வாழ்க தமிழ்!

Thursday, July 25, 2013

உதவி செய்யாமல் சொல்லும் அறிவுரைக்கு மதிப்பிருக்காது

பாமரன்  /  at  7:26 PM  /  கருத்துரை இடுக

குளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மூழ்கும் அபாயத்தில் இருந்தான். அப்பொழுது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கத்தி கூப்பிட்டு உதவிக்கு அழைத்தான்.

அவரோ அவனுக்கு உதவிக் கரம் கொடுப்பதற்கு பதிலாக அந்த பையனின் அவசரப் புத்திக்காக அவனைக் கடிந்து கொண்டு,

அவனுக்கு ‘இப்படி தண்ணீரில் இறங்கக் கூடாது’ என்று அறிவுரை செய்து கொண்டிருந்தார்.

அதற்கு அந்தப் பையன், “முதலில் என்னைக் காப்பற்றுங்கள். உங்கள் அறிவுரையைக் கேட்பதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமே?” என்றான்.

நீதி : உதவி செய்யாமல் சொல்லும் அறிவுரைக்கு மதிப்பிருக்காது.

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Thursday, July 25, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.