வாழ்க தமிழ்!

Saturday, November 16, 2013

களவும் கற்று மற

பாமரன்  /  at  1:46 PM  /  1 கருத்துரை

Good_vs__Evil_by_Sugargrl142-2jb21fj               கிராமப்புரங்களில் வழங்கும் பழமொழிகள் பெரும்பாலும் நடைமுறையில் பொருள்மாறி வழங்குவதாகவே இருக்கிறது. அது காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள்தான். ஆனால் அந்தப் பழமொழிகளைத் தவறாகப் புரிந்துகொண்டு தன்னுடைய தவறுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்.  ‘களவும் கற்று மற’ எனும் பழமொழியும் இந்த அளவில்தான் பொருள்மாறி இருக்கிறது. வாழ்க்கையில் நன்மை தீமைகள் உள்ளிட்ட எல்லா விதமான செயல்களையும் கற்று மறந்துவிட வேண்டும், அதுதான் நிறைவான வாழ்க்கை என்ற பொருளில் நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் இதன் உண்மையான பொருள்  ‘களவும் அகற்று அற’ என்பதுதான். அதாவது  தீயவைகளை கண்டறிந்து அதை நீக்கிவிட்டு நமக்குத் தேவையான நல்ல செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து கற்றுக்கொள் என்பதே அதன் பொருள்.

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Saturday, November 16, 2013

1 comment:

  1. இதுவரை கேள்விப் பட்டதில்லை. அப்படியும் இருக்கலாம் நன்றி

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.