வாழ்க தமிழ்!

Saturday, July 13, 2013

காமராசர் பிறந்த நாள் நம் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்

பாமரன்  /  at  8:30 PM  /  கருத்துரை இடுக

Photo: "காமராஜ் முதலமைச்சராக இருந்த போது மதுரைக்கு சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையிலோ இரவு மின்சாரம் இல்லை. ஊழியர்கள் வந்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருந்த காமராஜ், " கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்றார்.

அறைக்குள்ளிருந்த கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டுவந்து போட்டார்கள்.

காமராஜ் படுக்க வந்தார். கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

" நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று போலிஸ்காரரை அனுப்பிவைத்த காமராஜ் சில நொடிகளில் உறங்கிவிட்டார்.

இந்த எளிமை உலக வரலாற்றில் எந்த மக்கள் தலைவரிடமும் காண்பது அரிது."

படிக்காதவனுக்கு மாலையா...?

காமராஜர் ஒரு முறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். 

அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தனர்.

வந்திருந்தவர்களில் ஒரு ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்தார்.

அந்த ஆசிரியரைப் பார்த்த காமராஜர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே?” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது.

கற்போம்! கற்பிப்போம்!!

பகிர்
இயல்(கள்): , , இதழ் வெளியான நாள்: Saturday, July 13, 2013

0 கருத்து(கள்):

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.