வாழ்க தமிழ்!

Friday, October 11, 2013

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே

பாமரன்  /  at  6:00 AM  /  1 கருத்துரை

"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே"

உண்மை அர்த்தம்:

நன்மைகள் ஆக்கப்படுவதும், தீமைகள் அழிக்கப்படுவதும் பெண்ணாலே என்பதுதான் உண்மையான பொருள். பெண் நல்லதைச் செய்வாள், நல்ல எண்ணங்களைக் கொண்டு நல்ல குடும்பத்தை உருவாக்குவாள். நல்ல நிலைக்கு தானும் உருவாகி மற்றவர்களையும் உருவாக்குவாள்.

தீமை நடக்கும் இடங்களில் குற்றங்களைத் தட்டிக் கேட்டுத் தீமையை அழித்திடுவாள். பெண்களை தெய்வம் என்று சொல்வதும், இந்த மொழியின் அடிப்படையில் தான். தெய்வமும் நல்லதை ஆக்கி தீயதை அழிப்பதால் அப்படி ஒப்பிட்டனர்.

நாம் அறிந்த அர்த்தம் :

நன்மை ஆக்கப் பெறுவதும் , நன்மை அழிக்கப் பெறுவதும் பெண்ணாலே. அதாவது தீமை நடக்கையில் நல்லதை பெண் அழித்துவிட்டாள் என பொருள் புரிந்து கொள்வது. இப்படி தான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் தவறான இடங்களில் இந்த மொழியை பயன்படுத்திப் பெண்ணால் அழிந்தது என்கிறோம்.

இனியேனும் தெரிந்துக்கொள்வோம், நன்மை ஆவதும் தீமை அழிவதும் பெண்ணாலே.

 இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Friday, October 11, 2013

1 comment:

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.