வாழ்க தமிழ்!

Tuesday, October 1, 2013

உலகின் முதல் மின் விளக்கு தொழிற்சாலை தொடக்கம் !

பாமரன்  /  at  2:01 PM  /  கருத்துரை இடுக

அந்த நாள் ஞாபகம் - 01 அக்டோபர் 1880

உலகின் முதல் மின் விளக்கு தொழிற்சாலை தொடக்கம் !

குண்டுபல்பு எனப்படுகிற மின்விளக்கின் முதல் தொழிற்சாலையை எடிசன் தொடங்கினார்.

எடிசன் 8 வயதில்தான் பள்ளிக்குச் சென்றார். ஒருநாள் ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்கு போக மறுத்து விட்டார்! அவரது தாய் ஆசிரியை என்பதால் வீட்டிலேயே கல்வி கற்றார்.

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின் விளக்கு ' பலருக்குக் கனவாக இருந்தது. முயற்சி செய்த பலர் தோற்றனர். எடிசனுக்கும் அதில் ஆர்வமேற்பட்டது.

எடிசனின் மின்விளக்கு ஆய்வுக்கு, முன் பணமாக 30,000 டாலர் உதவி கிடைத்தது. பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, பிரான்சிஸ் அப்டன் எடிசனோடு சேர்ந்தார். தெரியாத அறிவியல் நுணுக்கங்கள் பிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது.

ஒருஉலோகக் கம்பியை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். அதில், ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் அதை சரி செய்தார். அதன் பிறகு எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பிச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள்.

1093 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தம் கொண்டாடியவர் எடிசன்.அது மிகப்பெரிய சாதனை. அதில் அவரது குழுவின் உழைப்பும் இருக்கிறது.

குண்டுபல்பு இப்போது ஓய்வுபெறும் கட்டத்தை அடைந்து விட்டாலும் அடுத்த தலைமுறை பல்புகளுக்கு அதுதானே தாத்தா ?
-------------------------------------------------------------
படத்தில் இருப்பது எடிசன் கண்டுபிடித்த முதல் மின்விளக்கு
------------------------------------------------------------

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Tuesday, October 1, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.