வாழ்க தமிழ்!

Tuesday, October 22, 2013

சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து இடாத சோறும் பாழ்

பாமரன்  /  at  8:36 PM  /  கருத்துரை இடுக

எந்த ஒரு பொருளும் அதன் தன்மைக்கு ஏற்பப் பயன்படுத்தினால்தான் அதன் முழுபலனையும் நாம் பெறமுடியும். இதை நம் முன்னோர்கள் பல அனுபவங்கள் மூலம் உணர்ந்து  நமக்குச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் தோன்றியது தான் இந்தப் பழமொழி  ‘சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து இடாத சோறும் பாழ்’.

அதாவது எண்ணையை உடம்பில் தேய்த்தாலும் அல்லது காயத்தின்மீது போட்டாலும் மேல் தோலில் உள்ளவற்றை கழைந்துவிட்டு போட்டால் தான் அது பயன்தரும். இல்லையென்றால் எண்ணை  மேலோட்டமாக இருந்து பயன்தராமல் போகும். அதே போலதான் மிகுந்த அன்புடன் ஒருவருக்கு தானம் செய்தால், அது அவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தரும். அப்படி இல்லாமல் வெறுப்புடன் விருந்தளித்தாள்  அதனால் எந்த பயனும் ஏற்படாது. தன்மையை அறிந்து அதனைச் செயல்படுத்த வேண்டும் எனும் இக்கருத்தை உணர்த்துவதுதான் இந்தப் பழமொழி.

நன்றி: சத்யம் தொலைக்காட்சி

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Tuesday, October 22, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.