வாழ்க தமிழ்!

Thursday, July 25, 2013

நீ சாதிக்கப் பிறந்தவன்

பாமரன்  /  at  8:06 PM  /  கருத்துரை இடுக

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

ஆச்சரிய வங்கி: ஒரு சின்னக் கற்பனை.ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
பாமரன்  /  at  7:58 PM  /  கருத்துரை இடுகஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

தனக்கென்றால் தனி வழக்குதான்

தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி ஒரு மனிதனுக்கும் ஒரு சிங்கத்திற்கும் ஒரு நாள் தர்க்கம் ஏற்பட்டது.

ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல பக்கத்தில் ஒரு சிலை இருந்தது.
''அதைப் பார்த்தாயா?யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.''என்றான் மனிதன்.
''ஓ,அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் சிலை செய்யுமானால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது,தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.

தனக்கென்றால் தனி வழக்குதான்.

முட்டி மோதி 
முளைக்கும் விதைகள் கூட 
சிறியது தான், 
ஆனால் அது சொல்லும்
பாடம் மிக பெரியது . 
                           -விடாமுயற்சி!

ஐயோ மழையா விட, 
ஐ மழை என்று சொல்லுங்க, 
நிறைய மழை பெய்ய வாய்ப்பு உண்டு . 
எண்ணங்கள் வலிமை கொடுக்கும் !

பாமரன்  /  at  7:55 PM  /  கருத்துரை இடுக

பாதை தெரியுது பார்

பாதை தெரியுது பார்:

பிறப்பில்லாத நிலை வேண்டும், கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பாகவதர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த ஒரு பக்தர் எழுந்து,""நீங்கள் சொல்வது சரி. பிறப்பற்ற நிலையை அடைய ஒரு வழியைச் சொல்லுங்களேன்!'' என்றார்.

"ஒரு கதையைக் கேள். சிங்கம் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிக்க ஆசைப்பட்டது. அது முதல் மலையில் நின்றது. ஏழாவது மலைக்கு தாவி விட்டால் வெங்கடாஜலபதியைப் பார்த்து விடலாம். அப்போது, ஒரு எறும்பு வந்தது. அதற்கும் ஏழுமலையானை தரிசிக்க ஆசை.

"சிங்கம் மலையைத் தாண்டி பகவானைப் பார்த்து விடும். என்னால் அது எப்படி சாத்தியம். நான் ஊர்ந்து சென்றால் பலநாட்கள் ஆகி விடுமே! வழியில், யாரும் மிதித்து விட்டால், மீண்டும் இன்னொரு பிறவி எடுத்து...'

இப்படி சிந்தித்த எறும்புக்கு "டக்'கென ஒரு யோசனை வந்தது. சிங்கத்தின் உடலில் ஒட்டிக்கொண்டால், அது தாவும் போது நாமும் ஏழுமலையைத் தாண்டி விடுவோம். அவன் தரிசனம் கிடைத்தால் பிறவிப்பிணி தீரும் என்று எண்ணியது. அதன்படியே செய்து தரிசனம் பெற்றது.

இதுபோலத் தான், நீயும் மகான்கள் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொள். அவரையே மானசீக குருவாக ஏற்றுக்கொள். அங்கே கேட்கும் நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும்,'' என்றார்.

பாமரன்  /  at  7:51 PM  /  கருத்துரை இடுக

தன்னம்பிக்கை

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார்.

அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர்.

அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். ஆனால்,

எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.

தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

via Nirosha Naren

Visit our Page -► தமிழால் இணைவோம்

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]
பாமரன்  /  at  7:49 PM  /  கருத்துரை இடுக

இதுதானே நமக்கும் வேண்டும்...

இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள்.

 படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள்

“காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறது” என்று கேலி செய்தார்கள்.

படகோட்டி வந்து படகை இயக்கினார்.

சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது.

அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி

எச்சரிக்கையாய் இயக்கி படகைக் கரை சேர்த்தார்.

“நீங்கள் எங்கள் பிரார்த்தனையில் பங்கெடுக்கவிலையே?

வியப்புடன் கேட்டவர்களுக்குச் சொன்னார்.

“கடல் அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன்

. கொந்தளிக்கும் போது படகைக் கையாள்கிறேன்”.

இதுதானே நமக்கும் வேண்டும்.பாமரன்  /  at  7:46 PM  /  கருத்துரை இடுக

இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள்.

 படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள்

“காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறது” என்று கேலி செய்தார்கள்.

படகோட்டி வந்து படகை இயக்கினார்.

சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது.

அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி

எச்சரிக்கையாய் இயக்கி படகைக் கரை சேர்த்தார்.

“நீங்கள் எங்கள் பிரார்த்தனையில் பங்கெடுக்கவிலையே?

வியப்புடன் கேட்டவர்களுக்குச் சொன்னார்.

“கடல் அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன்

. கொந்தளிக்கும் போது படகைக் கையாள்கிறேன்”.

இதுதானே நமக்கும் வேண்டும்.இயல்(கள்): , , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.

விட்டுக் கொடுங்கள்; 
விருப்பங்கள் நிறைவேறும். 

தட்டிக் கொடுங்கள்; 
தவறுகள் குறையும். 

மனம் விட்டுப் பேசுங்கள்;
அன்பு பெருகும்...!

நான் தான் புத்திசாலி என்று 
நினைப்பதே முட்டாள்தனம் தான் .

நொடி முள் நகர்கிறது,
உனக்கும் 
எனக்கும்
ஒரே மாதிரியாக தான் .
பாமரன்  /  at  7:44 PM  /  கருத்துரை இடுக

விட்டுக் கொடுங்கள்; 
விருப்பங்கள் நிறைவேறும். 

தட்டிக் கொடுங்கள்; 
தவறுகள் குறையும். 

மனம் விட்டுப் பேசுங்கள்;
அன்பு பெருகும்...!

நான் தான் புத்திசாலி என்று 
நினைப்பதே முட்டாள்தனம் தான் .

நொடி முள் நகர்கிறது,
உனக்கும் 
எனக்கும்
ஒரே மாதிரியாக தான் .
இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

நீ செய்தால் சரி! நான் செய்தால் தவறா?வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக
அதிகமாக வந்தது.
அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக
படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க
இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார்
இதற்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக
தொலை பேசி மட்டுமே உபயோக
படுத்துறேன். எனக்கு தெரியாது.
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான்
அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான்
உபயோக படுத்துறேன். எனக்கும்
தெரியாதுப்பா.
நாம யாரும் உபயோக
படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம்
வரும்னு தலைய
பிச்சிகிட்டு இருந்தாங்க.

அது வரைக்கும் அமைதியா இருந்த
வேலைக்காரன் சொன்னான்,
உங்களை மாதிரி தான் நானும். என்னோட
அலுவலக தொலை பேசி மட்டுமே பயன்
படுத்துறேன். என்ன தப்பு...?
சில நேரங்களில் நாம் செய்யும்
தவறு நமக்கு புரிவதே இல்லை,
வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...

‪#‎karthimugil‬
பாமரன்  /  at  7:38 PM  /  கருத்துரை இடுகவீட்டின் தொலை பேசி கட்டணம் மிக

பேசும் முன்பு , சிறிதேனும் யோசி!

ஒரு இளம் தம்பதி புகையிதத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு எதிரே கிட்டத்தட்ட 20 வயது நிறம்பிய ஒரு வாட்டசாட்டமான வாலிபன் யன்னல் ஓரத்தில் மகிழ்ச்சி நிறம்பிய முகத்தோடு தனது தந்தையுடன் அமர்ந்திருந்தான். 

புகையிரதமும் பயணத்தை ஆரம்பித்தது. பயணம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அந்த வாலிபன் காண்கின்ற அனைத்தையும் ஆச்சரியத்தோடு தனது தந்தையிடம் விபரிக்க ஆரம்பித்தான். "மரங்கள் எல்லாம் பின்னோக்கிச் செல்கின்றன", "சூரியன் எம்மையே பின் தொடர்கின்றது" என்றிருந்தது அவனது விபரிப்புக்கள். தந்தையோ அனைத்தையும் புன்னகையோடு ஆமோதித்துக் கொண்டிருந்தார். 

20 வயதான வாலிபனின் இந்த சிறுபிள்ளைத்தனமான நடத்தையை பார்த்துக் கொண்டிருந்த தம்பதியினர் இறுதியில் பொறுமையிழந்து தந்தையை நோக்கி இவனை ஒரு சிறந்த வைத்தியரிடம் காட்டினால் நன்றாக இருக்குமே என்று எரிச்சலோடு ஆலோசனை கூறினர். 

தந்தை சற்று அதிர்ச்சியுற்றவராக புன்னகையை வரவழைத்துக் கொண்டு கூறினார் "நாம் இப்பொழுது வைத்தியரிடமிருந்து தான் வருகின்றோம், எனது மகன் பிறவியிலிருந்தே குருடன், இன்று தான் சத்திரசிகிச்சைக்குப் பிறகு கண் பார்வையைப் பெற்றிருக்கின்றான்."

எந்த ஒரு மனிதனையும் அவரைப் பற்றிய உண்மைகளை அறியாது எடைபோட்டு விடாதீர்கள், ஏனெனில் அவரைப் பற்றிய உண்மைகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடலாம்...!

-------------------------------------------------------------
Like & Share : தமிழ் -கருத்துக்களம்-
பாமரன்  /  at  7:35 PM  /  கருத்துரை இடுக

பிறரை நம்புவதை விட நீ உன்னை நம்பி நட...

பிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட..
………………………………………………………………….

நெல் வயலில் காடை ஒன்று முட்டையிட்டுக் குஞ்சு களைப் பொரித்தது.

அந்த வயலில் நெற்கதிர்கள் நன்கு முற்றி அறுவடைக்குத் தயாராகி நின்றன.

வயலின் சொந்தக்காரன் எப்பொழுது வேண்டுமானாலும் அறுவடைக்கு வரலாம் என்று நினைத்தது காடை.

தன் குஞ்சுகளைப் பார்த்து ‘நான் இல்லாத போது யார் இங்கே வந்து என்ன பேசினாலும் என்னிடம் சொல்ல வேண்டும் என்றது.

குஞ்சுகளுக்கு உணவுடன் மாலையில் திரும்பியது காடை. நடுக்கத்துடன் குஞ்சுகள், ‘அம்மா வயலின் சொந்தக்காரர் தன் மகனுடன் இங்கு வந்தார். ‘மகனே நெல் நன்றாக விளைந்துள்ளது.

நம் நண்பர்களையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் அழைத்து வந்து நாளையே அறுவடை செய்ய வேண்டும்’ என்றார்.

மகனும் சரி என்றான். இருவரும் சென்று விட்டார்கள்.

நாம் இனி இங்கே இருப்பது ஆபத்து. எங்காவது சென்றுவிட வேண்டும்’ என்றன.

‘குஞ்சுகளே! அஞ்ச வேண்டாம். நாளை நமக்கு எந்த ஆபத்தும் வராது.

நாளை இங்கே என்ன நடக்கிறது என்பதைக் கேட்டு என்னிடம் சொல்லுங்கள்’ என்றது காடை.

மறுநாள் மாலை தன் குஞ்சுகளுக்கு உணவுடன் வந்தது காடை.

‘அம்மா வயலின் சொந்தக்காரரும் மகனும் இங்கே வந்து காத்திருந்தார்கள்.

நண்பர்களும் அக்கம் பக்கத்தவர்களும் வரவில்லை. தன் மகனிடம் அவர் ‘நம் உறவினர்களை நாளை அறுவடைக்கு நான் வரச் சொன்னதாகச் சொல்’ என்றார்.

இருவரும் சென்று விட்டார்கள். நாளை கண்டிப்பாக இங்கே அறுவடை நிகழும்.

இப்பொழுதே நாம் எங்காவது சென்று விட வேண்டும்’ என்றன குஞ்சுகள்.

‘அஞ்ச வேண்டாம். நாளை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்றது காடை.

வழக்கம் போல மாலை நேரத்தில் உணவுடன் தன் குஞ்சுகளிடம் வந்தது அது.

‘அம்மா உறவினர்களுக்காக நிலத்தின் சொந்தக்காரரும் மகனும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள் யாரும் வரவில்லை.

மகனே!

பிறரை நம்பிப் பயன் இல்லை.

அரிவாள்களைக் கூர்மைப்படுத்தித் தயாராக வை.

நாளை நாமே வந்து அறுவடை செய்வோம் என்றார்.

இருவரும் சென்றுவிட்டார்கள்’ என்றன குஞ்சுகள்.

‘குழந்தைகளே..!

இனி நாம் தாமதிக்கக் கூடாது.

உடனே பாதுகாப்பான வேறு இடத்திற்குச்

சென்றுவிட வேண்டும்.

எப்பொழுது ஒருவன் தன் வேலையைத்தானே செய்ய
.............................................................................................. முடிவுசெய்து விட்டானோ , அந்த வேலை முடிந்து விடும்’
................................................................................................

என்ற காடை ,

தன் குஞ்சுகளுடன் அங்கிருந்து

வேறு இடத்திற்குச் சென்றது.

ஆம், நண்பர்களே.,

தங்கள் வேலையை தானே செய்து அதில் வெற்றியும் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மாறுகின்றனர்...

பிடிக்காத வேலையில் அமர்ந்து சராசரி மனிதனாக இருப்பதை விட ,

பிடித்த வேலையை செய்து மேதையாக முயற்சி செய்வதே சிறந்தது.

நம்பிக்கையோடு உங்கள் முதலடியை எடுத்து வையுங்கள்.

-
பாமரன்  /  at  7:33 PM  /  கருத்துரை இடுக

தோல்வி

பாமரன்  /  at  7:29 PM  /  கருத்துரை இடுக

இயல்(கள்): முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

உதவி செய்யாமல் சொல்லும் அறிவுரைக்கு மதிப்பிருக்காது

குளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மூழ்கும் அபாயத்தில் இருந்தான். அப்பொழுது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கத்தி கூப்பிட்டு உதவிக்கு அழைத்தான்.

அவரோ அவனுக்கு உதவிக் கரம் கொடுப்பதற்கு பதிலாக அந்த பையனின் அவசரப் புத்திக்காக அவனைக் கடிந்து கொண்டு,

அவனுக்கு ‘இப்படி தண்ணீரில் இறங்கக் கூடாது’ என்று அறிவுரை செய்து கொண்டிருந்தார்.

அதற்கு அந்தப் பையன், “முதலில் என்னைக் காப்பற்றுங்கள். உங்கள் அறிவுரையைக் கேட்பதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமே?” என்றான்.

நீதி : உதவி செய்யாமல் சொல்லும் அறிவுரைக்கு மதிப்பிருக்காது.
பாமரன்  /  at  7:26 PM  /  கருத்துரை இடுக

திருடனாலும் திருட இயலாது

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?”

என்று பறவை தேனீயிடம் கேட்டது.

“எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும்.

தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.

தன்னுடைய தனித்தன்மையை நம்புபவர்கள் மற்றவர்கள் சதியில் மலைப்பதில்லை
பாமரன்  /  at  7:24 PM  /  கருத்துரை இடுக

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?”

என்று பறவை தேனீயிடம் கேட்டது.

“எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும்.

தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.

தன்னுடைய தனித்தன்மையை நம்புபவர்கள் மற்றவர்கள் சதியில் மலைப்பதில்லை

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைப்படாதே!

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
பாமரன்  /  at  7:21 PM  /  கருத்துரை இடுக

வேண்டாம் கோபம்

"மனைவி என்பவள் கணவனுக்கு
கண்ணாடியை போன்றவள் ஆவாள். . !

கணவனாகிய நீங்கள் சிரித்தால்
அவளும் சிரிப்பாள். . !

நீங்கள் அழுதால் அவளும்
அழுவாள். . !

ஆனால் நீங்கள் முறைத்தாலோ
அல்லது ஏசினாலோ அவள்
உடைந்துவிடுவாள். . !

தயவு செய்து
உங்களின் கவலைகளை
கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . !

கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்!
பாமரன்  /  at  7:20 PM  /  கருத்துரை இடுக

"மனைவி என்பவள் கணவனுக்கு
கண்ணாடியை போன்றவள் ஆவாள். . !

கணவனாகிய நீங்கள் சிரித்தால்
அவளும் சிரிப்பாள். . !

நீங்கள் அழுதால் அவளும்
அழுவாள். . !

ஆனால் நீங்கள் முறைத்தாலோ
அல்லது ஏசினாலோ அவள்
உடைந்துவிடுவாள். . !

தயவு செய்து
உங்களின் கவலைகளை
கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . !

கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்!

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

Sunday, July 21, 2013

வழியாவது சொல்லுங்களேன்?

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திணைமாலை நூற்றைம்பது அறநெறிகளைக் கூறுவதோடு அகவாழ்வைக் காட்டும் நூலாகவும் திகழ்கிறது.
தாயின் இற்செறிப்பையும் காவலையும் மீறி தலைவி, தலைவனோடு உடன்போக்கு சென்றுவிடுகிறாள். மகளைக் காணாமல் தாய் தவிக்கிறாள்; அவளைத் தேடிச் செல்கிறாள். செல்லும் வழியில் கோங்கமரம் ஒன்று வளைந்து வளர்ந்திருப்பதையும், அதனருகே குராமரம் சிறு சிறு காய்களோடு வளர்ந்திருப்பதையும் காண்கிறாள். தாழ்ந்த கோங்கமரம் குராமரத்தோடு ஒட்டி வளர்ந்திருக்கிறது. இக்காட்சியானது வளைந்து தாழ்ந்திருக்கும் மரமானது தன் சேய்க்கு பாலூட்டும்போது தனது உடலைச் சாய்த்துக் குனிந்திருக்கும் தாய் போலவும், அதனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குராமரத்தின் காய்கள், பாலுண்ணும்போது தாயின் மார்பகத்தைப் பாசத்தோடு பார்க்கும் பெண் குழந்தைகளைப் போலவும் இருந்தது.
இதைக்கண்ட தாய்க்குத் தன் மகள்மேல் இருந்த பாசம் மேலும் அதிகமானதுடன் தவிப்பும் கூடியது. அம்மரங்களைப் பார்த்து ""என் மகள் தன் காதல் தலைவனோடு இவ்வழிச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அவள் என் மகள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களைப் பற்றி என்னிடம் கூறாமல் விட்டிருப்பீர்கள். அப்போது கூறியிருந்தால் அவளைப் போகவிடாமல் தடுத்திருப்பேன். பரவாயில்லை, அவர்கள் இருவரும் எவ்வழி சென்றார்கள் என்பதை இப்போதாவது சொல்லுங்களேன்'' என்று புலம்பிக் கேட்கிறாள்.

""தான்தாயாக் கோங்கம் தளர்ந்துமுலை கொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங்குரவே - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்எயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈது என்று வந்து'' (பா.65)

வளைந்து வளர்ந்திருக்கும் கோங்க மரத்தைப் பாலூட்டும் தாயாகவும், ஒட்டியிருக்கும் குராமரக் காய்களைப் பாலுண்ண தாயின் மார்பகம் நோக்கிப் பார்க்கும் சேயாகவும் கற்பனை செய்து பாடியிருப்பதும்; தாய்-சேய் உறவை வலுப்படுத்த வேண்டி தாயின் மடிபார்க்கும் காய்களைக் குழந்தைகள் என்று பாடாமல், அக்காய்களைப் "பாவை' என்று பாடியிருப்பதும் ஆசிரியர் கணிமேதாவியாரின் கற்பனைத் திறத்தைக் காட்டுகின்றன.
தகவல்:  தினமணி
பாமரன்  /  at  8:52 AM  /  கருத்துரை இடுக

வறுமையின் கொடுமை இதுவா?

பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த சிறுபாணாற்றுப்படை ஓர் ஆற்றுப்படை இலக்கியம். 269 அடிகளைக் கொண்ட நெடும்பாடல். இது ஓய்மாநாட்டு நல்லிக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவரால் பாடப்பட்டது.
ஆற்றுப்படையின் தலையாய மாந்தராகிய ஆடி மகிழ்விக்கும் கூத்தரும், பாடிப் பரவசப்படுத்தும் பாணரும், இசைக் கருவியின் மூலம் இன்பமூட்டும் பொருநரும் விறலியும் ஆகிய நாற்பாலரும், அரசர்களையோ, வள்ளல்களையோ பாடிப்புகழ்ந்து தாம் பெற்றுவந்த பெருஞ் செல்வத்தை, எதிர்வந்த தம்போன்ற வறிய கலைஞனும் பெறவேண்டும் என அவருக்கு அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படை இலக்கியமாகும்.
இப்பாடலில், "செங்கோட்டியாழ்' என்னும் சீறியாழ் (சிறிய யாழ்) வாசிக்கும் யாழ்ப்பாணர் "சிறுபாணர்' என அழைக்கப்பட்டனர். சிறுபாணாற்றுப்படையில் பாணனது இல்லத்தில் உறையும் வறுமையின் கொடுமையை நல்லூர் நத்தத்தனார் ஓர் அழகிய ஓவியமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

""..... ....... இந்நாள்
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூமி பூத்த புழற்கா ளாம்பி
ஓங்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் வீடப்பொழிகவுள்
தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாமவன் நின்றும் வருதும்...'' (அடி.129-143)

"பிறந்து சில நாள்களேயான திறவாத கண்களை உடைய, வளைந்த செவிகளை உடைய நாய்க்குட்டி தன் தாயின் கறவாப் பால் முலையை இழுத்து பாலுண்ண முயற்சி செய்கிறது. ஆனால், ஈன்றணிமை நீங்காத தாய் நாய்க்கு உணவின்றி பால் சுரக்காததால் வலிதாங்க முடியாமல் வேதனையோடு குரைக்கிறது. கூரை கழிகள் கட்டவிழ்ந்து வீழ்கின்ற சுவரை உடைய அடுக்களையில் கூட்டமான கரையான் அரித்து ஈரமான புழுதியில் காளான்கள் பூத்துக்கிடந்து, அடுக்களையைப் பொலிவிழக்கச்செய்து கொண்டிருக்கிறது. பசியால் வாடி இளைத்த பாணன் மனைவி, ஒடுங்கிய இடையினையும் மெலிந்த கைகளையும் பெற்றிருக்கிறாள். "குப்பை' என்று ஒதுக்கப்பட்ட வேளைக் கீரையை தன் பெரிய நகத்தால் கிள்ளி, உப்புக்கும் வழியில்லாததால், கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, "வறுமையுறுதல் இயல்பு என்றுணராத அறிவற்றவர்கள் இதைக் காணக்கூடாது' என்று தன் வீட்டின் தலைவாயிலை மூடி, பசியால் வருந்தும் தம் சுற்றத்துடன் முழுதும் உண்பர்.
மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தையும் அழிக்கும் பசி என்னும் பிணி போகுமாறு நல்லியக்கோடன் யானையும் தேரும் தர, யாம் அவற்றைப்பெற்று வந்துகொண்டிருக்கிறோம். நீங்களும் அவன்பால் சென்று உங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்துவதன் மூலம் நல்லியக்கோடனின் ஈகைத்திறத்தைப் போற்றி, வறுமையின் கொடுமையைக் கண்முன் நிறுத்துகிறார் புலவர்.
பசி, பிணி, பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு (குறள்.734) என்கிறார் வள்ளுவர். இம்மூன்றும் இல்லாத நாடு எது? என்பதே பலரும் கேட்கும் கேள்வி. ஆனால், சங்க காலத்தில் பசிக்கொடுமையும் இருந்தது; அப்பசி என்னும் பிணியைப் போக்கும் மருத்துவராக அக்கால அரசர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதே ஆற்றுப்படை இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.
தகவல்: தினமணி
பாமரன்  /  at  8:49 AM  /  கருத்துரை இடுக

அன்பான விவசாயி

முன்னொரு காலத்தில் கோதை கிராமம் என்ற சிற்றூரில் கண்ணப்பன் என்ற விவசாயி இருந்தான். ஒருநாள், அன்பான விவசாயிஅவன் தன் வயலில் ஆழமாக உழுது கொண்டிருக்கும் போது அவனது ஏர் பழுதடைந்துவிட்டது.பழுதடைந்த ஏரை சரி செய்ய வேண்டி, அந்த ஊரைச் சேர்ந்த தச்சரை அணுகினான் கண்ணப்பன். தச்சரோ கண்ணப்பனிடம் ஏரை சரி செய்ய நூறு ரூபாய் வேண்டுமென்று கேட்டார்.உடனே கண்ணப்பன், தச்சரே! நானோ ஏழை விவசாயி, கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த முறை விவசாயத்தில் கிடைத்த பணத்தையெல்லாம் கொடுத்து கடனை அடைத்து விட்டேன். இப்போது என்னிடம் பணம் இல்லை. வேண்டுமென்றால் உமக்கு நெல் மணிகளைத் தருகிறேன். நீர் அதனை வாங்கிக் கொண்டு எனது ஏரை சரி செய்து கொடுங்கள்,'' என்று பணிவோடு கேட்டான். கண்ணப்பா! நெல் மணிகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும்? உன் ஏரை சரி செய்ய வேண்டுமானால் நூறு ரூபாய் பணம் கொடு. இல்லையென்றால் ஆளைவிடு! என்றார் தச்சர்.அந்த கிராமத்தில் அந்த தச்சரை விட்டால், வேறு தச்சர் இல்லை என்பது கண்ணப்பனுக்கு தெரியும். எப்படியாவது நூறு ரூபாய் கொடுத்து தன் ஏரினை சரி செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தான். உடனே தச்சரை நோக்கினான்.ஐயா தச்சரே! நீங்கள் முதலில் ஏரை சரி செய்யுங்கள். நான் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன்!'' என்று கூறியபடி சென்றான் கண்ணப்பன். அவன் எது சொன்னாலும் அதனை உடனே செய்து விடுவான் என்று தச்சருக்குத் தெரியும். எனவே, ஏரை சரி செய்யும் வேலையில் இறங்கினார். அங்கிருந்து சென்ற கண்ணப்பன் அந்த ஊர் பண்ணையார் வீட்டிற்குச் சென்றான்.வா கண்ணப்பா! எதற்காக வந்திருக்கிறாய்? என்று அன்போடு கேட்டார் பண்ணையார்.ஐயா! என்னுடைய ஏரை சரி செய்ய வேண்டும். அதற்கு நூறு ரூபாய் பணம் தேவைப்படுகிறது. உங்களிடம் இருந்து பணம் கடனாக வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன். இரண்டொரு நாட்களில் நான் உங்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவேன்!'' என்றான் கண்ணப்பன்.

கண்ணப்பா! நான் உனக்குப் பணம் கடனாகத் தர வேண்டுமானால், என் வீட்டிலிருந்து என்னுடைய அரிசி ஆலைக்கு, ஐம்பது மூட்டை நெல் சுமந்து வரவேண்டும். அப்போதும் நான் உனக்கு கடனாகத்தான் பணம் கொடுப்பேன். அந்தப் பணத்தை நீ எனக்கு திருப்பிக் கொடுத்திட வேண்டும், என்றார் பண்ணையார்.
பண்ணையாரின் வீட்டிலிருந்து அவரின் அரிசி ஆலைக்குச் செல்ல ஒரு கி.மீ., தூரம் இருக்கும். அதுவரையிலும் ஐம்பது மூட்டைகளை சுமந்து செல்ல இயலுமா?' என்று யோசித்தான் கண்ணப்பன்.எப்படியும் நமக்கு நூறு ரூபாய் தேவைப் படுகிறதே... இந்த ஊரில் வேறு யார் நமக்கு நூறு ரூபாய் கடனாகக் கொடுப்பர்? அதனால், நாம் மூட்டைகளைச் சுமந்து சென்று பண்ணையாரிடம் இருந்து நூறு ரூபாயினை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். பின்னர் நம்மிடம் இருக்கிற நெல்லைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று நூறு ரூபாய் சேர்த்து பண்ணையாருக்கு கொடுத்திட வேண்டியதுதான்' என்று மனதில் எண்ணிக் கொண்டவனாய் நெல் மூட்டைகளை சுமந்து செல்ல முடிவு செய்தான் கண்ணப்பன். உடனே அவன் பண்ணையாரை நோக்கினான். ஐயா! நான் மூட்டைகளைத் தூக்கத் தயாராக இருக்கிறேன். மூட்டை எந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மட்டும் என்னிடம் தெரியப்படுத்துங்கள்!'' என்றான்.
பண்ணையாரும் தன் வேலையாளை அழைத்து, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் செல்லுமாறு கூறினார். கண்ணப்பனும் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.அங்கிருந்த மூட்டைகள் ஒவ்வொன்றாக எடுத்து அரிசி ஆலைக்குள் கொண்டு சேர்த்தான். எப்படியாவது பண்ணையாரிடம் இருந்து நூறு ரூபாயினை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், மிகவும் சுறுசுறுப்பாக மூட்டைகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டான் கண்ணப்பன்.அரிசி ஆலைக்குச் சென்ற பண்ணையாரும், அவன் ஐம்பது மூட்டைகளைக் கொண்டு சேர்த்து விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டார். உடனே அவர் கண்ணப்பனை தன் அருகே அழைத்தார்.
கண்ணப்பா! இதோ நீ கேட்ட நூறு ரூபாய் பணம். அதோடு நீ மூட்டைத் தூக்கி வந்த கூலியும் நூறு ரூபாய் இருக்கிறது. அதோடு நான் உனக்கு வெகுமதியாக கொடுக்கிற நூறு ரூபாயும் இதில் இருக்கிறது. ஆக மொத்தம் நான் உனக்கு முன்னூறு ரூபாயினைக் கொடுக்கிறேன்,'' என்று அவன் முன்னே பணத்தை நீட்டினார்.
கண்ணப்பனோ இதனை எதிர்ப்பார்க்கவில்லை. உழைப்பை மதிக்கிற பண்ணையாரின் பண்பினைப் போற்றிப் புகழ்ந்தபடி அந்த முந்நூறு ரூபாயினை வாங்கிக் கொண்டான். பின்னர் பண்ணையாருக்கு நன்றி கூறியபடி தச்சர் வீட்டிற்குப் புறப்பட்டான்.அப்போது பண்ணையார், கண்ணப்பா! நீ ஒரே மூச்சில் ஐம்பது மூட்டைகளை சுமந்து வந்திருக்கிறாய். அதனால், உன் உடம்பு மிகவும் களைப்பாக இருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த ஆலையில் வேலை செய்பவர்களுக்குச் சாப்பாடு தயாராகும் சமையல் அறைக்குச் சென்று, உனக்கு வேண்டுமளவுக்குச் சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் இளைப்பாறி செல்!'' என்றார்.
பண்ணையர் அவ்வாறு கூறியது அவனுக்கு மேலும் வியப்பனை அளித்தது. உடனே அவன் சமையல் அறையை நோக்கிச் சென்றான். அதற்குள் அங்கிருந்த வேலையாள் ஓடோடி வந்து கண்ணப்பனை, சமையல் அறைக்கு அழைத்துச் சென்று வேண்டுமளவுக்கு உணவு கொடுத்து உபசரித்தான். கண்ணப்பன் உணவு உண்டு விட்டு, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அங்கிருந்து சென்றான்.கண்ணப்பன் வேகமாக தச்சரின் வீட்டை வந்தடைந்தான். கண்ணப்பா வா வா! சற்று நேரம் இப்படி அமர்ந்து கொள். வேறு ஒரு அவசர வேலை எனக்கு இருக்கிறது. நான் அந்த வேலையை முடித்து விட்டு பின்னர் உன் ஏரை சரி செய்து தருகிறேன்! என்றார் தச்சர்.கண்ணப்பனும் பொறுமையுடன் தச்சர் சொன்னபடியே அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். தச்சர் அவசரமாக உளியினால் ஓர் மரக்கம்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது உளி தவறுதலாக அவர் கையில் பட்டு ரத்தம் கொட்டியது.அதனைக் கண்ட கண்ணப்பனோ பதறியபடி எழுந்தான். உடனே தனது வேட்டியின் ஓரத்தை கிழித்து ரத்தம் வெளியே கொட்டாதபடி அவர் கைவிரலில் நன்றாகக் கட்டினான்.
தச்சரே! அப்படியே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் என் வீட்டிற்குச் சென்று மருந்து எடுத்து வருகிறேன். அந்த மருந்தை எடுத்துப் போட்டால் கை விரல் காயம் குணமடைந்து விடும்!'' என்று தன் வீட்டைநோக்கி ஓடினான்.
சிறிது நேரத்தில மருந்துடன் வந்தான் கண்ணப்பன். ""தச்சரே! இந்த மருந்தானது மூலிகைகளால் செய்யப்பட்டதாகும். இது விசேஷமான மருந்து. இந்த மருந்தை நீங்கள் உங்கள் கைவிரலில் போட்டுக் கொண்டால், வெட்டுப்பட்ட காயமானது எளிதில் குணமடைந்துவிடும்,'' என்றான் கண்ணப்பன்.
கண்ணப்பன் மூச்சிரைக்க ஓடி வந்து கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்ட தச்சரும், அந்த மருந்தை தனது கை விரலில் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் வலி நின்றது. கண்ணப்பன் சொன்னது போன்று அது உயர்ந்த மருந்தாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். உடனே கண்ணப்பன் தச்சரை நோக்கினான்.ஐயா! இப்போது உங்கள் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்தோடு நீங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது. எனவே, முடிந்தால் நாளை என் ஏரை சரி செய்து கொடுத்தால் போதும். நீங்கள் கேட்டபடி நூறு ரூபாய் இப்போது வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்,என்று அவர் முன்னே நூறு ரூபாயை நீட்டினான் கண்ணப்பன்.அந்த நூறு ரூபாயை பார்த்ததும் தச்சர் கண் கலங்கிவிட்டார்.
கண்ணப்பா! உன்னை நான் சாதாரண விவசாயிதானே என்று நினைத்தேன். ஆனால், உனக்குள் இருக்கும் அன்புள்ளத்தை இப்போது நான் புரிந்து கொண்டேன். என் கைவிரலில் காயம் ஏற்பட்டதற்கு துடிதுடித்து விட்டாயே; நீ அணிந்திருக்கிற வேட்டியைக் கூடக் கிழித்து என் வீரல் காயத்திற்குக் கட்டுப்போட்டாயே. அதோடு மட்டுமல்லாமல் மூச்சிரைக்க ஓடி வந்து காயத்திற்கு மருந்தும் கொடுத்தாயே...உன்னிடம் நான் எப்படி பணம் வாங்க முடியும்? என் கை விரல் சற்று ஆறியதும் உனக்கு நானே புது ஏர் ஒன்றை செய்து தருகிறேன். அதற்கு நீ பணம் கொடுக்க வேண்டாம். நீ என்னிடம் காட்டிய உள்ளன்புக்குப் பரிசாக அந்த ஏரினை நான் செய்து கொடுக்கிறேன்!'' என்றார் தச்சர்.தச்சர் இவ்வாறு கூறுவார் என்று கண்ணப்பன் சற்றும் நினைக்கவில்லை. அவன் மிகவும் மனமகிழ்ச்சியுடன் அவரிடம் இருந்து விடைபெற்று, வீட்டிற்குப் புறப்பட்டான். தச்சரும் தான் சொன்னது போலவே அவனுக்கு அழகான ஏர் ஒன்றை செய்து கொடுத்தார்.குட்டீஸ்... பொறுமையோடு உழைப்பவர்களுக்கு கடவுள் தரும் பரிசுகளை பார்த்தீர்களா?
பாமரன்  /  at  8:08 AM  /  கருத்துரை இடுக

சென்னையின் கிராம தேவதைகள்! - தினமலர் இணையதளம்

                          பழமை அடையாளங்களைத் தொலைத்துவிட்டு இன்று பரந்து விரிந்த தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை, அன்று பாரம்பரியம் மாறாத கிராமமாக இருந்தது என்பதன் அடையாளம், இன்றும் இங்கே அருள்பாலிக்கும் கிராம தெய்வங்கள்தான்.
திருவொற்றியூர், மணலி, செங்குன்றம், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி, திருவேற்காடு, மதுரவாயல், அமைந்தகரை, சேத்துப்பட்டு, பெரம்பூர், கொன்னூர், புரசைவாக்கம், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, பரங்கிமலை, நந்தம்பாக்கம், போரூர், மாங்காடு, பூந்தமல்லி என சிறு சிறு கிராமங்களாகவே அமைந்து இருந்தன. வடபழனி பகுதி புலியூர் கோட்டம் என அழைக்கப்பட்டது. புலியூர் கோட்டத்தில் வேளச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்து இருந்தன.
இந்தக் கிராமங்களுக்கு உரிய தேவதைகள் ஆங்காங்கே சிறப்புப் பெற்று இருந்தன. நாளடைவில் ஏற்பட்ட மாறுபாடுகளில் அவற்றுள் சில பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைந்துபோயின. என்றாலும் பல இடங்களில் இன்றும் கிராம தெய்வங்களே எல்லைத் தெய்வங்களாக அருளாட்சி செய்கின்றன.

தர்மராஜா கோயில்கள்: மகாபாரதத்துடன் தொடர்புடைய கதாபாத்திரங்கள் அமைந்துள்ள திருக்கோயில்கள் இவ்வகையில் அடங்கும் பெரும்பாலும் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் தர்மராஜா கோயில்கள் அமைந்துள்ளது. வருடம் தோறும் ஆடிமாதம் காப்புக் கட்டி விரதம் இருத்தல், கூழ் வார்த்தல், தீமிதி, மகாபாரதக் கதை சொல்லுதல் தர்மராஜா கோயில்களில் நடைபெறுகின்றன.
18 நாள் பாரதக் கதை விரிவுரை, காப்புக் கட்டிக் கொண்டு விரதம் இருத்தல், தீ மிதித்தல் ஆகியவை இன்றும் சில தர்மராஜா திருக்கோயில். பிருங்கிமலை என வழங்கப்பட்ட இப்பகுதியில் முன்காலத்தில் இருந்த தர்மராஜா கோயில், பின்னர் கம்பெனியாரின் ஆளுமையின் கீழ்வரப் பெற்ற பிறகு “ஆர்டிலரி’ (ஆயுதம் ஏந்திய காவலர் புழங்குமிடம்) எனப் பட்டப் பெயர் பெற்று விளங்கத் தொடங்கியது.
ஆரம்பக்காலத்தில் மரத்தாலான கிருஷ்ணன், திரௌபதி, போத்து ராஜா புறப்பாட்டுத் தெய்வங்கள் இருந்தநிலை மாறி, துப்பாக்கிக் குண்டுகளை உருவாக்கி வார்க்கப்பட்ட உலோகச் சிலைகளாக மாற்றப்பட்டு புறப்பாடு செய்யப்படுகிறது.
காலமாற்றத்தில் கருவறை, முன் மண்டபம், மகாமண்டபம், ராஜகோபுரம் என விரிவடைந்து விட்டாலும் இந்த திரௌபதி அம்மன் கோயில் இன்றும் ஆர்டிலரி தர்மராஜா கோயில் என்றே வழங்கப்படுகிறது.
சென்னையின் பழைய கிராமம் ஒவ்வொன்றுடனும் தொடர்புடையதாக அமைந்துள்ள தர்மராஜா கோயில்களே கிராம தேவதை கோயில்களாக உள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மங்களூர் ஓடு அல்லது நாட்டு ஓடு வேயப்பட்ட கோயில்கள் இருந்தன. அவை பெரும்பாலும் தற்போது கட்டட வடிவம் பெற்று, சில ராஜகோபுரம் அமைப்புடன்கூட விளங்குகின்றன.
கிருஷ்ணன் வழிபாடு பெருந்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்தாலும், கிராமங்களிலும் பஜனைக் கூடங்களாக இடம் பிடித்து உள்ளன. கருவறையில் முன்பெல்லாம் கிருஷ்ணர், ராதா-ருக்மணியுடன் இருக்கும் பெரிய தஞ்சாவூர் ஓவியம் மட்டும் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தவை இப்போது கல் விக்ரகங்களுடன், செப்பு விக்ரகங்களுடன் புதுப்பிக்கப்பட்டுவிட்டன!

பிடாரி கோயில்கள்: காளி கோயில்கள் என வழங்கப்படும் பிடாரி கோயில்கள் சென்னையில் வெகு சிலவே! இவை, நன்கு வளர்ந்த கிராமங்களின் வடபால் அமைந்தன.
இவ்வாறு அமைந்தவையே மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோயில், திருவொற்றியூர் சுந்தர காளியம்மன் கோயில், மாம்பலம் முப்பாத்தம்மன் கோயில் போன்றவை.
இதைப் போன்ற கிராம தேவதைகள் கோயில்களை கீழ்கண்ட பிரிவுகளில் அடக்கலாம்.
ஆங்காங்கே அமைந்துள்ள புற்றுக் கோயில்களாக இருந்து வளர்ச்சி பெற்றுள்ள நாகத்தம்மன் கோயில்கள், நாக கன்னியம்மன், புற்றம்மன், புட்டாலம்மன் போன்ற பெயர் பெற்றுள்ளன. திருவான்மியூரில் புற்றில் இருக்கும் கன்னியம்மன் என்பதுதான் மருவி புத்தராங்கன்னியம்மன் என்று வழங்கப்படுகிறது.
மேலும் பனையாத்தம்மன், கருக்காத்தம்மன், செல்லியம்மன் என்பவை அந்த அந்தப் பகுதிகளில் அமைந்திருந்த கிராம தேவதைகள் ஆகும்.
பனஞ்சாலைகள் இருந்த பகுதிகளில் வழிபட்டு வந்த தெய்வங்கள் பனையாத்தம்மன் என வழங்கப்பட்டது.
அடர்ந்த வனமாக, கருமையாக இருந்த கிராமப் பகுதிகளில் அமைந்த கோயில்கள் கருகாத்தம்மன் எனப்பட்டது.
“காடுகாள் செல்வி’ என இலக்கியங்களில் வழங்கப்பட்ட காளி, செல்லியம்மன் என வழங்கப்பட்ட தன்மையும் காணப்படுகிறது. இவை தவிர கிராமப் பொது தெய்வங்கள் என்ற அமைப்பின் கீழ்கண்ட தெய்வங்களையும் சேர்க்கலாம்.
பச்சையம்மன் வழிபாடு சென்னையில் பல இடங்களில் இருந்துள்ளன. திருமுல்லைவாயில், மவுண்ட்ரோடு, பாரிமுனை போன்ற பல இடங்களில் பச்சையம்மன் திருக்கோயில்கள் உள்ளன. அவை பரிணாம வளர்ச்சியில் மன்னார்சாமி, மன்னாதீஸ்வரர் என்ற பெயரில் சக்தி வழிபாட்டுடன் சைவ வழிபாட்டை தன் வயப்படுத்தியுள்ளது.
துலக்கானத்தம்மன் என்ற பெயரில் இருக்கும் காளி வழிபாடு, தமிழ் இலக்கிய மரபை ஒட்டிய வழிபாடாக அமைந்ததே ஆகும். துளிர்க்காத வனம்-பாலை நிலமாகும். பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை. துளிர்காத வனத்தம்மனே துலக்கானத்தம்மன் எனப் பெயர் பெற்றுவிட்டதைக் காண்கிறோம்.
இவை தவிர, நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து சென்னைக்கு குடியேறிய மக்கள் அவர்கள் ஊர் தெய்வத்திற்கும் இங்கு ஒரு கோயில் கட்டி, கிராம தேவதையாக வணங்கும் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர்.
மகாபலிபுரத்திற்கு அருகிலுள்ள கடும் பாடி என்னும் பகுதியில் இருந்து வந்த மக்கள், தாங்கள் குடியேறிய இடத்தில் அமைத்துக் கொண்டு வழிபட்ட தெய்வத்தை கடும்பாடியம்மன், கடும்பாடி சின்னம்மன் என்ற பெயர்களில் அழைத்தனர்.
அதேபோல் கோலூரம்மன் என்பது, வட இந்தியாவில் கோல்ஹாப்பூரில் இருந்து இங்கு வந்த தெய்வ வழிபாடாகக் கருதப்படுகிறது. கோல்ஹாப்பூர் அம்மன் என்பதே கோலூர் அம்மன் என திரிந்ததாகக் கூறுகின்றனர்.கர்னாடகா, மகாராஷ்டிராவை ஒட்டிய பகுதிகளில் வணிகர்களின் தெய்வமாக விளங்கிய நிமிஷாம்பாள் என்னும் தெய்வத்திற்கும், சென்னையில் கோயில் கட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது. போர்கள் நடைபெறும்போது பாடி வீடு அமைத்து தங்குவது மன்னர்கள் காலத்தில் இந்த வழக்கம். அவ்வாறு பாடி வீடு அமைத்து தங்கிய இடத்தில் இருந்த தெய்வம் பாடிவீட்டம்மன் என்பது நாளடைவில் படவட்டம்மன் எனப் பெயர் பெற்றிருக்கும் தன்மையை காண்கிறோம்.
ஜேஷ்டாதேவி வழிபாடு சென்னையில் வெவ்வேறு பெயர்களில் கிராம தேவதைகளாக வழங்கப்படுகிறது. நுங்கம்பாக்கத்தில் அசலாத்தம்மன் என்ற பெயரில் கிராம தேவதையாக ஆதி அம்மனாக வணங்கப்படுகிறாள். அதே போல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலின் குளக்கரையில் ஜேஷ்டாதேவி எனத் தெரியாமலே அது வணங்கப்படுகிறது.
பிராமி, வைஷ்ணவி, மாகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி, வராகி என்ற ஏழு தாய்த் தெய்வங்கள் வழிபாடும் கிராம தேவதை வழிபாடாகவே சென்னையை பொறுத்தவரை வழங்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி, ராமாபுரம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் செல்லியம்மன் என்றும், வேறு பெயர்களாலும், இவர்கள் வணங்கப்படுகிறார்கள். பெரிய கோயில்களில் திருவிழா என்றால் முதலில் இந்த தெய்வங்களுக்கு படையல் இட்டு, காப்பு கட்டும் வழக்கமும் இருந்து வருகிறது.
நீரோடு தொடர்புடைய கிராம தேவதைகளும் சென்னையில் வணங்கப்படுகிறது. கங்கையம்மன் நீரோடு தொடர்புடைய தெய்வம், சலவைத் தொழில் நீரோடு தொடர்புடைய தொழில். கங்கையம்மன் தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பதால், அவளை வணங்கும் பழக்கம் சலவை தொழிலாளர்களிடம் உள்ளது. சலவை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கங்கையம்மன் கோயிலை காணலாம். சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், போன்ற இடங்களில் கிராமதெய்வமான கங்கையம்மனுக்கு கோயில் உள்ளது.
குறிப்பிட்ட பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் தெருவில் அமைத்து கொண்ட தெய்வங்கள் வீதி அம்மன், திருவீதி அம்மன், தெரு வீதி அம்மன் எனவும் வழங்கப்பட்டன.
அங்காளபரமேஸ்வரி, மாரியம்மன், பவானியம்மன் என்னும் தெய்வங்கள் நோய் தீர்க்கும் கிராம தெய்வங்கள், இவையும் வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்ட தெய்வங்கள், எல்லம்மன் என்பது எல்லையம்மன் என மருவி அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எல்லையம்மன் தனி செய்வமாக இருந்தாலும், எல்லம்மன் என்பது நல்ல பெண் தெய்வம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தவிர மாரியம்மனே கருமாரியம்மன், எல்லமுத்து மாரியம்மன், மொண்டியம்மன் என அடைமொழி சேர்த்து சில ஊர்களில் அழைக்கப்படுகிறாள். வருடத்திற்கு ஒரு முறை அசைவ உணவு, படைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்த இந்த தெய்வங்களுள் சில தற்போது சைவத்திற்கு மாற்றம் பெற்றுள்ளன.
உள்ளூர் பூசாரியால் படையலிட்டு பூஜை செய்யப்பட்டு வந்த கிராம தேவதைகளுக்கு தற்போது வேதமுறைப்படி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதையும் காணலாம்.
கிராம தேவதைகளின் வளர்ச்சியை நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகத்தான் நாம் கருத வேண்டும்.
-இரா.இரகுநாதன்.
பாமரன்  /  at  8:03 AM  /  கருத்துரை இடுக

Saturday, July 20, 2013

அண்ணல் அம்பேத்கர்                                     நாடு சுதந்திரம் அடைந்த பின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார், அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார். "காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே" என்று செய்தியாளர் வியந்து கேட்டார்.

அவர்கள் சமுதாயம் விழித்துக்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

- விடுதலை நாளிதழ் 11-4-1992

பாமரன்  /  at  7:07 AM  /  கருத்துரை இடுக                                     நாடு சுதந்திரம் அடைந்த பின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார், அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார். "காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே" என்று செய்தியாளர் வியந்து கேட்டார்.

அவர்கள் சமுதாயம் விழித்துக்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

- விடுதலை நாளிதழ் 11-4-1992

இயல்(கள்): , , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

Tuesday, July 16, 2013

இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்

Photo: Underwater tunnel - Veluwemeer, The Netherlands
பாமரன்  /  at  8:16 PM  /  கருத்துரை இடுக

Photo: Underwater tunnel - Veluwemeer, The Netherlands

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

ஒற்றுமையே பலம்

தலைப்பைச் சேருங்கள்

பாமரன்  /  at  8:09 PM  /  கருத்துரை இடுக

தலைப்பைச் சேருங்கள்

0 கருத்து(கள்):

தஞ்சைப் பெரியக்கோயில் - பிபிசி காணொளி

இராஜராஜ சோழன்

பாமரன்  /  at  7:38 AM  /  கருத்துரை இடுக

இராஜராஜ சோழன்

இயல்(கள்): , , , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

கையின் மகிமை! - படித்ததில் பிடித்தது

கையின் மகிமை!

"டேய்...! கையைக் கொடுடா, வாழ்த்துக்கள்!"

"எதுக்கு?"

"வேலை கிடைச்சிடுச்சின்னு கேள்விப்பட்டேன்"

"ஓ.. ஆமாம். நன்றி!"

"இப்படி ஒருத்தரை ஒருத்தர் கையைப் பிடிச்சிக் குலுக்குற பழக்கம் எப்படி வந்தது தெரியுமா உனக்கு?"

"தெரியாதே.."

"அந்தக் காலத்துல வீரர்கள் எப்பவும் வாள் அல்லது துப்பாக்கியைக் கையிலே வச்சிருப்பாங்களாம், ரெண்டு பேர் சந்திக்கும் போது, 'என் கையிலே ஆயுதம் இல்லை. தாக்குவேன்னு பயம் வேண்டாம். நாம் நட்புறவுடன் இருப்போம்...' அப்படீங்கறதைத் தெரிவிக்கறதுக்காக கை கொடுத்துக்குவாங்களாம். அந்த வழக்கம் அப்படியே நிலைச்சி போச்சு"

"இது ஒரு நல்ல பழக்கம் தான். மனிதர்கள் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் அன்பா இருக்கணும்...ஆதரவா இருக்கணும். சண்டை போடுறது ரொம்பத் தப்பு. அன்பைக் காட்டறதும் கைதான், அடிக்க ஓங்குறதும் கை தன்!"

"ஆனா சில சமயங்களில் அடி, உதை உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவுறது இல்லை தெரியுமா?"

"எதை வச்சி சொல்ற"

"ஆமாம். நேத்திக்கு கூட கடைத் தெருவுல எனக்கும் இன்னொருத்தனுக்கும் பெரிய சண்டை. கடைசியில கையை ஓங்கினதும் தான் சண்டை நின்னுது"

"அப்படியா.."

"ஆமாம். ஒரே அடி, அவ்வளவு தான்."

"யாருக்கு, அவனுக்கா?"

"இல்லை...எனக்கு!"

-தென்கச்சி.
---------------------------------------------------------------------
பாமரன்  /  at  7:32 AM  /  கருத்துரை இடுக

நேதாஜீ - நினைவுகள்

அரிய புகைப்படம்.. - தேசிய தலைவர் திரு.சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு தெருவில் அழைத்துவரப்பட்ட பொழுது வீதிகளில் மக்கள் கண்ணீர்மல்க நின்று வணங்கிய போது எடுத்த புகைப்படம்.

பாமரன்  /  at  7:29 AM  /  கருத்துரை இடுக

அரிய புகைப்படம்.. - தேசிய தலைவர் திரு.சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு தெருவில் அழைத்துவரப்பட்ட பொழுது வீதிகளில் மக்கள் கண்ணீர்மல்க நின்று வணங்கிய போது எடுத்த புகைப்படம்.

இயல்(கள்): , முழுமையாக வாசிக்க தொடரவும்»

0 கருத்து(கள்):

எருமை - கழுதை - குதிரை.. எதுவாக விரும்புகிறாய்?

எருமை - கழுதை - குதிரை..
.................................................

குருகுலத்தில் ஒரு நாள் சீடன் தன் குருவிடம்,

"குருவே,

வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன்.

ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் என்ன செய்யட்டும்..?"

"மகனே..

நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்?

எருமையாகவா,

கழுதையாகவா,

இல்லை குதிரையாகவா?"

குரு கேட்டார்.

"புரியவில்லை குருவே,எனக்கு.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது, தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."

"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

புரிந்ததா,மகனே..

நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட,

நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக

மாற்றிக் கொள்ள வேண்டும்..

இதுதான் வாழ்வின் ரகசியம்.."என்றார்.

-உடுமலை.சு.தண்டபாணி 

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

...........................................................................................................................................

பாமரன்  /  at  7:23 AM  /  கருத்துரை இடுக

"பாரதி vs காந்தி" - படித்ததில் பிடித்தது

"பாரதி vs காந்தி"ஒருமுறை சென்னை கடற்கரையில் 
ஒரு பொதுக்கூட்டத்தில் இரண்டு மணி நேரம் 
அண்ணல் காந்தியடிகள் பேசினார். 

அவரைக் கண்டித்து 
பாரதியார் ஒரு கடிதம் எழுதினார்.

"Mr. Gandhi' என்று அந்தக் கடிதத்தைத் தொடங்கி, 
"நேற்று சென்னை கடற்கரை கூட்டத்தில் 
நன்றாகப் பேசினீர்கள். ஆனால், உங்கள் 
தாய்மொழியில் பேசியிருக்கலாம். 
அதை விடுத்து ஆங்கிலேயர்களை 
விரட்ட வேண்டும் என்ற 
எண்ணம் கொண்ட தாங்கள் 
ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக 
உள்ளது.' என்று கடிதத்தை முடித்திருந்தார்.

அதற்கு காந்தியடிகளின் பதில்...

"வணக்கம்.
உங்கள் கடிதத்தைப் பார்த்து 
சிந்தித்துப் பார்த்தேன். ஆங்கிலேயரை 
எதிர்க்கும் நான் ஆங்கிலத்தில் பேசியது 
தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 
மன்னிப்புக் கேட்கவும் தயார். ஆனால்,
நீங்கள் என்னைக் கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை 
ஆங்கிலத்தில் எழுதியிருப்பது
வியப்பாக உள்ளது' என்று கடிதம் எழுதினார்.

அதற்குப் பதிலாக,
"நான் யாரையும் கண்டித்துக் கேட்கும்போது 
எழுதுகின்ற கடினமான வார்த்தைகளை 
தமிழில் எழுத விரும்பவில்லை. 
அதனால்தான் 
ஆங்கிலத்தில் எழுதினேன்' என்று மகாத்மா காந்திக்கு
பதில் கடிதம் எழுதியிருந்தார் பாரதியார்.                  ஒருமுறை சென்னை கடற்கரையில் 

பதில் கடிதம் எழுதியிருந்தார் பாரதியார்.
பாமரன்  /  at  7:20 AM  /  கருத்துரை இடுக

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.