வாழ்க தமிழ்!

Thursday, October 31, 2013

இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்

பாமரன்  /  at  6:47 AM  /  கருத்துரை இடுக

"இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்" !

மறைந்த கவியரசு கண்ணதாசன் கடனில் தத்தளித்தது அனைவரும் அறிந்ததே. தினமும் காலையில் அவர் வீட்டு வாசலில் நான்கைந்து கடன்காரர்கள் காத்துக்கிடப்பது வழக்கம்.

இப்படித்தான் ஒரு நாள் கண்ணதாசனை அவரது உதவியாளர் காலையில் எழுப்பி " வாசலில் ஒரு கடன்காரர் காத்திருக்கிறார்" என்றார். அந்த கஷ்டத்திலும் அவர் இதை கவிதையாகப் பாடினார்.

" உயிர் கடன் கொடுத்தவன் உச்சியில் உள்ளான்
பொருட்கடன் கொடுத்தவன் வாசலில் உள்ளான்
நான் - இருகடன் பெற்ற பெரும் கடன் காரன்" !

உண்மைதானே. இந்த உயிரே நமக்கு கடனாக
வந்ததுதானே! உயிரை கொடுத்த கடவுள் அதை ஒரு நாள் திரும்பி எடுக்கத்தானே போகிறார்!.

பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Thursday, October 31, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.