வாழ்க தமிழ்!

Tuesday, October 15, 2013

வடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்!

பாமரன்  /  at  7:02 AM  /  1 கருத்துரைகுறிஞ்சிப்பாடியில் ஓர் அன்பரைக் கருநாகம் ஒன்று தீண்டிவிட்டது. கருநாகம் தீண்டிப் பிழைத்தவர்கள் மிகவும் குறைவு. அச்சமடைந்த அவர் வள்ளலார்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து ""ராமலிலிங்கத்தின் மேல் ஆணை!'' என்று உரத்துக் குரல் கொடுத்தார். அவரைத் தீண்டிய அந்தக் கருநாகம் வாயைப் பிளந்தது பிளந்தவாறே இருக்க, செதுக்கி வைத்த சிலைபோல் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது. விஷக்கடி அந்த அன்பரை ஒன்றும் செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து இந்த சம்பவத்தை அறிந்த வள்ளலார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, அந்தப் பாம்பைப் பார்த்தார். பாவம் அந்தப் பாம்பு. அன்ன ஆகாரமில்லாமல் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தது. குறிப்பிட்ட அன்பரை அழைத்த வள்ளலார், ஆணையை விடுவித்து பாம்பை விடுதலை செய்யச் சொன்னார். அந்த அன்பரும், ""ராமலிலிங் கத்தின் மேல் ஆணை. இனி நீ முன்போலவே இருக்கலாம்!'' என்றதும் பாம்பு மீண்டும் உணர்வு பெற்று வள்ளலாரின் பாதங்களை விழுந்து வணங்கி புதருக்குள் ஊர்ந்து சென்றது!

அன்பர்கள் பலரின் உடல் நோயை வள்ளலார் தீர்த்து வைத்த செய்தி அவரது வரலாற்றில் நிறையக் காணக் கிடைக்கிறது. வள்ளலார் நடமாடிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் மட்டுமல்ல; இப்போதுகூட அவரை வழிபடும் அடியவர்களின் உடல் உபாதைகளைத் தீர்த்து வைக்கிறது.


பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Tuesday, October 15, 2013

1 comment:

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.