வாழ்க தமிழ்!

Monday, September 30, 2013

திருட்டா? கொள்ளையா?

பாமரன்  /  at  2:50 PM  /  கருத்துரை இடுக


இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.

                        பறிகொடுத்தது ஒரு பெரிய தொகை அல்லது கிலோ கணக்கில் நகைகள் என்றால் அது கொள்ளை என்றும், தொகையோ நகையோ குறைவாக இருந்தால் அது திருட்டு என்றும் நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது.
                        உங்கள் வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் நுழைந்து கோடி ரூபாயை அடித்துச் சென்றாலும் அது திருட்டுதான். அதே சமயம், உங்களுக்குத் தெரிந்து, நீங்கள் எதிர்க்கும் பட்சத்தில் வன்முறை மூலம் ஒரு ரூபாயை அடித்துச் சென்றாலும் அது கொள்ளைதான்.
                        சாலையில் போகிறபோக்கில் உங்களிடம் அடித்துச் சென்றால் அது வழிப்பறி. தொடர்பான சில சொற்கள்: களவு, ஜேப்படித் திருட்டு, ஜேப்படித் திருடன், அபகரித்தல், களவாணி, திருடன், திருடி, கொள்ளையர்.

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Monday, September 30, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.