வாழ்க தமிழ்!

Thursday, July 25, 2013

பேசும் முன்பு , சிறிதேனும் யோசி!

பாமரன்  /  at  7:35 PM  /  கருத்துரை இடுக

ஒரு இளம் தம்பதி புகையிதத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு எதிரே கிட்டத்தட்ட 20 வயது நிறம்பிய ஒரு வாட்டசாட்டமான வாலிபன் யன்னல் ஓரத்தில் மகிழ்ச்சி நிறம்பிய முகத்தோடு தனது தந்தையுடன் அமர்ந்திருந்தான். 

புகையிரதமும் பயணத்தை ஆரம்பித்தது. பயணம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அந்த வாலிபன் காண்கின்ற அனைத்தையும் ஆச்சரியத்தோடு தனது தந்தையிடம் விபரிக்க ஆரம்பித்தான். "மரங்கள் எல்லாம் பின்னோக்கிச் செல்கின்றன", "சூரியன் எம்மையே பின் தொடர்கின்றது" என்றிருந்தது அவனது விபரிப்புக்கள். தந்தையோ அனைத்தையும் புன்னகையோடு ஆமோதித்துக் கொண்டிருந்தார். 

20 வயதான வாலிபனின் இந்த சிறுபிள்ளைத்தனமான நடத்தையை பார்த்துக் கொண்டிருந்த தம்பதியினர் இறுதியில் பொறுமையிழந்து தந்தையை நோக்கி இவனை ஒரு சிறந்த வைத்தியரிடம் காட்டினால் நன்றாக இருக்குமே என்று எரிச்சலோடு ஆலோசனை கூறினர். 

தந்தை சற்று அதிர்ச்சியுற்றவராக புன்னகையை வரவழைத்துக் கொண்டு கூறினார் "நாம் இப்பொழுது வைத்தியரிடமிருந்து தான் வருகின்றோம், எனது மகன் பிறவியிலிருந்தே குருடன், இன்று தான் சத்திரசிகிச்சைக்குப் பிறகு கண் பார்வையைப் பெற்றிருக்கின்றான்."

எந்த ஒரு மனிதனையும் அவரைப் பற்றிய உண்மைகளை அறியாது எடைபோட்டு விடாதீர்கள், ஏனெனில் அவரைப் பற்றிய உண்மைகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடலாம்...!

-------------------------------------------------------------
Like & Share : தமிழ் -கருத்துக்களம்-

பகிர்
இயல்(கள்): , இதழ் வெளியான நாள்: Thursday, July 25, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.