வாழ்க தமிழ்!

Monday, November 18, 2013

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்..! 1 - மணத்தக்காளி கீரை

பாமரன்  /  at  6:28 AM  /  3 கருத்துரைகள்                            இக் கீரை அதிக மருத்துவ குணம் கொண்டது.மணத்தக்காளிக்குத் தனியாக விதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கடைகளில் கிடைக்கும் மணத்தக்காளி வற்றலில் இருந்து விதைகளை உதிர்த்து எடுக்கலாம். கீரையில் இருக்கும் பழங்களை
தண்ணீரில் பிசைந்து விதைகளை பிரித்தெடுத்து காய வைத்தும் சேகரிக்கலாம்.

நன்றாக வெயில் படும் இடத்தில் இக்கீரையை வளர்க்க வேண்டும். இதை வளர்க்க செம்மண்ணும், மணலும் கலந்து, கொஞ்சம் சாண உரமும் கலந்து மண் தொட்டிகளிலோ, தகர டப்பாக்களிலோ, பிளாஸ்டிக் வாளிகளிலோ விதைகளை தூவி வளர்க்கலாம். வளர்ந்ததும் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மருத்துவகுணம்:

இக்கீரையானது வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுப்புண்ணுக்கும் சிறந்த மருந்தாகும். மேலும் சளி, ஆஸ்துமா போன்ற தொல்லைகளையும் நீக்கும். அதனால் வாரத்தில் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதன் பழங்களை அப்படியேயும் சாப்பிடலாம். மிகவும் நல்லது.

நல்லவை உண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் !
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்..!


பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Monday, November 18, 2013

3 comments:

 1. வணக்கம்

  பயனுள்ள தகவல் பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி... தங்கள் வலைதளம் நன்றாய் உள்ளது... தங்கள் எழுத்தர்பணி சிறக்கட்டும்... வாழ்க வளமுடன்

   Delete
 2. நல்லதை சொன்னதுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

  ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.