தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் தூக்கணாங்குருவி முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பன
இது ஊர்க்குருவி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும். ஆனால் இதன் மேல் தலை, மார்பு ஆகியன மஞ்சளாக இருக்கும். வயல்வெளி போன்ற இடங்களில் இது திரள்களாகக் கூடி வாழும்.முட்டையிடும் காலங்களில் இது மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். கூடு கட்டிக் குஞ்சு பொரிக்காதபோது நீர் ஆதாரங்களுள்ள அடைவிடங்களில் கூடி இவை இரவைக் கழிக்கும்.
கோடையில் ஓர் கிணற்றருகில் அல்லது குளக்கரையிலுள்ள ஈச்சமரம் அல்லது கருவேலமரம் அல்லது இலந்தை மரத்தில் இவை கூடு கட்டும். கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளங்கட்டி அதில் முட்டையிடும்; இத்தளங்களின் பக்கங்களில் இக்குருவி களிமண் கட்டிகளை அப்பியிருக்கும்.
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான். நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன. இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது.
செல்போன் கதிர்வீச்சு, வாகனங்களின் இரைச்சல், அளவுக்கதிகமாக செல்போன் டவர்கள், வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவைகளால் நாளுக்கு நாள் தூக்கணாங்குருவி இனம் அழிந்து வருகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான குருவி இனங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன. டோடோ என்ற குருவி இனம் அந்தமான் காடுகளில் அழிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது அந்த ஒப்பந்தத்திற்கு டோடோ என்று பெயர் வைத்தனர். அந்தளவிற்கு குருவி இனம் புகழ்பெற்றது.
தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தூக்கணாங்குருவிகள் தென்னை மரங்கள், பனை மரங்கள், கிணறுகள் என கூடுகட்டி வாழந்து வந்தன. ஆனால் சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அப்போது தூக்கணாங்குருவிகளும் அழிந்தன. தற்பொழுது செல்போன் கதிர்வீச்சால் தூக்கணாங்குருவி இனத்தின் முட்டைகள் கரு உற்பத்தியாகாத நிலை ஏற்பட்டு அழிவை தேடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் உழைப்பையெல்லாம் ஒருங்கிணைத்து கட்டிய கூடுகள் கொடைக்கானல் சாலையில் விற்பனைக்கு வந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல, மனிதனால் ஒரு இனத்தை அழித்த வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.
தூக்கணாங்குருவி..!

0 கருத்து(கள்):