வாழ்க தமிழ்!

Sunday, August 18, 2013

நடுகல் - 12 ம் நூற்றாண்டு

பாமரன்  /  at  8:23 AM  /  கருத்துரை இடுக

பழநி: திருப்பூர் மாவட்டம், போளரை கிராமத்தில், கி.பி., 12ம் நூற்றாண்டில் புலியைக் கொன்ற வீரனுக்காக அமைக்கப்பட்ட நடுகல், கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பழநி, தொல்லியல் ஆய்வாளர், நாராயணமூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் மூவர், போளரையில் ஆய்வு நடத்தினர். அப்போது, 800 ஆண்டுகளுக்கு முன், ஊருக்கு தொல்லை தந்த புலியைக் கொன்று, அந்த போராட்டத்தில் உயிரிழந்த வீரனின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல், கண்டுபிடிக்கப்பட்டது.

நாராயணமூர்த்தி கூறியதாவது: போளரையில் கிடைத்த நடுகல், 100 செ.மீ., உயரமும், 92 செ.மீ., அகலமும், 185 செ.மீ., சுற்றளவும் உள்ளது. தலையில் கிரீடம் வைத்த ஒரு வீரன், வலது கையில் உள்ள வாளால், புலியின் மார்பில் குத்திக் கொல்வதும், இடதுகையை புலி கடித்திருப்பதும் போன்று, காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் மேல், வட்டெழுத்து வடிவிலான எழுத்துகள், அழிந்து காணப்படுவதால், வீரனின் பெயர் தெரியவில்லை. இந்த எழுத்தின் வடிவமைப்பை வைத்து, அது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் என, உறுதியாகியுள்ளது. இதை, "புலிக்குத்திக்கல்' என அழைப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.


நன்றி: தினமலர்

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Sunday, August 18, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.