வாழ்க தமிழ்!

Thursday, October 31, 2013

இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்

"இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்" !

மறைந்த கவியரசு கண்ணதாசன் கடனில் தத்தளித்தது அனைவரும் அறிந்ததே. தினமும் காலையில் அவர் வீட்டு வாசலில் நான்கைந்து கடன்காரர்கள் காத்துக்கிடப்பது வழக்கம்.

இப்படித்தான் ஒரு நாள் கண்ணதாசனை அவரது உதவியாளர் காலையில் எழுப்பி " வாசலில் ஒரு கடன்காரர் காத்திருக்கிறார்" என்றார். அந்த கஷ்டத்திலும் அவர் இதை கவிதையாகப் பாடினார்.

" உயிர் கடன் கொடுத்தவன் உச்சியில் உள்ளான்
பொருட்கடன் கொடுத்தவன் வாசலில் உள்ளான்
நான் - இருகடன் பெற்ற பெரும் கடன் காரன்" !

உண்மைதானே. இந்த உயிரே நமக்கு கடனாக
வந்ததுதானே! உயிரை கொடுத்த கடவுள் அதை ஒரு நாள் திரும்பி எடுக்கத்தானே போகிறார்!.
பாமரன்  /  at  6:47 AM  /  கருத்துரை இடுக

இயல்(கள்): முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

Sunday, October 27, 2013

நாம் யார்? நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.

சோழன் செங்கணானிடம் போரில் தோற்ற சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை சிறை பிடிக்கப்படுகிறான். குடவாயிற் கோட்டத்துச் சிறைக் கொட்டடியில் அவனுக்கு தாகம் எடுக்கிறது. சிறைக் காவலன் அசட்டையாக தாமதம் செய்து தண்ணீர் தருகிறான். அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடலின் பொருள் :இறந்துப் பிறக்கும் குழந்தையை கூட அப்படியே புதைத்து விடாமல் வீர மரபில் பிறந்தது என்பதற்கு அடையாளமாக அதன் மார்பை வாளால் கீறி புதைக்கும் வீரத் தமிழ் மரபில் வந்த வீரன் தனக்கு அசட்டையாக நீரையும், உணவையும் தரும் பகைவனிடம் பிச்சை கேட்டு உண்பான் என நினைக்கிறாயா? என்று கேட்டு விட்டு உணவும்,நீரும் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் நீப்பதை விவரிக்கும் பாடல் வரிகள்.

உலகின் எந்த இனமும் இவ்விதமான பாடல் பெரும் பாக்கியத்தை பெறவில்லை.பாடல் வழி இன்னமும் வென்று வாழ்கிறான் இரும்பொறை.

அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடல்,

திணை : பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

"குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?"
பாமரன்  /  at  8:33 PM  /  1 கருத்துரை

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

1 கருத்து(கள்):

நீயே போர்வையை வைத்துக் கொள்!

பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான். பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.

இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.

விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.

கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன்

உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?'' என்று கேட்டான்.
துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.

பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!'' என்று பெருமையுடன் சொன்னான். உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''

அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.

இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய். நீதான் உண்மையான ஏழை... நீயே போர்வையை வைத்துக் கொள்!'' என்று நீட்டினார் அவர். தலை கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.

பாமரன்  /  at  8:22 PM  /  1 கருத்துரை

Wednesday, October 23, 2013

நற்றிணையில் நட்புநெறி! - முனைவர் இரா.அன்பழகன்

சங்க காலத்தில் கணவன் - மனைவிக்கிடையே விளங்கிய உயர்வான காதலும் நட்பு எனச் சிறப்பித்துச் சொல்லப்பட்டது.""உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு'' (1122)என வரும் இக்குறள் காதலை "நட்பு' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் காதலின் முதிர்ச்சியாக, காதலைவிட ஒருபடி உயர்ந்ததாக நட்பு விளங்குகிறது என்பதை அறியமுடிகிறது.

நற்றிணைப் பாடல் ஒன்று, ஒரு நம்பியும், ஒரு நங்கையும் நன்னலம் வாய்ந்த இந்த உன்னத உறவால் இணையும் உயர்வை உணர்த்துகிறது. ஒரு பெண் மீது ஓர் இளைஞன் காதல் கொள்கிறான். தன் காதலை அப்பெண்ணின் தோழியின் மூலம் சொல்ல முயற்சி செய்கிறான். தோழி அப்பெண்ணிடம் சொல்கிறாள்.

"ஒரு மலை உள்ளது. அம்மலை கண்ணபிரான் போன்று தோன்றுகிறது. அம்மலைக்குப் பக்கத்தில் அருவி வீழ்கிற; அது பலராமன் போன்று தோன்றுகிறது. அம்மலைக்கு உரிய தலைவன் உன்னை நேசிக்கிறான். அவன் உன் அன்பை வேண்டிப் பெரிதும் வருந்துகிறான். இது நான் நன்கறிந்த உண்மை. இதை நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், இன்னும் இதில் உனக்குத் தெளிவு ஏற்படவில்லை. அதனால், நீ ஒன்று செய்யலாம். இத் தலைவனின் அன்பை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பதைப் பற்றி நீ உன்னளவில் சிந்தித்துப் பார். உன்னுடைய பிற தோழியரிடமும் கலந்து விவாதித்துப்பார்.

ஒருவருடன் நட்பு கொள்ளவேண்டும் எனில், அவரைப் பற்றி அறிவால் ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்பே நட்பு கொள்ள வேண்டும். பெரியோர்கள் ஒருவரைப் பற்றி ஆராயாமல் நட்பு கொள்ள மாட்டார்கள். நட்பு கொண்டபின் அவருடைய பண்பு நலன்களை ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதில் நன்மையும் இல்லை' என்பது தோழியின் கூற்று.

ஒரு பெண், ஓர் இளைஞனைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, காதலனாக அல்லாமல் நண்பனாகத் தேர்ந்து கொள்வதே சிறப்பு. அதுவே பிரிதல் இல்லாத இல்லறத்தைத் தரும். இது ஒரு வாழ்வியல் உண்மை. இதையே இக்கூற்றில் தோழி உணர்த்துகிறாள். பாடல் இதுதான்:""மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பதுஓர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே!''
(நற்.32)நட்பு கொள்வதில் மூன்று நிலைகள் உள்ளன. பேசிப் பழகும் தோழமை; உள்ளத்தாலும் உடலாலும் இணையும் காதல்; உள்ளத்தாலும் உயிராலும் ஒன்றிவிடும் நட்பு. கணவன் - மனைவிக்கு இடையே இத்தகைய நட்பு வாய்க்குமானால் அதைவிட வேறென்ன வேண்டும்? இல்லறத் துணையைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய இளையோர் சமுதாயம் இதைக் கருத்தில் கொண்டால், இல்லறம் நல்லறமாக அமையும்!
பாமரன்  /  at  7:24 AM  /  கருத்துரை இடுக

போகர்.!
சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.

சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

பாமரன்  /  at  6:58 AM  /  கருத்துரை இடுக

Tuesday, October 22, 2013

சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து இடாத சோறும் பாழ்

எந்த ஒரு பொருளும் அதன் தன்மைக்கு ஏற்பப் பயன்படுத்தினால்தான் அதன் முழுபலனையும் நாம் பெறமுடியும். இதை நம் முன்னோர்கள் பல அனுபவங்கள் மூலம் உணர்ந்து  நமக்குச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் தோன்றியது தான் இந்தப் பழமொழி  ‘சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து இடாத சோறும் பாழ்’.

அதாவது எண்ணையை உடம்பில் தேய்த்தாலும் அல்லது காயத்தின்மீது போட்டாலும் மேல் தோலில் உள்ளவற்றை கழைந்துவிட்டு போட்டால் தான் அது பயன்தரும். இல்லையென்றால் எண்ணை  மேலோட்டமாக இருந்து பயன்தராமல் போகும். அதே போலதான் மிகுந்த அன்புடன் ஒருவருக்கு தானம் செய்தால், அது அவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தரும். அப்படி இல்லாமல் வெறுப்புடன் விருந்தளித்தாள்  அதனால் எந்த பயனும் ஏற்படாது. தன்மையை அறிந்து அதனைச் செயல்படுத்த வேண்டும் எனும் இக்கருத்தை உணர்த்துவதுதான் இந்தப் பழமொழி.

நன்றி: சத்யம் தொலைக்காட்சி
பாமரன்  /  at  8:36 PM  /  கருத்துரை இடுக

பந்தி என்றால் என்ன?

கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை "பந்தி' என்கிறார்கள். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி' என்பது தமிழில் "பந்தி' ஆனது. "பங்க்தி' என்றால் "சேர்ந்து உண்ணுதல்'. மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம். அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர்' என்பர். நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும். எனவே,நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது.
பாமரன்  /  at  8:32 PM  /  கருத்துரை இடுக

குருவே உரைத்தாலும் கொடுத்த வாக்கை மீறாதே!

கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தையின் நலனுக்காக திருமணமே செய்து கொள்ளாத உத்தமர். அவர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டு, அவர்களது மகள்களை அழைத்துச் சென்றார்.
அவர்களில் ஒருத்தியான அம்பை, சாலுவ தேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால். தன்னை அவனது நாட்டிற்கு அனுப்பிவிடும்படி, பீஷ்மரிடம் வேண்டினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடமே திரும்பிய அம்பை, தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். அவரோ
பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்து விட்டார். எனவே, அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நாடினாள்.
அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் அவளை மணம் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட அவர், குருவின் பேச்சைக் கேட்காத சீடனுடன் போரிட்டார்.
அவரிடம் வில்வித்தை கற்றிருந்த பீஷ்மர், அவரையே வெற்றி கொண்டார். தோல்வியடைந்த பரசுராமர், அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்று விட்டார்.
குருவே சொன்னாலும்கூட, ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு ஒரு உதாரணம்.
பாமரன்  /  at  8:26 PM  /  கருத்துரை இடுக

கண்ணன் அர்ச்சுனனுக்கு மட்டும் சாரதி இல்லை ..

அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால்,சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலை யாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்... அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது,

கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம் –
"நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்?அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது.பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான்.பிறகு உங்களின் தாய் குந்தி, "போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை" எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள்.பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது.

போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாஇப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று பார்த்தன் கூறினான் அர்ஜுனனிடம்.

கண்ணன் அர்ஜுனனுக்கு மட்டும் சாரதி இல்லை .. இந்த பாரத தேசத்திற்கும் அவன் தான் சாரதி....கண்ணன் வழி நடப்போம்.
அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான்.ஆனால்,சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலை யாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்... அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது,

போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாஇப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று பார்த்தன் கூறினான் அர்ச்சுனனிடம்.

கண்ணன் அர்ச்சுனனுக்கு மட்டும் சாரதி இல்லை .. இந்த பாரத தேசத்திற்கும் அவன் தான் சாரதி....கண்ணன் வழி நடப்போம்.
பாமரன்  /  at  7:53 PM  /  1 கருத்துரை

பற்றை நீக்கினால் பற்றற்றவனைக் காணலாம் -அகப்பேய்ச்சித்தர்

“சரியை ஆகாதே அகப்பேய்
சா லோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை
யோகம் ஆகாதே அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னேனே”

சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான உடற்பயிற்சி வழிபாட்டினாலும் போகமாகிய தியான மன வழிபாட்டினாலும் கூட இறையைக் காண முடியாது; இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக் காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண முடியும்.

நமக்குப் பிறவி என்பது இறைவன் அளித்தது. புள்ளாய், பூண்டாய், புழுவாய், விலங்காய் என்று பிறந்து மாண்டு, பிறந்து மாண்டு பிறவி என்பதே ஒரு தொடர்கதையாய் இருக்கும் நிலையில் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து வாழ்வதால் பிறவி எடுப்பது நின்று விடாது. இச்சையற்றவனிடம் இறை தரிசனம் காணலாம். அந்த இறை தரிசனமே பிறவிப்பிணியை ஒழிக்க வல்லது என்று பிறவியை நீக்கும் வழியையும் இறை தரிசன வழியையும் கூறுகின்றார் அகப்பேய்.

அகப்பேய்ச் சித்தர்:

மனமாகிய பேயை வென்ற சித்தர் ஆதலின் இவர் அகப்பேய் சித்தர் என்றழைக்கப்படுகின்றார். அகம் + பேய் + சித்தர். இந்த அகப்பேய் சித்தர் பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு.

நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து வாழ்க்கை நடத்தினார். வணிகத்தின் பொருட்டுத் தாம்
செல்லுமிடங்களிலெல்லாம் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கின்றார். மேலுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாகச் சொல்லிக்கொள்ளும் அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களின் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது. ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் இன்பமயமான நித்திய வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். மனமாகிய அகப்பேயை அடக்கி வெற்றி கண்டார்க்கு சிவமாகிய இறைவன் காட்சி தருவார்.

துன்பமில்லா இன்பநிலையை அடையலாம் என்ற உண்மையைத் தம் பாடல்களில் பாடி வைத்தார்.

பாமரன்  /  at  6:11 AM  /  1 கருத்துரை

அழுகணிச் சித்தர் - அழிவில்லாததை நாடு

மிகவும் அழகாக வாழ்க்கையின் தத்துவத்தை கூறியுள்ளார்.

“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் 
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா 
உன் பாதம் சேரேனே?"

விளக்கம்:

இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம் போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின் இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக் கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச் சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே என்று குறிப்பிடுகின்றார்.

நாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் "அழுகண்ணிச் சித்தரின்" பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது. இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்களிலே ஒளிரும் அனுபவ ஞானம் அளப்பரியது. கண்ணம்மா என்னும் ஒரு பெண்ணிடம் தனது மனக்கருத்துக்களை ஒப்பிப்பது போன்ற பாணியிலேயே இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.

பாமரன்  /  at  6:04 AM  /  கருத்துரை இடுக

Sunday, October 20, 2013

நான் தான் கற்றவன் செருக்கு அகல்க - நீதிநெறி விளக்கம்

செய்யுள்:

முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம்
கற்றனம் என்று களியற்க - சிற்றுளியால்
கல்லும் தகரும் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்''! (பாடல்-13)
 
உரை:

அறிவு முழுவதையும் பெற்றவர்கள் எவரும் இலர். அதனால், மிகுதியாகக் கற்றுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைதல் வேண்டா. கனவிய குழையை அணிந்தவளே! கொல்லனது உலைக்களத்தில் உள்ள பெரும் சம்மட்டியினால் தகர்க்க இயலாத கல்லும் மிகச்சிறிய உளியினால் தகரும்.
பாமரன்  /  at  8:48 PM  /  1 கருத்துரை

செய்யுள்:

முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம்
கற்றனம் என்று களியற்க - சிற்றுளியால்
கல்லும் தகரும் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்''! (பாடல்-13)
 
உரை:

அறிவு முழுவதையும் பெற்றவர்கள் எவரும் இலர். அதனால், மிகுதியாகக் கற்றுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைதல் வேண்டா. கனவிய குழையை அணிந்தவளே! கொல்லனது உலைக்களத்தில் உள்ள பெரும் சம்மட்டியினால் தகர்க்க இயலாத கல்லும் மிகச்சிறிய உளியினால் தகரும்.

இயல்(கள்): முழுமையாக வாசிக்க தொடரவும்»

1 கருத்து(கள்):

சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு!

By முனைவர் க. சிவமணி   ( தினமணி )

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கபிலர், "மேகம் பயன் கருதாது உரிய நேரத்தில் பெய்து மண்ணை வளப்படுத்துவதைப் போல நாட்டு மக்களைத் தனது மக்களாகக் கருதிய மன்னன் தனக்கென எதையும் காத்து வைத்துக்கொள்ள எண்ணாமல், தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாயுள்ளத்தோடு அளித்துத் தானும் உண்டு மகிழும் இயல்புடையவன்' என்னும் பொருள்பட,

""ஆர்கலி வானம் தளி சொரிந்தாங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு'' (43, 18-19)

என்று பாடி சேரனின் விருந்தோம்பல் சிறப்பை வியந்துரைக்கிறார்.
வளங்கள் மலிந்து கிடக்கும் சேரநாட்டில் தமக்கு எவ்வித வறுமையும் இல்லாமையால் மன்னனிடம் சென்று பொருள் பெற்று வாழும் நிலை இரவலர்க்கு இல்லை. இருப்பினும் மன்னன் ஆட்கோட்பாட்டுச் சேரலாதனுக்கு இரவலர்க்கு அளித்தலை நிறுத்த மனமில்லை. எனவே, மக்கள் நலனில் கொண்ட அக்கறை மிகுதியால் அரண்மனைத் தேரை அனுப்பி இரவலரைத் தேரில் அரண்மனைக்கு வரவழைத்து உணவளித்து மகிழ்கிறான் என்பதை,

""வாரார் ஆயினும் இரவலர் வேண்டி
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்'' (55,10-12)

என வியந்து போற்றும் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், வறுமை நீங்கி தாம் வாழும் காலத்தும் தம் அரவணைப்பிலேயே நாட்டு மக்களை இமைபோல் காத்து மகிழ எண்ணும் வேந்தனின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
பின்வரும் குமட்டூர்க்கண்ணனாரின் பாடல் பசிப்பிணி மருத்துவராய்த் திகழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஈகைச் சிறப்பை எடுத்துரைக்கிறது.
பசிப்பிணியால் ஆட்கொள்ளப்பட்டு சேரலாதனின் அரண்மனையை நோக்கி இரவலர் கூட்டம் வருகிறது. தன்னை நாடிப் பசியோடு வந்த இரவலர் கூட்டத்தைக் கண்ணுற்ற சேரன் பசிப்பிணியை வேரறுக்கும் பொருட்டு ஆட்டிறைச்சியுடன் தும்பைப் பூப் போன்ற சோற்றுடன் கள்ளையும் உண்ணத் தருகிறான். பருந்தின் சிறகைப் போன்ற கந்தையான உடைகளுக்கு மாற்றாக பட்டாடைகளை வழங்கி மகிழ்கிறான். அத்துடன் ஒளி பொருந்திய ஆபரணங்களை இரவலர் பெண்டிர் அணிந்து இன்புறச் செய்தானாம். இதனை,

""தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
ஈர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன,
நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய'' (12,15-23)

என்ற அடிகளில் எடுத்துரைத்தல் சேர மன்னர்தம் விருந்தோம்பல் சிறப்பைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
பாமரன்  /  at  8:35 PM  /  கருத்துரை இடுக

ஐம்பூதத் தலங்கள்

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில்
நீர் - திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
காற்று - திருக்காளகத்தி
ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோவில்
நெருப்பு - திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்பாமரன்  /  at  7:13 AM  /  கருத்துரை இடுக

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில்
நீர் - திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
காற்று - திருக்காளகத்தி
ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோவில்
நெருப்பு - திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

தலைவன் என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும்....

காமராசர் முதலமைச்சரா இருந்தபோது சுதந்திர தினவிழாவிற்க்கு கொடியேற்ற வந்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு குண்டு துளைக்காத வாகனத்துல வரசொல்லி கேட்டதுக்கு "நான் எல்லோருக்கும் பொதுவான் நான் யாருக்கும் தவறு செய்ததில்லை.. இந்திய மக்கள் அனைவரும் ஒரு குடும்பம்தான், அப்படி தவறு செய்திருந்தால் அவர்களை சந்தித்து மன்னிப்புகேட்பேன், மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருந்தால் அவர்களிடமே குண்டடிபட்டு மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன்.. என்றும் ஒருவரை வதைத்து மற்றொருவரை உயிர்வாழ வைக்கமாட்டேன் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் என்றோ இறந்திருப்பேன்...

ஆகையால் எனக்கு குணடு துளைக்காத வாகனம் வேண்டாமென்று தவிர்த்துவிட்டார்......

பாமரன்  /  at  7:03 AM  /  கருத்துரை இடுக

Friday, October 18, 2013

காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்

ஒரு சோம்பேறி மனிதன், வேலை எதுவும் செய்யக்கூடாது, ஆனால் தினமும் வயிறாரச் சாப்பிட வேண்டும்; இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே ஒருவன் சென்றான். அவனிடம் தனது யோசனையைப் பற்றிக் கேட்டான்.
 அதற்கு அவன், ""காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்'' என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
 இந்தச் சோம்பேறியும் காஞ்சிபுரம் சென்று, ஒரு பாலத்தில் அமர்ந்துகொண்டு காலாட்டத் தொடங்கினான். காலை போயிற்று... மதியம் வந்து, அதுவும் போயிற்று. மாலை மங்கத் தொடங்கியது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. காலை முதல் விடாமல் காலை ஆட்டியதால் இரண்டு கால்களும் வீங்கிப்போய், வலியெடுக்கத் தொடங்கியது. வலி பொறுக்க முடியாமல் அலற ஆரம்பித்தான். பசி மயக்கம் வேறு சேர்ந்து கொண்டது.
 அப்போது அங்கே வந்த பெரியவர் ஒருவர், ""ஏன் இப்படி அலறுகிறாய்?'' என்று கேட்டார்.
 அதற்கு அந்தச் சோம்பேறி தனக்கு நடந்ததைக் கூறினான்.
 ""அட, அடிமுட்டாளே..! காலாட்டிப் பிழைக்கலாம், சாப்பிடலாம் என்றால், இப்படிப் பாலத்தின் மீது அமர்ந்து காலாட்டுவதல்ல.... காஞ்சியில் நெசவுத் தறிகள் அதிகம். அந்தத் தறிகளில் ஒன்றில் அமர்ந்து நெசவு செய்யக் கால்களை இப்படியும் அப்படியும் ஆட்டி, நெசவுத் தொழில் முத்துக் கதை செய்தால், வேலைக்கான காசு-கூலி கிடைக்கும். அதைக் கொண்டு சாப்பிடலாம். இதைத்தான் "காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்' என்று சொன்னார்கள்'' என்று சொல்லி, சிரித்தபடியே சென்றுவிட்டார்.
 நெசவு செய்யும் தறிக்கூடம் எங்கிருக்கிறது என்று தேடிப் போனான் அந்தச் சோம்பேறி.-கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு. (SRC: தினமணி)
பாமரன்  /  at  6:39 AM  /  3 கருத்துரைகள்

3 கருத்து(கள்):

Thursday, October 17, 2013

கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்மழைதான் வாழ்வின் ஆதாரம். மனித வாழ்வில், இந்தக் காலத்தில் தண்ணீர், ஆகாரத்தை அடுத்த இடத்தை வகிக்கிறது. மழையின் தேவையை, மழையின் சிறப்பை மக்கள் காலங்காலமாக உணர்ந்துதான் இருக்கின்றனர்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துப் பாடிய பிறகு, வான் சிறப்பைத்தான் பாடினார். கடவுள் வாழ்த்தையும், வான் சிறப்பையும் சேர்த்து அதைத் திருக்குறளுக்கான பாயிரம் என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்.

இளங்கோ அடிகள், தன் சிலப்பதிகார காவியத்தில், கடவுள் வாழ்த்துப் பாடாமல் மாமழை போற்றதும்! மாமழை போற்றுதும் என்று இயற்கையைப் போற்றித்தான் பாடியுள்ளார்.

செவ்வியல் இலக்கியங்கள் இப்படிச் சிறப்புற பதிவு செய்த மழையைப் பற்றிக் கிராமத்து மக்கள் தங்கள் பேச்சு மொழிகளில், பழமொழிகளில், வாழ்வியல் அனுபவத்தில் எப்படி எல்லாம் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் கூற விரும்புகிறேன்.

மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கிராமத்து மக்கள், மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது. முதலில் மனிதன் இயற்கையின் ஒரு கூரான மழையை வணங்கியுள்ளான் என்பதை நாம் எண்ணிப் பார்க்க இடமுள்ளது.

மழையை நம்பி வாழ்கின்ற சம்சாரிகளுக்குத்தான் மழையின் அருமையும் பெருமையும் தெரியும். மழையை மட்டும் நம்பி பயிர் செய்து வாழும் மக்களுக்கு மாதம் மும்மாரி மழை பெய்தால் யோகம்தான்.

சாதாரணத் தாவரங்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பத மழை பெய்தால் போதும் எந்த நீர் நிலைகளில் இருந்தும் நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. இந்த உண்மையைத் தான் மாதம் மும்மாரி என்ற தொடர் விளக்குகிறது.

அந்தக் காலத்தில் ராஜாக்கள் நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா..? என்றுதான் முதலில் மந்திரிகளிடம் கேட்பார்களாம். மாதம் மும்மாரிப் பொழிகிறது ராஜா என்று பதில் கூறிவிட்டால் ராஜாவுக்கு நிம்மதி வந்து விடுமாம். மழை பெய்து செழித்து வெள்ளாமை விளைச்சல் வந்து விட்டால் போதும் மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற உண்மையைத்தான் இச்செய்திகள் பதிவு செய்துள்ளன.

மழையைப் பற்றியே நிறைய பழமொழிகளை மக்கள் கூறுகின்றார்கள். மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்று கேட்கிறது ஒரு பழமொழி. கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு இறங்கிப் பெய்யும்? என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த கிராமத்து மக்கள், மழை எப்போது, எந்த அளவு பெய்யும் என்பதைக் கணிக்க முற்பட்டுத் தோற்றுப் போனபின் இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்கின்றார்கள். மழையைப் போலவே கருவுற்ற பெண்ணும் எப்போது பிரசவிப்பாள் என்பதைக் கணித்துக் கூற முடியாது என்பதை உணர்ந்த கிராமத்து மக்கள் உண்டாக்கிய பழமொழிதான் மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்பதாகும்.

கோடை காலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அப்போது கடுமையான மின்னலும் மின்னும். ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.

கோடைகாலத்தில் அந்தி நேரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் அந்தக் காலத்தில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்திருக்கின்றது. அந்தி மழை அழுதாலும் விடாது! என்ற தொடர், கோடை காலத்தின் இரவு நேரத் தொடர் மழையைக் குறிக்கிறது.

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே,

சேற்று நன்கு சேற்றில் ........

ஏற்றடிக்குதே..

கேணி நீர் படுசொறித் தவளை

கூப்பிடுகுதே! என்ற நாட்டுப் புறப்பாடல் மழை வருவதற்கான அறிகுறிகளைப் பற்றிப் பேசுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மேகம் திரண்டு வருவதை எங்கள் பகுதி மக்கள் மேகம் கொம்பில் முறுக்குகிறது என்று கூறுவார்கள். குளிர்ந்த தென்றல் காற்று சுற்றிச் சுற்றி வீசினால் மழை வரும் என்று நாட்டுப்புறத்து மக்கள் கணித்திருக்கிறார்கள்.

எறும்புகள், பள்ளமாக உள்ள இடத்தில் இருந்து தன் உணவுகளைத் தூக்கிக் கொண்டு மேடான இடத்திற்குச் சாரை சாரையாகச் சென்றால், விரைவில் மழை வரும் என்று கூறுகிறார்கள். எறும்புகளுக்கு மழையின் வருகையைப் பற்றிய முன் அறிவிப்புகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நிலநடுக்கம் ஏற்பட இருப்பதைச் சில பறவைகளும் , நாய் போன்ற விலங்குகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நண்டு மேடான இடத்திற்கு இடம் பெயர்வது தவளை சத்தம் போடுவது போன்றவை. மழை வரும் என்பதற்கான முன் அறிவிப்பாக கிராமத்து மக்கள் கருதி இருக்கிறார்கள். தவளைகள் போடும் சத்தத்தை கிராமத்து மக்கள் தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.

கோடை காலத்தில் ஈசான மூலையில் மின்னல் மின்னினால், விரைவில் நல்ல மழை பெய்யும் என்று கிராமத்துப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஈசானத்துல மழை கால் ஊன்றி இறங்கிப் பெய்ய ஆரம்பித்தால் ஈசானத்தில் இறங்குன மழை இருந்து பெய்யும் என்று கூறுகின்றார்கள்.

கார்த்திகை மாதம் பெய்யும் கனமழை கார்த்...... திருநாளுடன் நின்றுவிடும் என்று கூறுகின்றார்கள். கார்த்திகைத் திருநாள் அன்று கார்த்திகை தீபம் ஏற்றினால், மழை வெறித்துவிடும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். விளக்கிட்டபின் மழை கிழக்கிட்டுப் போகும் என்று ஒரு பழமொழி கூறுகின்றார்கள். விளக்கு என்பது கார்த்திகை விளக்கு அதாவது கார்த்திகை தீபம் என்று பொருள் கொள்ளலாம். கிழக்கிட்டு என்றால் மெலிந்து அதாவது குறைந்து போகும் என்று பொருள் கொள்ளலாம். கார்த்திகையின் பின் பகுதியில் மழை வெறித்துப் பொசுங்கலிகத்தூவும். அதைக் கெப்பேரி என்ற வட்டார வழக்குன சொல்லில் எங்கள் பகுதியில் கூறுகிறார்கள். கெப்பேரி முடிந்ததும் மார்கழி மாதம் பனி பெய்ய ஆரம்பித்துவிடும்.

புரட்டாசியில் நாற்றுப் பரவினால் ஐப்பசி, கார்த்திகை மாத மழையால் யார் நன்றாக நீர் பாய்ந்து செழிந்து வளரும். மார்கழி மாதப் பனியில் கதிர் தலை காய்ந்து விளையும். தை மாதம் கதிர் அறுத்துப் பொங்கலிடுவார்கள்.

எவ்வளவு வெயில் என்றாலும் அலைந்து திரிகிற மக்கள் மழையில நனைய மாட்டார்கள். ஆயிரம் வரவைத் தாங்களிடம் ஒரு பாராட்டைத் தாங்க முடியுமா? ஆயிரம் வெயிலைத் தாங்கலாம். தலை ஒரு மழையைத் தாங்குமா..? என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள் பாராட்டைத் தாங்க முடியாது என்று கூறுகிறார்கள். அதற்குச் சான்றாக மழையையும், வெயிலையும் கூறியுள்ளார்கள்.

இன்றைக்கு நாகரிக மனிதனால் ஒரு வசவைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், அவனால் ஆயிரம் புகழைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. இதுதான் கிராமத்தானும், நகரத்தானுக்கும் உள்ள வித்தியாசமாகும்.

மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு முகம் உண்டு என்று கூறும் கிராமத்து மக்களின் ரசனை அனுபவிக்கத் தகுந்ததாகும். மழை கால் ஊன்றி விட்டது என்ற வாக்கியத்தில் மழைக்கு கால் இருப்பதாகக் கூறி இருக்கும் கற்பனையும் ரசனையானதாகும். பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு கண் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மழையை ஒரு உயிருள்ள உருவமாகப் பார்த்துப் போற்றிய கிராமத்து மக்களின் அன்பை என்ன சொல்ல...

ரொம்பக் காலமாக மழையே பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

தொடர்ந்து தேவைக்கு அதிகமாக மழை பெய்து கொண்டே இருந்தால் தீப்பந்தங்களில் தீப்பற்ற வைத்துக் காட்டி...... மழை நின்று விடும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

கழனியூரன்

நன்றி: குமுதம்

பாமரன்  /  at  7:03 AM  /  கருத்துரை இடுகமழைதான் வாழ்வின் ஆதாரம். மனித வாழ்வில், இந்தக் காலத்தில் தண்ணீர், ஆகாரத்தை அடுத்த இடத்தை வகிக்கிறது. மழையின் தேவையை, மழையின் சிறப்பை மக்கள் காலங்காலமாக உணர்ந்துதான் இருக்கின்றனர்.

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன..?

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?
உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள்.

அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.
சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும். 
பாமரன்  /  at  6:53 AM  / 

இயல்(கள்): , , முழுமையாக வாசிக்க தொடரவும்»

நந்திக் கலம்பகம்

முதல் கலம்பக நூலாக நந்திக் கலம்பகம் என்ற நூல் காணப்படுகின்றது. நண்பர்களே! இந்த நந்திக் கலம்பகம் என்ற நூலைப் பற்றிச் சிறிது காண்போமா?
நந்திக் கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னர்களில் ஒருவன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் என்பவன் மீது பாடப்பட்டது ஆகும். இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.
4.2.1 மரபு வழி வரலாறு
இந்த நூலைப் பற்றிய மரபு வழிச் செய்தி ஒன்று உள்ளது. அதைப் பார்ப்போமா? நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவியர். ஒரு மனைவிக்குப் பிறந்தவன் நந்திவர்மன். மற்று ஒரு மனைவிக்குப் பிறந்தவர்கள் நால்வர். இந்த நால்வரும் நந்திவர்மனுக்குப் பின் பிறந்தவர்கள். நந்திவர்மன் இளமைப் பருவம் அடைந்ததும் அவன் தந்தை இறந்து விட்டார். எனவே, நந்திவர்மன், தன் தம்பியர் நால்வரையும் துரத்திவிட்டுத் தான் முடி சூடிக் கொண்டான். இந்தத் தம்பியர் நால்வருள் ஒருவரே நூல் ஆசிரியர் என்றும் கருதப்படுகிறது.
நந்திவர்மனால் துரத்தப்பட்ட தம்பியர் நால்வரும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர். எனவே ஒருவன் மந்திர வித்தையைப் படித்தான். ஒருவன் தந்திர வித்தையைப் படித்தான். மற்று ஒருவன் வாள் வித்தையைப் படித்தான். இன்னும் ஒருவன் தமிழ் நூல்களைக் கற்று நூல் இயற்றும் திறமை பெற்றான்.
பின், இவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து நந்திவர்மனை எதிர்த்துப் போர் செய்தனர். ஆனால், போரில் தோல்வி அடைந்தனர். அதன் பிறகே இந்த நூல் பாடப்பட்டது என்று கருதப்படுகிறது.
நந்திக் கலம்பகம் என்ற இந்த நூலை இயற்றிய பின்பு ஆசிரியர் துறவு மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். வீடுகள் தோறும் சென்று பாடல்களைப் பாடிப் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு பாடும் போது தாம் இயற்றிய நந்திக் கலம்பகப் பாடல்கள் சிலவற்றையும் பாடுவார்.
• கணிகையின் பாடல்
ஒரு நாள் புலவர், நந்திவர்மனின் தலைநகர் ஆகிய காஞ்சிபுரத்துக்கு வந்தார். ஒரு கணிகையின் வீட்டின் முன் நின்று சில நந்திக்கலம்பகம் பாடல்களைப் பாடினார். இதைக்கேட்ட அந்தக் கணிகை மனம் மகிழ்ந்தாள். புலவர் பாடிய பாடல்களை எழுதி வைத்துக் கொண்டாள். அந்தக் கணிகை, தான் எழுதி வைத்துள்ள பாடல்களைத் தன் மாளிகையின் மேல் மாடத்தில் இருந்து இரவில் பாடிக் கொண்டிருந்தாள். ஊர்க் காவலர்கள் நகரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். கணிகை பாடும் பாடல்களைக் கேட்டனர். கணிகை பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த காவலர்கள்,
வான்உறு மதியை அடைந்ததுஉன் வதனம்
     மறிகடல் புகுந்ததுஉன் கீர்த்தி
கான்உறு புலியை அடைந்ததுஉன் வீரம்
     கற்பகம் அடைந்ததுஉன் கரங்கள்
தேன்உறு மலராள் அரிஇடம் புகுந்தாள்
     செந்தழல் அடைந்ததுஉன் தேகம்
நானும்என் கலியும் எவ்விடம் புகுவேம்
     நந்தியே நம்தயா பரனே
   (நந்திக் கலம்பகம்: - 113)
TVU - c0123 - Audio Button
என்ற பாடலைக் கேட்டனர்.

(வான் உறு = வானத்தில் தோன்றும்; மதி = சந்திரன்; வதனம் = முகம்;மறி = மோதுகின்ற; கீர்த்தி = புகழ்; கான் = காடு; தேன் உறு மலராள் = திருமகள்; அரி = திருமால்; தழல் = நெருப்பு; தேகம் = உடம்பு; கலி = வறுமைத் துன்பம்; தயாபரன் = அருள் நிறைந்தவன்) 
நந்தி என்ற பெயர் உடைய மன்னனே! அருளில் மேம்பட்டவனே! நீ இப்போது இறந்து விட்டாய். எனவே உன் முகத்தின் ஒளி வானத்தில் உள்ள நிலவில் சேர்ந்துவிட்டது. உன் புகழ் கடலில் மூழ்கிவிட்டது. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்து விட்டது. உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் சேர்ந்து விட்டது. திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். இவை எல்லாம் போய் விட்டன. எனவே, உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. ஆனால் நானும் என் வறுமையும் எங்கே போய் வாழ்வோம் என்ற பொருளில் இப்பாடல் அமைகின்றது.
• கணிகையின் விடுதலை
மன்னன் இறந்துவிட்டதாகச் செய்தி உள்ளதை ஊர்க் காவலர்கள் அறிந்தனர். உடனே தம் தலைவனிடம் இதைக் கூறினர். தலைவன் அரசனிடம் அறிவித்தான். அரசன் அந்தக் கணிகையை அழைத்து வருமாறு கட்டளை இட்டான். கணிகையைக் காவலர்கள் அழைத்து வந்தனர். கணிகை நடந்ததைக் கூறினாள். அரசன் அந்தத் துறவி வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி ஆணை இட்டான்.
ஒரு நாள் துறவி வந்தார். அவரைக் காவலர்கள் அரசனின் முன் கொண்டு வந்தனர்.
அரசன் துறவியைக் கண்டான். அவர் வரலாற்றைக் கேட்டான். தன் தம்பி என உணர்ந்தான். மகிழ்ச்சி அடைந்தான். கலம்பகப் பாடல்களைப் பாடுமாறு அரசன் வேண்டினான். துறவி முதலில் மறுத்தார். பின் ஒப்புக் கொண்டார்.
4.2.2 பாடப்பட்ட முறை

பச்சை ஓலையால் நூறு பந்தல்கள் போட வேண்டும். ஒவ்வொரு பந்தலிலும் மன்னன் அமர்ந்து ஒவ்வொரு பாடலாகக் கேட்க வேண்டும். ஒரு பாடல் முடிந்ததும் அந்தப் பந்தல் எரிந்துவிடும். கடைசிப் பாடலைக் கேட்கும் முன் பந்தலில் விறகுகளை அடுக்கி அதன் மேல் படுத்துக் கொண்டு கேட்க வேண்டும். கடைசிப் பாட்டு முடிந்ததும் உன் உடலிலும் விறகிலும் தீப்பற்றி எரியும். நீ இறப்பாய். இதற்குச் சம்மதமா என்று துறவி கேட்டார். மன்னவனும் சம்மதித்தான். துறவி கூறியவாறு பந்தல்கள் போடப்பட்டன. ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் அந்தப் பந்தல் எரிந்தது.
 மன்னனின் தமிழ்ப்பற்று
இறுதியில் மன்னன் விறகை அடுக்கி அதன் மேல் படுத்தான். துறவி முற்கூறிய ''வான் உறு மதியை" என்று தொடங்கும் பாடலைப் படித்தார். மன்னன் உடலில் தீப்பற்றி எரிந்தது. மன்னன் இறந்தான். தமிழ் மொழி அல்லாத பிற மொழியைச் சேர்ந்த மன்னன் ஆகிய நந்திவர்மன் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக உயிர் விட்டான் என்பதை
இந்த மரபு வழியாக வரும் செய்தி மூலம் அறியமுடிகிறது.
பாமரன்  /  at  6:49 AM  /  கருத்துரை இடுக

Wednesday, October 16, 2013

தமிழ்மொழியில் அறிவியல்.

தமிழ் மொழியின் தொன்மை அளவிடற்கரியது. இந்த மொழியில் இருந்துதான் உலக மொழிகள் தோன்றின. பழைமையான பிராமி எழுத்துக்களாலும், வட்டெழுத்து சங்கிலி எழுத்துக்களாகவும் எழுதி வரப்பட்டது. இப்போது தமிழ் விஞ்ஞான பூர்வமாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் வாய்மொழி உத்தரவு...களை (VOICE COMMAND) கணினிகள் புரிந்து கொள்ளும் விதமாகவும் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் என்பது நம் சித்தர்களின் சர நூல் சாத்திர ரீதியாகவும் தமிழ் எழுத்துக்கள் இத்தனைதான் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிர் எழுத்துப் பன்னிரண்டும் வலது நாசியில் ஓடக் கொண்டிருக்கும் சூரியகலையைக் குறிக்கும். அதாவது அந்த சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதை 12 உயிரெழுத்துக்களாக்கி இருக்கிறார்கள்.

நெடில் ஏழும் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிப்பன. இதைக் குறிக்கவே திருக்குறளில் ஏழு சீர்களை வைத்துள்ளார். மேலும் 133 அதிகாரங்களையும் வைத்துள்ளார். அதாவது 1+3+3=7. குறில் எழுத்து ஐந்தும் ஐந்து ஐம்பூதங்களையும், பொறிகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள், புலன் ஐந்தைக் குறிக்கும்.

நெடில் ஏழு எழுத்துக்களும், குறில் ஐந்து எழுத்துக்களும் வைத்ததன் மற்றொரு காரணம் மனிதன் நெடிய ஆயுள், நெடிய புகழ், நெடிய ஞானம் பெற வேண்டும் என்பதற்காகவே. இவ்வாறு குறிலை குறைவாகவும் நெடிலை அதிகமாகவும் வைத்தார்கள்.

மெய்யெழுத்துக்கள் 18 வைத்ததன் காரணம் இடது நாசியில் ஓடும் சந்திர கலை 16 அங்குலம் ஓடுகிறது.அத்துடன் மனம், உயிர் இரண்டும் சேர்ந்து 18 மெய்யெழுத்துக்களாக வைத்துள்ளார்கள். ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையான 24 நிமிடத்திற்கு 360 மூச்சு (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே 216 உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன.
மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம்.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
மேலும் தனிநிலை என்பதான ஆயுத எழுத்தை முக்கண் முதல்வனான பரமசிவனுக்கு இணையாக வைத்தார்கள்.
தமிழ் என்ற சொல்லே ஒரு வல்லெழுத்து(த), மெல்லெழுத்து(மி), ஒரு இடையின எழுத்து(ழ்) எனக்கோர்த்து உருவாக்கப்பட்டது. இப்படி தமிழ் மொழி எழுத்துக்கள் பல காரணங்களை வைத்து எழுத்தாக்கம் செய்துள்ளார்கள். கிளவியாக்கம் என்பது சொல்லாக்கம் என்பதுவே! இந்த சொல்லாக்கப்படுவதற்கு பல விதிமுறைகளோடு இயற்கையோடு இயைந்த மொழி நம் தமிழ்மொழி! என்பதில் பெருமை கொள்வோம்.

-நன்றி வேய்ங்குழல்
பாமரன்  /  at  10:30 AM  /  2 கருத்துரைகள்

2 கருத்து(கள்):

வள்ளலார் ஒர் அணுவிஞ்ஞானி

இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில்தான் மேல்நாட்டு அணுவிஞ்ஞானிகள் அணுவை பிளக்க முடியும் என்று கண்டறிந்தனர் அணுவைப் பிளந்தால் உள்ளே கரு(nucleus) எலெக்ட்ரான், புரோட்டான் நியூட்ரான் போன்ற அணுத்துகள்கள் கருவைச் சுற்றி வேகமாக கிரகங்களைப் போல் சுற்றிவருகின்றன என்று கண்டறிந்து கூறினர் ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலார் அணுவுக்குள்ளே என்னென்ன அணுத்துகள்கள் உண்டு என்று ஒரு பெரிய பட்டியலையே தருகின்றார்

தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள்ஓர் அனந்தம்
ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி (திருஅருட்பா 5661)

ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்கிறை ஒன்றாம்... (திருஅருட்பா 5641)
.

மேற்கண்ட பாடல்களில் அணுத்துகள்களைத் தாம் நேரில் கண்டு அவற்றை குருத்துவிகள், அசலைகள், அமலைகள், பிரகாசிகள், பரமாணு என்று பெயரிடுகிறார் *பிரகாசிகள் என்பவற்றை (protons) என்று இன்று அணுவிஞ்ஞானிகள் அழைக்கின்றனர்

சுமார் ஏழு மாதங்களுக்கு முன் ஸ்விட்சர்லாந்து நாட்டில் செர்ன்(cern) என்ற இடத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவுல் உலக அணு அணுவிஞ்ஞானிகள் ஒரு பரிசேதனை செய்தனர் எதற்காகவென்றால் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு (BIg Bang) ஏற்பட்டு பிராபஞ்சம் தோன்றியபோது சக்தி பொருளாக மாற்றம் பெற்றது அதில் முதலில் தோன்றிய அணுத்துகள் எது என்று கண்டறிந்தனர் அதை *(GOD Particle) என்று அழைத்தனர் அதை *பரமாணு* என்று முன்னரே அழைத்திருப்பது வியப்பு

மற்றுமோர் நிரூபணம் 1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி சார்பியல் தத்துவம் (Theory Of Relativity) விஞ்ஞானக் கொள்கையை நிறுவினார் உலகம் ஏற்றுக்கொண்டது அக்கொள்கையின் சூத்திரம் E = mc2 அதாவது

சக்தி(Energy)= ஒரு பொருளின் எடை(Mass)x ஒளியின் வேகம்x ஒளியின் வேகம்x ஒளியின் வேகம் (ஒளியின் வேகம் = 1வினாடிக்கு 3லட்சம் கிமீ).

பாமரன்  /  at  10:26 AM  /  கருத்துரை இடுக

பலி பீடம்

--------------
கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும்.....

காமம்,
ஆசை,
குரோதம் (சினம்),
லோபம் (கடும்பற்று),
மோகம் (கற்பு நெறி பிறழ்வு),
பேராசை,
மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),
மாச்சர்யம் (வஞ்சம்),

எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.

பாமரன்  /  at  10:23 AM  /  கருத்துரை இடுக

சிறுவயதிலும் சோறு போட்ட காமராஜர்

**********************************

காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம்
வகுப்பு படித்து வந்தபோது நடந்த சம்பவம் இது.

அந்தப் பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உணவுக்கு சிறுவன் காமராஜ்
வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவளிப்பார். அந்தச் சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார்.

பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம்.

ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், "இனிமேல் மதிய
உணவைக் கட்டிக் கொடுத்துவிடுங்கள். பள்ளியில்
வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கேட்டார்.

பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்படித் தர
முடியாது, வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டுச் செல்ல
வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறினார். ஆனாலும்
காமராஜர் அழுது அடம்பிடிக்கவே, கோபமுற்ற
பாட்டி அவரை அடித்துவிட்டார்.

அடிவாங்கினாலும் காமராஜர் சாப்பாடு கட்டித்
தரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்லப்
பேரனின் பிடிவாதத்தைக் கண்டு மனமிரங்கிய பாட்டி,
தினமும் மதிய உணவைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.

நாட்கள் சென்றன.

பாட்டி, ஒருநாள் பள்ளிக்குச் சென்று மதியவேளையில் பேரன் எப்படிச் சாப்பிடுகிறான் என்பதை மறைவாக நின்று கவனித்தார். அங்கே, கிழிந்த அழுக்குச் சட்டையுடன் இருந்த ஓர் ஏழைச் சிறுவனோடு தனது உணவைப்
பகிர்ந்து உண்டுகொண்டிருக்கும் காமராஜரைக்
கண்டு மனம் நெகிழ்ந்து போனார்.

இவ்வளவு நல்ல மனம் கொண்டவனை அடித்துவிட்டோமே
என்று பாட்டிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது.
காமராஜரின் உணவைப் பகிர்ந்து கொண்ட அந்தச் சிறுவன்
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தினமும்
தண்ணீர் குடித்துப் பசி தீர்த்துக் கொள்பவன். அவனைக் கண்ட காமராஜரின் மனம் பதை பதைக்கவே அவனுக்காக வீட்டிலிருந்து அழுது அடம்பிடித்துச் சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். இதனால் அவரது மனம் நிறைவு பெற்றது.

இதுதான் அவர் பின்னாளில் தமிழக முதல்வரானபோது மதிய உணவுத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த வித்தாக
இருந்தது.

- Rajan Radan

பாமரன்  /  at  10:21 AM  /  கருத்துரை இடுக

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.