வாழ்க தமிழ்!

Friday, October 11, 2013

அந்தமான் நிகோபார் தீவுகள் குறித்து வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் மொழி.

பாமரன்  /  at  6:02 AM  /  கருத்துரை இடுக

அந்தமான் நிகோபார் தீவுகள் குறித்து வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் மொழி.

2011 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஏழு வகையான நாணயங்கள் அந்தமான் தீவுகளில் வாழும் பல்லுயிர்களை குறிப்பதாக அமைந்துள்ளது. அதே போல் அந்தமான் தீவில் அதிகமாக பேசப்படும் பெங்காலி, இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் இந்த நாணயத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் , இந்த நாணயங்கள் இந்திய அரசின் அதிகாரப் பூர்வ வெளியீடு அல்ல . இதை இந்தியாவிலும் அச்சிடவும் இல்லை. ஜோசப் லாங் என்னும் வனவிலங்கு ஆர்வலர் இதை இந்தியாவிற்கு வெளியே தயாரித்தார். பத்தாயிரம் நாணயங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டது. தனிச்சுற்றுக்கு இந்த நாணயங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நடைமுறையில் சந்தையில் இந்த நாணயங்களை பயன்படுத்த முடியாது. எனினும் நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வலர்கள் இதை வாய்ப்பாக பயன்படுத்தி பலரும் இந்த நாணயங்களை விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் வெளிநாட்டினர் நம் நாணயங்களை அச்சிடும் போது மக்களின் மொழிகளை கருத்தில் கொண்டே அச்சடித்து உள்ளனர். ஆனால் இந்திய நாடோ எந்த மாநிலத்தில் நாணயங்கள் அச்சிட்டாலும் , அந்த மாநில மொழிக்கோ அல்லது பண்பாட்டிற்கோ நாணயங்களில் இடமளிப்பது இல்லை.

இந்தியாவின் பல பகுதிகளை ஆண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் மொழியில் நாணயங்கள் வெளியிடப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் காரனிடம் இருந்து விடுதலை பெற்று இந்திக் காரனிடம் நாடு சென்ற பின் ஒரு முறை கூட தமிழ் மொழிக்கு இந்திய நாணயங்களில் இடம் இல்லாமல் போனது.

நமது கோரிக்கை இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழியும் நாணயங்களில் இடம் பெற வேண்டும். தமிழகத்தில் வெளியிடப்படும் நாணயங்களில் தமிழும் ஆங்கிலமும் இருந்தால் மட்டுமே போதுமானது. அதே போல் கர்நாடகாவில் வெளியிடும் நாணயங்களில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் போதுமானது. இவ்வாறு செய்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமைகள் கொடுக்கப் பட்டு அந்தந்த மொழிகளும் நாணயங்களில் புழக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும். விரைவில் தமிழ் மொழியை இந்திய நாணயங்களில் கொண்டு வர தமிழர்கள் தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியை மட்டுமே இந்தியா முழுவதும் திணித்து வரும் இந்திய நாடு தனது இந்தி வெறியை கைவிட்டு இதை செயல்படுத்த முன்வருமா?

-Rajkumar Palaniswamy


பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Friday, October 11, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.