அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில்
பழமை | : | 500 வருடங்களுக்குள் | |
புராண பெயர் | : | திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம்,சிவபுரம் | |
ஊர் | : | ஆவுடையார்கோயில் | |
மாவட்டம் | : | புதுக்கோட்டை | |
மாநிலம் | : | தமிழ்நாடு |
ஆவுடையார் கோயில் பகுதி மக்களின் நிலத்தை குறுநில மன்னன் ஒருவன், பறித்துக் கொண்டான். அவர்கள் பேரரசரிடம் முறையிட்டனர். மன்னனோ, அந்த நிலம் தன்னுடையது என்று வாதாடினான். அது மக்களுடையது என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா என்று கேட்டான். மன்னனின் செல்வாக்கிற்கு முன்னால், எதுவும் செய்ய முடியாத மக்கள் சிவபெருமானை நாடினர்.
உண்மையை வெளிக்கொணர உன்னைத் தவிர வேறு சாட்சியில்லை என மனமுருகி வணங்கினர். சிவன் பேரரசரிடம் மாறுவேடத்தில் சென்றார். குறுநில மன்னனை அழைத்து, ""மன்னா! உன் நிலம் எப்படிப்பட்ட தன்மையுடையது?'' என்று கேட்டார்.
அதற்கு மன்னன், ""அது வறண்ட பூமி'' என்றான்.
சிவன் மறுத்தார். ""பேரரசரே! அது செழிப்பான நிலம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நிலத்தை தோண்டுங்கள். தண்ணீர் வரும்,'' என்றார்.
அதன்படியே நிலத்தை தோண்ட நீர் வெளிப்பட்டது. குறுநிலமன்னன் தலை குனிந்தான். மக்களிடமே நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர். சிவன் தண்ணீர் காட்டிய அந்த இடம், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. அப்பகுதியை, "கீழ்நீர்காட்டி' என்று சொல்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை, பஞ்சாட்சர மண்டபத்தின், மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்துள்ளனர். இப்போ தெரிஞ்சுதா? நம்ம சிவன் தான் முதன் முதலில் "தண்ணி காட்டியவர்' என்று. யாராவது ஒருவரை ஏமாற்றினால், "என்ன தண்ணி காட்டுறீயா?' என்பர். இந்த "வழக்கு' எப்படி வந்தது என தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: தினமலர்
நானும் வாசித்தேன்...
ReplyDeleteசிவபெருமான் எதற்காக நந்தி தேவரிடம் அடி வாங்கினார்? தெரிந்தால் கூறுங்கள்
Delete"வழக்கு' எப்படி வந்தது என அருமையான கதை..பாராட்டுக்கள்..!
ReplyDelete