன்று' என உரை கண்டனர். அது தவறு. ஏனெனில், பிறத்தலும் பிறவாமையும் அவரவர் கையில் இல்லை. பரிமேலழகர் இதனையொட்டி, "மக்களாய்ப் பிறக்கின் அதற்கேற்ப புகழுடன் பிறக்க வேண்டும்; அஃதிலாதார் மக்களாய்ப் பிறத்தலைவிட, விலங்காய் பிறத்தல் நன்று' என உரை எழுதியுள்ளார். இதற்குப் பொருத்தமான பொருளை ஒளவையின் புறப்பாடல் ஒன்று விளக்குகிறது.

""...... ..... நெடுமான் அஞ்சி
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாதிருக்கவும் வல்லன், மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே''
(புறம்.315)

இல்லிறை - வீட்டின் முன்னுள்ள இறப்பு. ஞெலிகோல் - தீக்கடைகோல். தீக்கடைகோல் வீட்டின் முன்னுள்ள இறப்பிலே செருகப்பட்டிருக்கும். அப்போது, அதன் ஆற்றல் வெளியே தோன்றாது இருக்கும். அதனைக் கடைந்து தீயை உண்டாக்கிவிட்டாலோ, கனன்று கூவி எரியும் நெருப்பு வெளிப்படும். அதியமான் நெடுமானஞ்சியும் தன் ஆற்றல் தெரியாதவாறு அடக்கி இருக்கவும் வல்லவன்; போரில் வெளிப்பட்டாலோ, தீக்கடைகோலிலிருந்து வெளிப்படும் நெருப்புப் போலத் தன் ஆற்றலை வெளிப்படுத்தவும் வல்லவன் ஆவான்.
இதன் பழையவுரை தெளிவாக உளது. ""அவன் வீட்டின் இறப்பிற் செருகப்பட்ட தீக்கடைகோலைப் போலத் தன்வலி வெளிப்பட வேண்டாத காலத்து அடங்கி இருக்கவும் வல்லன். ஞெலிகோலாலே கக்கப்பட்டுத் தோன்றுகின்ற காட்டுத் தீயைப்போல, வெளிப்படத் தோன்ற வேண்டிய காலத்துத் தோன்றவும் வல்லன்'.
இதனடிப்படையில் குறளுக்குப் பொருள் காணமுடியும். தோன்றிற் புகழொடு தோன்றுக - ஒரு காரியத்திற் புகுந்தால் அதில் மிகச்சிறந்து விளங்குமாறு தோன்ற வேண்டும். அவ்வாறமையாதெனில், அக்காரியத்தில் புகாதிருத்தலே நன்று. அஃதின்றேல் அக்காரியத்தில் பிறரினும் மேம்பட்டு விளங்க வேண்டும். அதற்குரிய ஆற்றலோ, திறமையோ இல்லாவிட்டால், அதில் தோன்றி - அதாவது அக்காரியத்தில் புகுந்து, அவமானப்படுவதினின்றும் நீங்குமாறு, முதலிலேயே அதிற் புகாவாறு தவிர்ப்பது நல்லது.
தோன்றுதல் - விளங்கித் தோன்றுதல்; புகழுடன் மேம்பட்டுத் திகழ்தல். "தோன்றுதல்' என்ற சொல்லாட்சி ஒளவையின் பாடலிற் போலக் குறளிலும் உள்ளதை ஒப்பிட்டறிதல் வேண்டும். இவ்வாறு ஒளவையின் பாடலால், குறளின் பொருள் தெளிவுறுகிறது எனலாம்.
பாமரன்  /  at  6:32 PM  /  1 கருத்துரை

Saturday, March 8, 2014

தண்டித்தால் தவறில்லை...

பாமரன்  /  at  9:59 PM  /  கருத்துரை இடுக

இயல்(கள்): முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.