வாழ்க தமிழ்!

Wednesday, October 16, 2013

வள்ளலார் ஒர் அணுவிஞ்ஞானி

பாமரன்  /  at  10:26 AM  /  கருத்துரை இடுக


இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில்தான் மேல்நாட்டு அணுவிஞ்ஞானிகள் அணுவை பிளக்க முடியும் என்று கண்டறிந்தனர் அணுவைப் பிளந்தால் உள்ளே கரு(nucleus) எலெக்ட்ரான், புரோட்டான் நியூட்ரான் போன்ற அணுத்துகள்கள் கருவைச் சுற்றி வேகமாக கிரகங்களைப் போல் சுற்றிவருகின்றன என்று கண்டறிந்து கூறினர் ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலார் அணுவுக்குள்ளே என்னென்ன அணுத்துகள்கள் உண்டு என்று ஒரு பெரிய பட்டியலையே தருகின்றார்

தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள்ஓர் அனந்தம்
ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி (திருஅருட்பா 5661)

ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்கிறை ஒன்றாம்... (திருஅருட்பா 5641)
.

மேற்கண்ட பாடல்களில் அணுத்துகள்களைத் தாம் நேரில் கண்டு அவற்றை குருத்துவிகள், அசலைகள், அமலைகள், பிரகாசிகள், பரமாணு என்று பெயரிடுகிறார் *பிரகாசிகள் என்பவற்றை (protons) என்று இன்று அணுவிஞ்ஞானிகள் அழைக்கின்றனர்

சுமார் ஏழு மாதங்களுக்கு முன் ஸ்விட்சர்லாந்து நாட்டில் செர்ன்(cern) என்ற இடத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவுல் உலக அணு அணுவிஞ்ஞானிகள் ஒரு பரிசேதனை செய்தனர் எதற்காகவென்றால் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு (BIg Bang) ஏற்பட்டு பிராபஞ்சம் தோன்றியபோது சக்தி பொருளாக மாற்றம் பெற்றது அதில் முதலில் தோன்றிய அணுத்துகள் எது என்று கண்டறிந்தனர் அதை *(GOD Particle) என்று அழைத்தனர் அதை *பரமாணு* என்று முன்னரே அழைத்திருப்பது வியப்பு

மற்றுமோர் நிரூபணம் 1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி சார்பியல் தத்துவம் (Theory Of Relativity) விஞ்ஞானக் கொள்கையை நிறுவினார் உலகம் ஏற்றுக்கொண்டது அக்கொள்கையின் சூத்திரம் E = mc2 அதாவது

சக்தி(Energy)= ஒரு பொருளின் எடை(Mass)x ஒளியின் வேகம்x ஒளியின் வேகம்x ஒளியின் வேகம் (ஒளியின் வேகம் = 1வினாடிக்கு 3லட்சம் கிமீ).


பகிர்
இயல்(கள்): , , , , இதழ் வெளியான நாள்: Wednesday, October 16, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.