வாழ்க தமிழ்!

Tuesday, September 17, 2013

உங்களுக்குத் தெரியுமா?

பாமரன்  /  at  6:41 AM  /  கருத்துரை இடுக

உங்களுக்குத் தெரியுமா? சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?

அருந்துதல் =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)

உண்ணல் =பசி தீர உட் கொள்ளல்

உறிஞ்சல் =வாயைக் குவித்து நீரியல்
பண்டங்களை இழுத்தல்

குடித்தல் =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)

தின்னல் =சுவைக்காக
ஓரளவு தின்னுதல்(முறுக்கு)

துய்த்தல் =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்

பருகல் =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்

விழுங்கல் =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வழி உட்கொள்ளல் (மாத்திரை)

பகிர்
இயல்(கள்): இதழ் வெளியான நாள்: Tuesday, September 17, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.