வாழ்க தமிழ்!

Saturday, November 16, 2013

கட்டி கொடுத்த உணவும்.. சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது

பாமரன்  /  at  10:28 AM  /  கருத்துரை இடுக                       பார்வையற்ற ஒருவன் இருளிள் போவதை கண்டு இன்னொருவன் விளக்கொன்றை கொடுத்தான். "எனக்கு எப்போதுமே இருள்தானே.!" என்றான் பார்வையற்றவன். "உனக்காக அல்ல.. எதிரே வருபவர்கள் உன்னை விலத்தி போவதற்காகவே..!" என்றான் அவன். இவனும் சம்மதித்து அந்த விளக்கை வாங்கி கொண்டு போனான். சிறிது தூரம் சென்றதும் எதிரே ஒருவன் வந்து வேகமாக மோதிக்கொண்டான். பார்வையற்றவன் கேட்டான்.
"விளக்கின் வெளிச்சம் இருந்தும் உனக்கு நான் வந்தது தெரியவில்லையா..?" என்று. 
அதற்கு அவன்.. "உன் விளக்கு எப்பவோ அனைந்து விட்டது..!" என்று சிரித்தான். அடுத்தவன் அறிவு ஒருபோது எனக்கு உதவாது என்பதை புரிந்து. விளக்கை வீசிவிட்டு.. குச்சியை எடுத்து கொண்டு பாடிக்கொண்டே போனான் பார்வையற்றவன்..!

கட்டி கொடுத்த உணவும்.. சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Saturday, November 16, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.