வாழ்க தமிழ்!

Tuesday, October 22, 2013

அழுகணிச் சித்தர் - அழிவில்லாததை நாடு

பாமரன்  /  at  6:04 AM  /  கருத்துரை இடுக

மிகவும் அழகாக வாழ்க்கையின் தத்துவத்தை கூறியுள்ளார்.

“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் 
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா 
உன் பாதம் சேரேனே?"

விளக்கம்:

இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம் போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின் இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக் கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச் சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே என்று குறிப்பிடுகின்றார்.

நாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் "அழுகண்ணிச் சித்தரின்" பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது. இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்களிலே ஒளிரும் அனுபவ ஞானம் அளப்பரியது. கண்ணம்மா என்னும் ஒரு பெண்ணிடம் தனது மனக்கருத்துக்களை ஒப்பிப்பது போன்ற பாணியிலேயே இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Tuesday, October 22, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.