வாழ்க தமிழ்!

Friday, October 18, 2013

காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்

பாமரன்  /  at  6:39 AM  /  3 கருத்துரைகள்

ஒரு சோம்பேறி மனிதன், வேலை எதுவும் செய்யக்கூடாது, ஆனால் தினமும் வயிறாரச் சாப்பிட வேண்டும்; இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே ஒருவன் சென்றான். அவனிடம் தனது யோசனையைப் பற்றிக் கேட்டான்.
 அதற்கு அவன், ""காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்'' என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
 இந்தச் சோம்பேறியும் காஞ்சிபுரம் சென்று, ஒரு பாலத்தில் அமர்ந்துகொண்டு காலாட்டத் தொடங்கினான். காலை போயிற்று... மதியம் வந்து, அதுவும் போயிற்று. மாலை மங்கத் தொடங்கியது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. காலை முதல் விடாமல் காலை ஆட்டியதால் இரண்டு கால்களும் வீங்கிப்போய், வலியெடுக்கத் தொடங்கியது. வலி பொறுக்க முடியாமல் அலற ஆரம்பித்தான். பசி மயக்கம் வேறு சேர்ந்து கொண்டது.
 அப்போது அங்கே வந்த பெரியவர் ஒருவர், ""ஏன் இப்படி அலறுகிறாய்?'' என்று கேட்டார்.
 அதற்கு அந்தச் சோம்பேறி தனக்கு நடந்ததைக் கூறினான்.
 ""அட, அடிமுட்டாளே..! காலாட்டிப் பிழைக்கலாம், சாப்பிடலாம் என்றால், இப்படிப் பாலத்தின் மீது அமர்ந்து காலாட்டுவதல்ல.... காஞ்சியில் நெசவுத் தறிகள் அதிகம். அந்தத் தறிகளில் ஒன்றில் அமர்ந்து நெசவு செய்யக் கால்களை இப்படியும் அப்படியும் ஆட்டி, நெசவுத் தொழில் முத்துக் கதை செய்தால், வேலைக்கான காசு-கூலி கிடைக்கும். அதைக் கொண்டு சாப்பிடலாம். இதைத்தான் "காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்' என்று சொன்னார்கள்'' என்று சொல்லி, சிரித்தபடியே சென்றுவிட்டார்.
 நெசவு செய்யும் தறிக்கூடம் எங்கிருக்கிறது என்று தேடிப் போனான் அந்தச் சோம்பேறி.-கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு. (SRC: தினமணி)

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Friday, October 18, 2013

3 comments:

  1. சோம்பேறி திருந்தினால் சரி...!

    ReplyDelete
  2. தங்களின் கருத்துரை அறிந்தேன்... இன்றைய பதிவில் குறிப்பிட்டதற்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. காலாட்டிச் சாப்பிடலாம் என்பதன் பொருள் இன்றுதான் அறிந்தேன். நன்றி ஐயா. எத்தனை அர்த்தமுள்ள வார்த்தை

    ReplyDelete

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.