செய்யுள்:
முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம்
கற்றனம் என்று களியற்க - சிற்றுளியால்
கல்லும் தகரும் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்''! (பாடல்-13)
உரை:
அறிவு முழுவதையும் பெற்றவர்கள் எவரும் இலர். அதனால், மிகுதியாகக் கற்றுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைதல் வேண்டா. கனவிய குழையை அணிந்தவளே! கொல்லனது உலைக்களத்தில் உள்ள பெரும் சம்மட்டியினால் தகர்க்க இயலாத கல்லும் மிகச்சிறிய உளியினால் தகரும்.
நன்றி ஐயா. ஒரு வேண்டுகோள். கருத்துரை வழங்கும் போது குறுக்கிடும் Word verification ஐ நீக்கினால் நலமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன் ஐயா
ReplyDelete