வாழ்க தமிழ்!

Tuesday, October 8, 2013

ஆசை வாழவும் விடாது! சாகவும் விடாது!

பாமரன்  /  at  8:17 PM  /  1 கருத்துரை

வயதான மனிதன் ஒருவன், காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போது, முடியவில்லை. 

நொந்து போய், ''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா? எமதர்மனே! இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா? எமதர்மா! எமதர்மா, ''என்று கத்தினான்.

உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,' அப்பனே, என்னை நீ அழைத்த காரணம் என்ன?' என்று கேட்டான் .

திடுக்கிட்ட வயதான அந்த விறகு வெட்டி, ''ஒன்றுமில்லை, இந்த விறகுக் கட்டைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை. அதனால் தான் உன்னை அழைத்தேன்,'' என்றாராம் 

பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Tuesday, October 8, 2013

1 comment:

  1. விவரமான விறகு வெட்டி...!

    துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.