வாழ்க தமிழ்!

Tuesday, November 19, 2013

என்னைப் பார் யோகம் வரும்!

பாமரன்  /  at  6:28 AM  /  1 கருத்துரைதலைப்பை எங்கோ கேள்விப்பட்டது மாதிரி நினைப்பு எனக்கு. உங்களுக்கும்தான் என்று எண்ணுகிறேன். இது எந்த அளவுக்கு மெய் என நான் அறியேன். ஆனால் அதிலிருந்தும் நாம் ஒன்றை அறிந்திட விழைய வேண்டும். அது நம்பிக்கை. நம்மில் சிலர் நம்மை நாமே நம்புகிறோம். 
கிராமங்களில் இதைப்போன்ற நம்பிக்கை இருக்கோ இல்லையோ, நகரங்களில் இருக்கத்தான் செய்கிறது. பார்க்கும் போது யோகம் வரும் என்றால் இப்பெயரில் நாம் மற்றவர்களைக் கடிந்துக் கொள்ளும் போதும் அவர்களுக்கு யோகம்தானோ?
மனிதன் மற்றவர்களுக்கு பாடம் புகட்ட பல்வேறு விலங்கினத்தை உவமையாகப் பயன்படுத்துகிறான். அவ்விலங்கினங்கள் நம்மை (மனிதன்) உவமையாகப் பயன்படுத்தைனால் என்ன ஆகும்?

( என்னாலும் முடியும் - இது நம்பிக்கை 

 என்னால் மட்டும்தான் முடியும் இது அவநம்பிக்கை) 

சிலர் இறையை நம்புகிறோம். ஒவ்வொரு விலங்குகளும், ஒவ்வோரு மனிதர்களும் நமக்கு ஏதேனும் ஒரு புதிய பாடத்தைக் கற்றுத்தருகின்றார்கள். நாம் அவற்றைக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். கண்ணதாசன் கூட குறிப்பிடுகின்றார் “பிறருடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்.ஏனெனில், அனைத்து தவறுகளையும் உன்னால் செய்ய இயலாது” என்று. நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு விழைவிப்பவை தாழ்வுமனப்பான்மையும், தலைக்கனமும் தான். அதனை விலக்கிட முனைவோம்.

கதை:

ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் உலகின் எதார்த்தங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன், "குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.

அதற்கு அந்த குரு "கழுதையிடமிருந்து தான்..." என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் "என்ன கழுதையிடமிருந்தா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.

"ஆமாம், அதனிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா? காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் தானே! அதை வைத்து தான்" என்று சொன்னார்.

அப்போது மற்றவன் "இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு" என்று கேட்டான். அதற்கு குரு "ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.

சிந்தனை:

நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது - கதே

நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி

பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது! - நேதாஜி

சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது! -ஏங்கல்ஸ்

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் – சாக்ரடீஸ்

கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன், மகா அயோக்கியன்! -பெரியார்

பகிர்
இயல்(கள்): , , , , , , , இதழ் வெளியான நாள்: Tuesday, November 19, 2013

1 comment:

  1. நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது - ///உண்மையே

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.