புகழுக்காய் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. சிலருக்கு தானாய் அமைகின்றது. சிலர் அதனைத் தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். புகழ்ச்சியாய் இருந்தாலும் அல்லது இகழ்ச்சியாய் இருந்தாலும் கூட அதில் நமக்கு நன்மையைத் தரக்கூடியவற்றின் வினையூக்கியின் மீதே நம்பார்வை அமைதல் வேண்டும்.
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று ”
கதை:
ஒரு ஏரிக்கரையில் இருந்த மாமரத்தின் அடியில், அவ்வழியே சென்ற நரி இளைப்பாற ஒதுங்கியது. அவ்வேளையில் காற்றில் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது. அதைச் சுவைத்த நரி, "ஆஹா! பழம் தித்திப்பாக இருக்கிறதே!' என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் தொங்கின. மேலும் சில பழங்களைச் சுவைக்க ஆசை எழுந்தது.
மரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தைப் புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது.
காகத்தை பார்த்து, ""தங்கம் போன்று பொன்னிறமாக இருக்கும் அன்புக்காகமே! நல்ல மயிலின் அழகும், குயிலின் குரலும் கொண்டு விளங்குகிறாயே!'' என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியது.
இதைக்கேட்ட காகம்,"" உத்தமமான குலத்தில் பிறந்திருப்பதால் உமக்கு என் அருமை பெருமை எல்லாம் தெரிந்திருக்கிறது. பாவம்! நடந்து வந்த களைப்பும், அயர்வும் உம் முகத்தில் தெரிகிறது. உம் வயிறு நிறையும்படி நன்கு மாம்பழங்களைப் புசியுங்கள்!'' என்று கூறி மாம்பழங்களை கொத்திக் கிழே போட்டது.
நரி, ""என்ன நாம் சொல்லி விட்டோம். மயில், குயில் என்று புகழ்ந்து பேசினோம். அவ்வளவுதானே! அதற்காக நம்மை உத்தமகுலம் என்று புகழ்ந்ததோடு, பசிக்கு பழங்களும் தந்து அமர்க்களப்படுத்தி விட்டதே!'' என்று எண்ணியவாறே சுவைத்து மகிழ்ந்தது.
தங்களுக்கு ஏதோ கிடைக்கிறதே என்பதற்காக, தகுதியற்றவர்களைப் புகழ்ந்து பேசுவதை தவிருங்கள்.
ஆம் உண்மைதான்
ReplyDeleteஅருமை... உண்மை...
ReplyDeletepugazhchi oru bothai. athu naama adikira sarakkai vida kodumayaana visam. thanakkaana neram varum varai kaathirukkanum, aanaal athu ilava mara kuruvi pola irukka kudaathu.
ReplyDelete