வாழ்க தமிழ்!

Sunday, November 17, 2013

தேவதை மீதோ கடவுள் என்ற பெயரின் மீதோ சில எதிர்பார்ப்புகளை சுமத்தி இருந்தால் அது யார் குற்றம்..?

பாமரன்  /  at  11:16 AM  /  கருத்துரை இடுக

கடவுள் உன்னை கவனிக்கிறார். 


ஒரு தோட்டத்தில் மாம்பழங்கள் கனிந்து தொங்கியதை பார்த்த சங்கரப்பிள்ளை அங்கே ரகசியமாக போனார். முதல் பழத்தை அவர் பறித்ததும் "கடவுள் உன்னை கவனிக்கிறார்." என்ற ஒரு குரல் வந்தது. திடுக்கிட்டார். அக்கம் பக்கம் பார்த்து விட்டு யாரும் இல்லை. பிரமையென்று நினைத்து அடுத்தடுத்த பழங்களை பறித்தார்..
"நான்கு பழங்களுக்கு மேல் கடவுள் சும்மா இருக்கமாட்டார்.." என்று மறுபடியும் அதே குரல் வந்தது. சங்கரப்பிள்ளை சட்டென குரல் வந்த திசைக்கு திரும்பினார்.. அங்கே மேலே ஒரு கிளி இருப்பதை பார்த்து புன்னகைத்தார்.
"கடவுள் கவனிப்பதாக மிரட்டியது நீ தானா..?"
"ஆம் " என்றது கிளி..
செல்லகிளியே உன் பெயர் என்ன..!
"தேவதை..!"
"கிளிக்கு தேவதை என்ற பெயரா வினோதமாய் இருக்கே.!" என்றார் சங்கரப்பிள்ளை.
"இந்த தோட்டகாரன் நாய்க்கு கடவுள் என்று பெயர் வைத்ததை விடவா..?" என்று
திருப்பி கேட்டது கிளி.
சங்கரப்பிள்ளையின் கதி அங்கே என்ன ஆகி இருக்கும் என்பது நமக்கு தேவை இல்லை. ஆனால் சங்கரப்பிள்ளை போல் பலர் தேவதை மீதோ கடவுள் என்ற பெயரின் மீதோ சில எதிர்பார்ப்புகளை சுமத்தி இருந்தால் அது யார் குற்றம்..?

பகிர்
இயல்(கள்): , , , இதழ் வெளியான நாள்: Sunday, November 17, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.