வாழ்க தமிழ்!

Saturday, November 16, 2013

பிறப்பினால் எவர்க்கும் உலகில் பெருமை வாராதப்பா!

பாமரன்  /  at  11:22 AM  /  3 கருத்துரைகள்

ஒரு நாள் கெளதம புத்தர் காட்டு வழியாக வெயிலில் நடந்து களைத்து மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.., இதை கவனித்த ஒரு ஆடுமேக்கும் சிறுவன் அவரை சுற்றி மரகிளைகளை நட்டு, ஆட்டின் மடிக்காம்பை கறந்து அவர் வாயில் சில பால் துளிகளை விழவிட்டான். அந்த பால் தொண்டையில் விழுந்ததும் கெளதமர் கண் விழித்து, தனது திருவோட்டில் கொஞ்சம் பாலை கறந்து தரும்படி கேட்டார். தான் தீண்டாதவன் என்பதால் சிறுவன் மறுத்தான். சாதிவேற்றுமையை
எண்ணி, வருந்தி இவ்வாறு கூறினார்.

"இடர் வரும்போதும் உள்ளம்
இரங்கிடும் போதும்
உடன்பிறந்தவர்போல் மாந்தர்
உறவு கொள்வர் அப்பா..!"

"ஓடும் உதிரத்தில் வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் சாதி
தெரிவதுண்டோ அப்பா..!"

"எவர் உடம்பினிலும் சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே
இயற்கை குணமப்பா..!"

"பிறப்பினால் எவர்க்கும் உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் நல்ல
செய்கை வேண்டுமப்பா..!"

பின்னர் சிறுவனும் மனமுவந்து பாலை கறந்து கொடுக்க.. கெளதமர் அதை அருந்தி களை தளர்சி பெற்றார்.

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Saturday, November 16, 2013

3 comments:

 1. அதனால்தான் அவரின் போதனைகள் இன்றும் போற்றப்படுகிறது

  ReplyDelete
 2. நல்ல கருத்து .மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்

  ReplyDelete
 3. தீண்ட தகாதவர் என்பதை யார் கடை பிடித்தாலும் , அவர் விலங்கினும் கீழானவர்.
  விலங்கு கூட அப்படி செய்வதில்லை.
  அறிவியல் , மருத்துவம் படித்தும் இங்குள்ள பலர், ஒரு கூட்டம் சொல்லி வைத்து போனதை பிடித்து கொண்டு தொங்கி , அந்த கூட்டம் விட்டாலும் நாங்கள் விட மாட்டோம் என்று திரிகிறார்கள்...
  இவர்களை மனித பதர்கள் என்று சொல்லலாமா ?
  அது என்ன தீண்ட தகாதவர் ? அவர்கள் செய்த உழைப்பு, அதனால் வரும் உணவு மட்டும் தீண்ட தகுதி எப்படி பெறுகிறது.
  சாதி இருக்கிறது என்று சொல்பவனும் உள்ளானேடா என்று புரட்சி கவிஞர் கூறினார்.
  படிக்காதவன் செய்தால் பரவாயில்லை.. படித்தவன் செய்தால் ..அவன் படித்ததெல்லாம் வீணாக போய் விட்டதே. அவலம் ..

  ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.